சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னதாங்க நடக்குது? அவரே தூது சென்றும் சரியாகவில்லை.. உறுதியாக நிற்கும் ஓபிஎஸ்.. எகிறும் டென்சன்!1

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் தேர்தல் தோல்விக்கு பின் என்னென்னவோ நடப்பதாக தகவல்கள் வருகின்றன.. எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் கூட கட்சிக்குள் சின்ன சின்ன மனஸ்தாபங்கள், மோதல்கள் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

தமிழக சட்டசபையில் அதிமுகவில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை தேர்வு செய்வதில் பிரச்சனை நிலவுவதாக நேற்றே செய்திகள் வந்தன. எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக தகவல்கள் வந்தன.

 அடுத்த அதிர்ச்சி.. அரைமணி நேரத்துக்கு ஒருவர் அடுத்தடுத்து பலி.. திருப்பத்தூர் ஜி.ஹெச் 'திக்திக்' அடுத்த அதிர்ச்சி.. அரைமணி நேரத்துக்கு ஒருவர் அடுத்தடுத்து பலி.. திருப்பத்தூர் ஜி.ஹெச் 'திக்திக்'

நிலைமை இப்படி இருக்க நேற்று இதற்காக நடந்த போன் கால் மீட்டிங்கும் ஒன்றும் பிரச்னையை சரி செய்யவில்லை என்கிறார்கள். அதிமுகவில் அப்படி என்னதான் நடக்கிறது?

மீட்டிங்

மீட்டிங்

அதிமுகவில் எதிர்கட்சித் தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக இரண்டு நாட்களாக ஆலோசனை நடந்து வருகின்றன. இதில் எதிர்கட்சித் தலைவர் பதவியை இபிஎஸ் ஒரு பக்கம் கேட்கிறார். இன்னொரு பக்கம் ஓபிஎஸ்ஸும் கேட்கிறார். இதெல்லாம் போக புது தகவலாக வேறு ஒரு மூத்த, முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சித் தலைவர் பதவி வேண்டும் என்கிறாராம்.

ஆதரவு

ஆதரவு

இதில் குழப்பம் என்னவென்றால் கிட்டத்தட்ட மூன்று தலைவர்களுக்குமே கட்சிக்குள் சமமான ஆதரவு இருக்கிறதாம்.. நீங்களே எதிர்க்கட்சி தலைவர் ஆகிவிடுங்கள் என்று மூன்று பேருக்குமே எம்எல்ஏக்கள் பலர் ஆதரவு தருகிறார்களாம். இதுதான் தற்போது எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட காரணம்,

கொங்கு

கொங்கு

கொங்கில் அதிமுக நன்றாக செயல்பட்டதை வைத்து இபிஎஸ் எதிர்க்கட்சி போஸ்டிங் கேட்பதாகவும், முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்ததை சுட்டிக்காட்டி ஓபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர் போஸ்டிங் கேட்பதாகவும் கூறுகிறார்கள். அந்த முன்னாள் அமைச்சரோ, கட்சியில் நான் எதிர்க்கட்சி தலைவர் ஆனால், எல்லோரும் ஒற்றுமையாக இருக்கலாம், கோஷ்டி மோதல் இருக்காது என்று கூறுகிறாராம்.

தூது

தூது

அதோடு அமமுகவை தங்கள் பக்கம் இழுக்க நான் உதவுகிறேன் என்றும் அந்த முன்னாள் அமைச்சர் சொல்லி, எதிர்க்கட்சி போஸ்டிங் கேட்கிறாராம். இதில் ஓபிஎஸ் மற்றும் அந்த முன்னாள் அமைச்சருக்கு இபிஎஸ் சார்பாக தூதும் சென்று இருக்கிறது. அதிலும் ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கமாக இருக்கும் ஒருவர் கூட தூது சென்று இருக்கிறாராம்.

ஆனால் இல்லை

ஆனால் இல்லை

ஆனால் இதுவரை நடந்த மீட்டிங்குகள், தூதுகள் எதிலும் சுமுக முடிவு எடுக்கப்படவில்லையாம். யார்தான் எதிர்கட்சித் தலைவர், யாருக்குத்தான் இந்த வாய்ப்பு கிடைக்கும் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. ஆனால் அதிமுக எப்படியும் மோதல்களை சமாளித்து, முதல் சட்டசபை கூட்டத்திற்கு முன் எதிர்கட்சித் தலைவரை தேர்வு செய்துவிடும் என்கிறார்கள்.

English summary
Who will be the opponent leader in Tamilnadu? Confusion between OPS, EPS and other leaders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X