சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தூத்துக்குடி வெற்றிக்"கனி" யாருக்கு? "மொழி"க்கா.. "இசை"க்கா... குமரி அனந்தன் கலகல பதில்!

Google Oneindia Tamil News

Recommended Video

    தூத்துக்குடியை வலம் வரும் கனிமொழி- வீடியோ

    சென்னை: தூத்துக்குடி தொகுதியில் வெல்லப்போவது தன்னுடைய மகள் தமிழிசையா அல்லது மறைந்த திமுக தலைவர் மகள் கனிமொழியா, என்பது குறித்த கேள்விக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என பதில் அளித்தார்.

    தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என அனைத்து கட்சிகளுமே தங்கள் கட்சியின் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டன.

    Who will win the tuticorin? tamilisai or kanimozhi : Kumari Ananthan replied

    தூத்துக்குடியில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தனின் மகள் தமிழிசை சௌந்திரராஜன், பாஜக சார்பில் போட்டியிடுகிறார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, காங்கிரஸ்-திமுக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். இரண்டு பெண் நட்சத்திர வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால் தூத்துக்குடி தொகுதி மீது அனைவரது கவனமும் திரும்பியுள்ளது.

    டி ஆர் பாலு ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர்: மீண்டும் வெற்றி வசமாகுமா?டி ஆர் பாலு ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர்: மீண்டும் வெற்றி வசமாகுமா?

    இந்நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனனுக்கு நேற்று வந்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனிடம் தூத்துக்குடியில் உங்கள் கூட்டணி சார்பில் போட்டியிடும் கனிமொழியை ஆதரித்து பிரசாரம் செய்வீர்களா? அல்லது பாஜக சார்பில் போட்டியிடும் உங்கள் மகள் தமிழிசையை ஆதரித்து பிரசாரம் செய்வீர்களா? கனிமொழி
    தூத்துக்குடியில் ஜெயிப்பார் என நம்புகிறீர்களா? என எக்குத்தப்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

    அதற்கு பதில் அளித்து பேசிய குமரி அனந்தன், "திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெல்லும். இருப்பினும் யார் யார் வெல்வார்கள் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்றார்.

    English summary
    who will win the tuticorin? tamilisai or kanimozhi : Kumari Ananthan replied
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X