India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"பொருளாளர்" இவராமே.. 2 புள்ளிகள்.. கையை பிசையும் எடப்பாடி பழனிசாமி.. "அங்கே" தாவ தயாராகும் "தலை"கள்

Google Oneindia Tamil News

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய கலக்கம் ஒன்று சூழ்ந்துள்ளது.. அதற்கு காரணம் ஓபிஎஸ்ஸோ, சசிகலாவோ, தினகரனோ, ஏன் ஸ்டாலின்கூட இல்லை.. கூடவே நெருங்கி இருக்கும் அவரது ஆதரவாளர்கள்தான்..!

கடந்த வாரம் வரை அதிமுகவில் இருந்த நிலைமை வேறு.. இந்த வாரம் அதிமுகவில் இருக்கும் நிலைமை வேறு.. ஆதரவாளர்கள் மொத்தமாக தனக்கு சப்போர்ட்டுக்கு உள்ள நிலையில், ஓபிஎஸ்ஸை பல்வேறு வகைகளில் நிராகரித்தது எடப்பாடி டீம்.

மானத்தை பற்றி கவலைப்படாத மனிதர்கள் விமர்சனங்களை மதிக்க மாட்டேன்: கரூர் கூட்டத்தில் ஸ்டாலின் விளாசல் மானத்தை பற்றி கவலைப்படாத மனிதர்கள் விமர்சனங்களை மதிக்க மாட்டேன்: கரூர் கூட்டத்தில் ஸ்டாலின் விளாசல்

ஓபிஎஸ் அரசியல் வாழ்வு இதோடு அவ்வளவுதான், ஓரங்கட்டப்பட்டு விட்டார் என்றே கூட சிலரால் கருதப்பட்டது.. ஆனால், திடீரென வேறு ரூட்டில் டிராவல் ஆக ஆரம்பித்துள்ளது அதிமுக.

வானகரம்

வானகரம்

கட்சிக்குள் மட்டுமே இதுவரை வாதங்களாக நடந்து வந்த விஷயம், இப்போது சட்டரீதியாகவும் விஸ்வரூபமெடுத்துள்ளது.... இதனிடையே, அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம், 11ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த எதிர்பார்ப்புகள் எகிறி வருகின்றன. இந்த கூட்டத்தை வேறு இடத்தில் நடத்த முடிவு செய்து, அதற்காக பல இடங்களையும் பார்த்தனர்.. ஆனால், கடைசியில், வானகரம் திருமண மண்டபத்திலேயே நடத்த, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முடிவு செய்தனர்.. ஆனால், இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோர்ட்டுக்கு சென்றனர்..

 எடப்பாடிக்கு குழப்பம்

எடப்பாடிக்கு குழப்பம்

எப்போது சட்ட ரீதியான நடவடிக்கையை ஓபிஎஸ் கையில் எடுத்தாரோ, அப்போதே எடப்பாடிக்கு பெரும் சிக்கலையே அது ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது.. ஒருவேளை அதையும் மீறி, திட்டமிட்டபடி பொதுக்குழு நடந்தால், ஓபிஎஸ்ஸிடம் உள்ள பொருளாளர் பதவியும் பறிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. அதேசமயம், பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி, தற்காலிக பொதுச்செயலராக பழனிசாமியை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சீனியர்கள்

சீனியர்கள்

அப்படி, பொதுக்குழுவில் ஓபிஎஸ்ஸின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டால், அதற்கு சில சீனியர்கள் இப்போதே துண்டை விரித்து காத்துள்ளனர்.. இதற்கு காரணம், பொதுச்செயலாளர் பதவிக்கு அடுத்து, அதிகம் அதிகாரமும், செல்வாக்கும் படைத்தது பொருளாளர் பதவியே ஆகும்.. அறக்கட்டளைகள் மற்றும் கட்சி வரவு செலவுகளை கவனிக்க வேண்டிய துறையும் இதுவாகும்.. அதனாலேயே இந்த பதவிக்கு கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது..

 சீனியர்கள்

சீனியர்கள்

தனக்கு ஆதரவாக பெருமளவில் திரண்டு நிற்கும் அனைத்து சீனியர்களுமே, இந்த பொருளாளர் பதவியை கேட்டு வருகிறார்கள்.. எல்லாருமே தனக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதால், யாருக்கு அந்த பதவியை தருவது என்ற குழப்பம் எடப்பாடிக்கு ஏற்பட்டு வருகிறதாம்.. ஒருவருக்கு பதவி தந்தால், மற்றவர்களை எப்படி சமாளிப்பது, வேறு கட்சிக்கு தாவி விடுவார்களோ? அல்லது ஓபிஎஸ் பக்கம் சென்றுவிடுவார்களோ? என்று கையை பிசைந்து நிற்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.

 செம்மலை

செம்மலை

ஏற்கனவே இப்படித்தான், ராஜ்யசபா பதவிக்காக, ஏராளமான சீனியர்கள் காத்து கிடந்தனர்.. இருக்கிற 2 சீட்டை யாருக்கு தருவது என்று 10 நாட்களாக மண்டையை பிய்த்து கொண்டு, கடைசியில் பெயர்களை அறிவித்தனர்.. இதற்கே பல சீனியர்கள் வருத்தப்பட்டார்கள்.. இதில், ஜெயக்குமாரை எடப்பாடி லேசில் விட்டுவிடமாட்டார் என்றே தெரிகிறது.. அவருக்கு ஏதாவது ஒரு பதவியை தந்து பக்கத்திலேயே வைத்து கொள்வார் என்பதிலும் சந்தேகமில்லை.. ஆனால், செம்மலை போன்ற சீனியர்கள் நிலைமைதான் பரிதாபம்.. அந்த நிகழ்வுக்கு பிறகு அதிருப்திக்கு ஆளானவர்கள் சத்தமே இன்றி உள்ளனர்.

சசிகலா

சசிகலா

இவர்கள் எல்லாம் எந்நேரமும் சசிகலா பக்கம் தாவுவார்கள் என்று கருதப்பட்டது.. காரணம், ஓபிஎஸ் விவகாரம் அந்த சமயம் தலைதூக்கவில்லை.. இப்போது ஓபிஎஸ்ஸும், எடப்பாடிக்கு எதிராக உள்ளதால், எடப்பாடிக்கு இரட்டிப்பு பயம் சூழ்ந்துள்ளது.. பெரும்பாலானோர் சீனியர் என்பதால், ஒருவருக்கு சீட் தந்தாலும், மற்ற சீனியர்களால், பொதுச்செயலாளர் பதவிக்கே சிக்கல் வந்துவிடும் என்பது எடப்பாடிக்கு தெரியாமல் இல்லை.. ஆனாலும், தனக்கு அடுத்தபடியாக அதிகாரத்தில் உள்ள பதவி என்பதால், அதை யாருக்கு கொடுத்தால் சரியாக இருக்கும் என்று யோசிப்பதிலேயே திணறிப்போயுள்ளராம் எடப்பாடி..

 முனுசாமி

முனுசாமி

இந்த பொருளாளர் பதவிக்கு கிட்டத்தட்ட 10 பேர் துண்டு விரித்துள்ள நிலையில், இதில் 2 பேர் மட்டும் பிரதானமாக இருக்கிறார்களாம்.. ஒருவர் கே.பி.முனுசாமி மற்றொருவர் எஸ்.பி.வேலுமணி.. இந்த இருவரில் ஒருவருக்குதான் அதிமுக பொருளாளர் பதவி கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.. இவர்கள் 2 பேரையுமே பகைத்து கொண்டு எடப்பாடியால் அரசியல் செய்ய முடியாது என்றாலும், இதில், யாருக்கு இந்த பதவி போக போகிறது என்பதே மில்லியன் டாலர் குழப்பம்.. அப்படியே இந்த 2 பேரை சரிக்கட்டினாலும், அதிருப்திக்கும், ஏமாற்றத்துக்கும் உள்ளாகும் மற்ற "தலை"களின் நிலைமை?!

English summary
Who will be the next treasurer of AIADMK and What decision is edapadi palanisamy going to take அதிமுகவின் அடுத்த பொருளாளர் யார் என்பதில் எடப்பாடி பழனிசாமிக்கு குழப்பம் நீடிக்கிறது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X