சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் யார்.. கடும் போட்டியில் 6 தலைவர்கள்.. அதில் 2 பேருக்கு அதிக வாயப்பு!

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக பாஜகவுக்கு அடுத்த தலைவர் யார்.. கடும் போட்டியில் 6 தலைவர்கள்

    சென்னை: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதால் புதிய பாஜக தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது.

    புதிய தலைவராக நியமிக்கப்பட பொன் ராதா கிருஷ்ணன் அல்லது எச். ராஜா ஆகியோருக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக பாஜக வட்டாரத்தில்.சொல்கிறார்கள்

    கடந்த 2014ம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சர் பதவி ஏற்றார். இதையடுத்து பாஜகவின் புதிய தலைவராக தமிழிசை சௌந்திரராஜன் நியமனம் செய்யப்பட்டார்.

    ஆணாதிக்க அரசியலில் ஜெயலலிதாவுக்கு பிறகு ஜொலித்த மற்றொரு அழகு நட்சத்திரம் தமிழிசைஆணாதிக்க அரசியலில் ஜெயலலிதாவுக்கு பிறகு ஜொலித்த மற்றொரு அழகு நட்சத்திரம் தமிழிசை

    வெற்றிகள் இல்லை

    வெற்றிகள் இல்லை

    கடந்த ஆறு ஆண்டுகளாக பாஜக மாநில தலைவராக தமிழிசை சௌந்திரராஜன் பணியாற்றினார். தமிழிசை பாஜக தலைவராக மாறிய பின்னர் தமிழகத்தில் பாஜக எந்த தேர்தலிலும் வெற்றியும் பெறவில்லை என விமர்சனங்களும் எழுந்தன. இதனால் தமிழிசை மாற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் வரும் டிசம்பரில் புதிய தலைவர் யார் என்பதை தேர்ந்தெடுக்க பாஜகவின் உள் கட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    புதிய தலைவர் நியமனம்

    புதிய தலைவர் நியமனம்

    இந்த சூழலில் தான் பாஜக தலைவர் தமிழிசை தெலுங்கானா மாநில ஆளுநராக மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் புதிய தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார் என தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று பேட்டி அளித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    ஹெச் ராஜா- பொன் ராதா

    ஹெச் ராஜா- பொன் ராதா

    தற்போது பாஜக தலைவர் பதவிக்கான போட்டியில் பலர் உள்ளார்கள். முன்னாள் தலைவராக இருந்த பொன், ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் எச். ராஜா, சி.பி ராதா கிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன், சந்திரசேகர் உள்ளிட்டோர் போட்டியில் இருக்கிறார்கள். இதில் புதிய தலைவராக நியமிக்கப்பட பொன் ராதா கிருஷ்ணன் அல்லது எச். ராஜா ஆகியோருக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக பாஜக வட்டாரத்தில்.சொல்கிறார்கள்.

     அரவணைத்து செல்லும் தலைவர்

    அரவணைத்து செல்லும் தலைவர்

    ஆனால் டெல்லி மேலிடம் என்ன முடிவு எடுக்கும் என்பது தான் பெரும் எதிர்பாரப்பு நிலவுகிறது. ஏனெனில் தமிழகத்தில் பெரிய அளவில் பாஜகவை வளர்க்க வேண்டும். 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கணிசமான இடங்களில் வெல்ல வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கு ஏற்ற வகையில் எல்லோரையும் அரவணைத்து செல்லும் ஒருவரை தலைவராக தேர்வு செய்யும் என கூறப்படுகிறது.

    English summary
    who is new bjp leader in tamilnadu, heavy compettion between Pon Radha Krishnan, H. Raja, CP Radha Krishnan, Vanathi Srinivasan, Nainar Nagendran, Chandrasekhar . delhi will decide the leader of tn bjp.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X