சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

28 ஆண்டுகளுக்கு பிறகு போட்டியிடும் திமுக.. தென்காசியை தன்வசமாக்கிக் கொள்ளுமா திமுக?

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Election 2019 :Tenkasi Constituency |தென்காசி தொகுதியின் களநிலவரம்- வீடியோ

    சென்னை: தென்காசியில் மும்முனை போட்டி நிலவிவருவதால் அங்கு எந்த வேட்பாளர் வெற்றி பெறுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    தென்காசி மக்களவை தொகுதியில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி ஆகிய 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.

    இந்த தொகுதிக்கு வரும் ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் கூட்டணி கட்சியான புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும், திமுக சார்பில் தனுஷ் குமாரும், அமமுக சார்பில் பொன்னுதாயும் போட்டியிடுகின்றனர்.

    இத்தனை கோடியா? தமிழகத்தில் தேர்தலில் போட்டியிடும் பணக்கார அரசியல்வாதி யார் தெரியுமா?இத்தனை கோடியா? தமிழகத்தில் தேர்தலில் போட்டியிடும் பணக்கார அரசியல்வாதி யார் தெரியுமா?

    தோல்வி

    தோல்வி

    இந்த தொகுதியில் எப்படியாவது போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என 3 கட்சிகளும் போராடி வருகின்றன. அதிலும் திமுக அதிகமாகவே மெனக்கடல் செய்கிறது. காரணம் 1991-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அருணாசலத்தை எதிர்த்து திமுக சார்பில் பிறகு சதன் திருமலைக்குமார் என்பவர் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

     காங்கிரஸ் ஆதரவு

    காங்கிரஸ் ஆதரவு

    இதையடுத்து அந்த தொகுதியில் இதுவரை திமுக போட்டியிடாமல் தனது கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு அளித்து வந்தது. இதனால் இது காங்கிரஸின் கோட்டையாக கருதப்படுகிறது. இந்த தொகுதியில் காங்கிரஸ் ஆதரவுடன் 28 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் தனுஷ்குமாருக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது.

     கிருஷ்ணசாமி போட்டி

    கிருஷ்ணசாமி போட்டி

    அது போல் இந்த தொகுதியில் அதிமுக 3 முறை வெற்றி பெற்றுள்ளது. இங்கு அதன் கூட்டணி கட்சித் தலைவராக டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். இவர் ஏற்கெனவே கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் வசந்தியிடம் தோல்வி அடைந்தார். தற்போது அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளதால் இவருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவே கருதப்படுகிறது. எனினும் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என தெரிகிறது.

     4 பேர் வேட்புமனுத்தாக்கல்

    4 பேர் வேட்புமனுத்தாக்கல்

    தேவேந்திர குல வேளாளர்கள் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் அந்த வாக்குகளை பிரிப்பதற்காக கணக்கு போட்டு தினகரன், அமமுக சார்பில் பொன்னுதாய் என்பவரை நிறுத்தியுள்ளார். ஆனால் பொன்னுத்தாய்க்கு ஒரு சோதனை வந்துவிட்டது. பொன்னுதாய் என்ற பெயரில் மொத்தம் 4 பேர் வேட்புமனுதாக்கல் செய்துள்ளனர்.

     யாருக்கு வெற்றியோ?

    யாருக்கு வெற்றியோ?

    அதில் ஒரு பொன்னுத்தாய் அமமுக சார்பிலும் மற்ற மூவரான கோ. பொன்னுத்தாய், ம.பொன்னுத்தாய், மா.பொன்னுத்தாய் ஆகிய 3 வேட்பாளர்கள் ஆகியோர் சுயேச்சையாகவும் போட்டியிடுகின்றனர். எனவே இந்த மூன்று கட்சி வேட்பாளர்களில் தென்காசியை தன் வசப்படுத்திக் கொள்ள போவது யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English summary
    There is a 3 way challenge in Tenkasi Loksabha constituency. DMK is contesting after 28 years.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X