சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது அடாவடி.. சென்னை சிட்டி எல்லைக்குள் டோல் கேட்.. வாகன ஓட்டிகள் குமுறல்.. அரசு நடவடிக்கை அவசர தேவை

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை சிட்டி எல்லைக்குள் டோல் கேட்.. வாகன ஓட்டிகள் குமுறல்

    சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், டோல்கேட் அமைக்கப்பட்டு தாறுமாறாக கட்டணம் வசூலிக்கப்படுவது பொதுமக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட மாத்தூர் மஞ்சபாக்கம் பகுதியில், எண்ணூர் துறைமுக சாலையில் இப்படி ஒரு டோல்கேட் உள்ளது. 2018 அக்டோபர் முதல் இந்த 28 கி.மீ தூர சாலை மாநில நெடுஞ்சாலைதுறையால் பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் இந்த சாலை ஒப்படைக்கப்பட்டது.

    ஆனால், இந்த சாலையில் சுங்கச் சாவடி அமைத்து, கட்டணம் வசூலிக்க, ரித்தி சித்தி அசோசியேஷன் என்ற தனியார் நிறுவனத்திற்கு, ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

    மாநகராட்சி எல்லைக்குள்

    மாநகராட்சி எல்லைக்குள்

    இந்த சுங்கச் சாவடியில், கார், ஜீப், வேனுக்கு ரூ.35, உள்ளூர் வாகனங்களுக்கு 15, கன ரக வாகனங்களுக்கு 180 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி எலலைக்குள்ளாகவோ அல்லது, ஒரு சுங்கச் சாவடிக்கு 20 கிமீ தூரத்திற்கு உள்ளேயோ, வேறு சுங்க சாவடி அமைக்க கூடாது என்பது விதிமுறை. ஆனால், மாநகராட்சி எல்லைக்குள்ளேயே இப்படி ஒரு சுங்கச் சாவடியை அமைக்கு, மக்கள் பணத்தை பறிக்கிறார்கள் என குமுறுகிறார்கள் சென்னை மக்கள். அதிலும் குறிப்பாக இந்த ஏரியா மக்கள்.

    பாஸ்டேக் பஞ்சாயத்து வேற

    பாஸ்டேக் பஞ்சாயத்து வேற

    இந்த நிலையில்தான், இந்த சாலையை கடக்கும் வாகனங்களுக்கு, பாஸ்டேக் கட்டாயம் என கூறி, உள்ளூர் வாகனங்களையும், பாஸ்டேக் ஓட்ட சொல்லி டோல்கேட் ஊழியர்கள் வம்பு செய்கிறார்களாம். பாஸ்டேக் ஸ்டிக்கர் இல்லாத வாகனங்களுக்கு, டபுள் அபராதம் என கூறி, உள்ளூர் வாகனமாக இருந்தாலும், 35 ரூபாய் வசூலிக்கிறார்களாம்.

    நமது பணம்

    நமது பணம்

    இந்த சாலை, மாநில நெடுஞ்சாலைத்துறையால், மக்களின் வரிப் பணத்தை வைத்து போடப்பட்ட சாலை. ரூ.371.58 கோடி செலவிட்டு 28 கி.மீ தூரத்திற்கு சாலை போடப்படடது. ஆனால், இந்த டோல்கேட் மூலம், ரூ.600 கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் ரூ.16 கோடி வசூலாகியுள்ளதாம். இன்னும் 40 ஆண்டுகள் சுங்கம் வசூலிக்கப்படுமாம் (மக்கள் கதி அதோ கதிதான்).

    என்னதான் கணக்கு

    என்னதான் கணக்கு

    தேசிய நெடுஞ்சாலை சுங்கங்களுக்கு கி.மீக்கு இவ்வளவு என கட்டணம் நிர்ணயம் உண்டு. புதிதாக போடப்பட்ட சாலைக்கே, 65 பைசா முதல் 40 பைசாதான், வசூலிக்கிறார்கள். ஆனால் உடைந்து, ஓட்டை உடைசலாக உள்ள இந்த ரோட்டுக்கு, கி.மீ கணக்கீடே இல்லை. இஷ்டத்திற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அரசு நடவடிக்கை எடுக்குமா?

    அரசு நடவடிக்கை எடுக்குமா?

    இந்த சுங்க சாவடியில் வேலை பார்க்கும் சிலர் பொதுமக்களிடையே தகாத வார்த்தைகளை பேசி பணத்தை வசூலிப்பதாக தெரிகிறது. இந்த சுங்கசாவடி எல்லைக்குள் இருக்கும் ரோட்டின் ஓரமாக லாரிகளை நிறுத்தி வைக்கவும் இதனால் அப்பகுதிகளில் விபத்துக்கள் அதிகமாக நடப்பதாகவும், கஞ்சா விற்பனை செய்பவர்களுக்கு தகுந்த புகலிடமாக அமைகின்றது என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. அரசு இதில் கவனம் செலுத்தி, இந்த தேவையற்ற சுங்கச் சாவடியை இழுத்து மூடுமா?

    English summary
    A tollgate inside Chennai corporation limit create chaos among people especially locals. A tollgate inside Chennai corporation limit create chaos among people especially locals.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X