சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுபஶ்ரீயை பலிகொண்டது யார்? டிரெண்டிங்கான ஹேஷ்டேக்குகள் #WhoKilledShubashree

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை இளம்பெண் சுபஶ்ரீயை பலி கொண்டது யார் என்பது குறித்து ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கானது.

சென்னையில் அதிமுக பிரமுகர் வைத்த பேனர் விழுந்து இருசக்கர வாகனத்தில் சென்ற 23 வயது இளம்பெண் சுபஶ்ரீ உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#WhoKilledShubashree trending in Social Media

இது தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியான கேள்விகளைக் கேட்டு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. பேனர்களை அகற்றாத அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்வதுடன் அவர்களிடமே சுபஶ்ரீ குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ5 லட்சம் பெற்றுத்தரவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

ஒரே செகண்ட்தான்.. சுபஸ்ரீயின் உயிரை பறித்த பேனரும்.. தண்ணி லாரியும்.. வெளியானது சிசிடிவி காட்சிகள்ஒரே செகண்ட்தான்.. சுபஸ்ரீயின் உயிரை பறித்த பேனரும்.. தண்ணி லாரியும்.. வெளியானது சிசிடிவி காட்சிகள்

இதனிடையே சுபஶ்ரீ மரணம் தொடர்பாக #WhoKilledShubashree #BannerkilledSubhasree #BannerKillings #BannerDeath #WhoKilledShubashree #WhoKilledShubashree helmet ஆகிய ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் வைரலானது. சுபஶ்ரீ ஹெல்மெட் அணிந்து சென்ற போதும் மரணித்திருக்கிறார்.

இதனால் ஹெல்மெட் உயிரை பாதுகாக்கும் என்ற வாசகம் கேள்விக்குறியாகி உள்ளது. இதுவும் டிரெண்டிங்கான ஹேஷ்டேக்குகளில் ஒன்று. பேனர்கள் மீதான சமூகத்தின் பெருங்கோபத்தையே இந்த ஹேஷ்டேக்குகளின் டிரெண்ட்டிங்குகள் வெளிப்படுத்தி இருக்கின்றன.

English summary
#WhoKilledShubashree #BannerkilledSubhasree #BannerKillings #BannerDeath #WhoKilledShubashree #WhoKilledShubashree helmet are trending in Social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X