சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லெப்ட்ல எடப்பாடியார்.. ரைட்ல மு.க.ஸ்டாலின்.. நட்ட நடுவே பிக் பாஸ்.. கமல் வச்சு செய்ய போவது யாரை!

யாரை தட்டிக் கேட்க போகிறார் கமல் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: "தப்புன்னா தட்டி கேட்பேன், நல்லதுனா தட்டி கொடுப்பேன்" என்று பிக்பாஸில் என்ட்ரி போட்டுள்ளார் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்.. ஆக.. வரப்போகிற தேர்தலுக்கான எதிர்பார்ப்பை இங்கிருந்தே தொடங்க ஆரம்பித்துள்ளது!

லாக்டவுன் என்றாலும் கமல் வீட்டில் உட்கார்ந்து கொண்டே பல அரசியல் விஷயங்களை பேசி கொண்டிருந்தார்.. ட்வீட்களை போட்டு கேள்விகளாக எழுப்பினார்.. தொற்று குறித்த விழிப்புணர்வுகளையும் சொல்லி கொண்டே இருந்தார்.

இந்த சமயத்தில் பிக்பாஸ் புரொமோ வெளியாகி உள்ளது.. "சொன்னபடி கேளு" என்று பாட்டுடன் அந்த டீசர் ஆரம்பமாகும்போதே, என்னத்த சொல்ல போகிறாரோ என்று டென்ஷன் தமிழக கட்சிகளுக்கு எகிற ஆரம்பித்தது.. "தப்புன்னா தட்டி கேட்பேன், நல்லதுனா தட்டி கொடுப்பேன்" என்று கமல் ஒரு பஞ்ச் பஞ்ச் வைக்கிறார்.. அந்த புள்ளியில் இருந்தே பரபரப்பு தொடங்கிவிட்டது.

பி.இ அரியர் தேர்வுகளை ரத்து செய்தது ஏற்க முடியாது - ஏஐசிடிஇ எழுதிய கடிதம் வெளியானதுபி.இ அரியர் தேர்வுகளை ரத்து செய்தது ஏற்க முடியாது - ஏஐசிடிஇ எழுதிய கடிதம் வெளியானது

திமுக

திமுக

அதிமுக, திமுக உட்பட கிட்டத்தட்ட எல்லாருமே தேர்தல் வியூகங்களில் இறங்கிவிட்டனர்.. கூட்டணி குறித்த பேச்சும் ஆரம்பமாகி உள்ளது.. ஆனால் மநீம மட்டும் சத்தமே இல்லாமல் இருந்தது.. நடந்து முடிந்த சில தேர்தல்களில் மநீம போட்டியிடாததால், இந்த முறை அக்கட்சியின் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

 3வது அணி

3வது அணி

அதுமட்டுமில்லை, அதிமுக, திமுக இல்லாமல் மாற்று என்றால், கமல் ஒருவேளை 3வது அணியை உருவாக்குவாரா? கமல் தலைமையில் அந்த 3வது அணி இருக்குமோ? கம்யூனிஸ்ட், விசிக, ரஜினி என எல்லோருமே கமலின் தலைமையில் அணி திரள்வார்களா? என்ற பேச்சு சில தினங்களாகவே அடிபடுகிறது..

 சீசன்

சீசன்

இந்த சமயத்தில்தான், பிக்பாஸ் சீசன் தொடங்கி உள்ளது.. வழக்கமாக ஜுன் மாசமே தொடங்கிவிடும் பிக்பாஸ் இப்போது லாக்டவுனால் லேட்டாக தொடங்கி உள்ளது.. எனினும் இதை தனக்கு சாதமாகவே கமல் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். சென்ற முறையும் இப்படித்தான் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கமல் ஏற்படுத்தினார்.

சாக்கடை

சாக்கடை

"நல்ல நாட்டை பார்த்தால் கோபம்... நம் நாடு இப்படி இல்லையே என்ற கோபம்....எனது நாட்டை பார்த்தாலும் கோபம்...ஏனென்றால், நம் நாட்டை இப்படி ஆக்கிவிட்டார்களே என்ற கோபம்.. ஷவரில் குளிப்பவர்களை பார்த்தாலே கோபம்... சாக்கடையில் தண்ணீர் கலப்பதைக் கண்டாலே கோபம்.. மாற்றம் வேண்டுமென்றாலும் கோபம்... அந்த மாற்றம் மய்யப்புள்ளியிலிருந்து தான் தோன்றும். அதனால் தான் நான் பாரதி சொன்னது போல் ரௌத்திரம் பழகிக் கொண்டிருக்கிறேன்" என்று சொன்னபோது தமிழ்நாடே ஆடிப்போய்விட்டது.

 மய்ய உறுப்பினர்கள்

மய்ய உறுப்பினர்கள்

மற்ற மாநிலங்களிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தி கொண்டுதான் இருக்கிறார்கள்.. ஆனால் கமல் போல யாரும் இப்படி கலக்கலுடன், தில்லுடன், அரசியல் பாயிண்ட்டுகளை பேசி நடத்துவதில்லை.. கமல் கட்சி ஆரம்பித்ததுமே இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்படி பேசுவது அவரது மய்ய உறுப்பினர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.. அதேசமயம், ஒரு டிவி ஷோ-வை தன்னுடைய அரசியல் பிரச்சாரத்துக்கு உபயோகத்துப்படுத்துவதா? என்ற எதிர்தரப்பு விமர்சனங்களும் எழ ஆரம்பித்தன.. இருந்தாலும், இந்த சீசன்வரை கமல், தன்னுடைய வழக்கத்தை மாற்றி கொள்ளவில்லை.

 அமித்ஷா

அமித்ஷா

"தப்புன்னா தட்டி கேட்பேன்" என்று புரொமோவில் சொல்லும்போதே அரசியல் களம் கலகலத்தது.. சு.சாமி முதல் அமித்ஷா வரை துணிந்து கேள்வி கேட்டது கமல் மட்டுமே.. "அவர் யாருக்கும் இதுவரை பயந்தது இல்லை.. ஏனென்றால், எங்களிடம் ஊழல் இல்லை... எந்த தப்பும் செய்யவில்லை.. மாறறத்தை எங்களிடம் எதிர்பார்க்கிறர்கள் மக்கள்.. அதற்கான கள வேலைகளை நாங்கள் எப்போதோ ஆரம்பித்துவிட்டோம்.. அதனால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலர் முகமூடி கிழிவது நிச்சயம்" என்கிறார்கள் மய்ய உறுப்பினர்கள்.

 செலவுகள்

செலவுகள்

அதுமட்டுமில்லை, கமல் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதும், மற்ற படங்களில் நடிப்பது என எல்லாமே கட்சியின் செலவுக்காகத்தானாம்.. எப்படியும் தேர்தலுக்கு செலவுக்கு பணம் தேவைப்படும் என்பதால் இப்படி இரவு பகலாக படங்களில் நடித்து வருகிறார்.. இந்தியன் 2 உட்பட நடிக்க போகும் 2 படமும் அரசியலின் மாற்றத்துக்கான படம்தான் என்கிறார்கள்.

 கேள்விக்கணைகள்

கேள்விக்கணைகள்

கமலுக்கு இன்னொரு பிளஸ்ஸும் சேர்ந்துள்ளது.. எந்த அரசியல் கட்சிக்குமே பிரச்சாரம் செய்ய, கூட்டம் போட, தற்போது தமிழகத்தில் தடை போடப்பட்டுள்ளது.. இதனால் திமுக கூடாரமே தடுமாறி உள்ளது.. இப்படிப்பட்ட கொரோனானா சமயத்திலும், டிவி ஷோவை அரசியல் மேடையாக்கும் வாய்ப்பு கமலுக்கு கிடைத்துள்ளது... பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.. அதனால் கமல் எது பேசினாலும், அப்படியே மக்கள் மனசில் பச்செக்கென ஒட்டிக் கொள்ள நிறைய வாய்ப்பு உள்ளது.

அரசியல்

அரசியல்

தன்னுடைய கருத்துக்களை கமல் ஆணித்தரமாக எடுத்து வைத்தாலும் அதையும் யாராலும் தடுக்க முடியாது.. மக்களுக்கான, மாற்றத்துக்கான வலிய விஷயத்தை சொன்னாலும், அதையும் யாராலும் தடுக்க முடியாது.. அதனால் எப்படி பார்த்தாலும், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது எடப்பாடியா? ஸ்டாலினா? கமலா? என்ற ரீதியிலேயே அமையும் என்று தெரிகிறது.

English summary
Who will face the heat of Bigg Boss Kamal?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X