சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திடீர் திருப்பம்.. சித்ராவின் நடத்தையில் சந்தேகம்.. ஹேமந்த் அதிரடி கைது.. கோர்ட்டில் இன்று ஆஜர்

சித்ராவின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்

Google Oneindia Tamil News

சென்னை: சித்ராவின் நடத்தையில் சந்தேகப்பட்டுள்ளார் ஹேமந்த்... இதன்காரணமாகவே போலீசார் அவரை கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.. தற்போது பொன்னேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹேமந்த்தை, நீதிபதி முன்று ஆஜர்படுத்தப்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Recommended Video

    சென்னை: நடத்தையில் சந்தேகம் செத்துப்போ... சித்ரா வழக்கில் ஹேம்நாத் கைது!

    சித்ராவின் மரணம் தொடர்பாக அவரது கணவர் ஹேமந்த்திடம் கடந்த 5 நாட்களாக விசாரணை நடந்து வந்தது.. அதேபோல, கல்யாணமாகி 7 வருஷங்களுக்குள் பெண் உயிரிழந்தால் வரதட்சணை தடுப்புச்சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் விசாரணை செய்வது வழக்கம்.

    அந்த அடிப்படையில்தான் சித்ராவின் தாயார் விஜயா, தந்தை காமராஜ் மற்றும் அக்கா சரஸ்வதி ஆகியோருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, ஆர்டிஓ விசாரணை நேற்று தொடங்கியது.. ஸ்ரீபெரும்புதூர் வருவாய்த்துறை அலுவலகத்தில் ஆர்டிஓ திவ்யஸ்ரீ விசாரணையை தொடங்கினார்..

    அப்பா

    அப்பா

    சித்ராவின் அப்பா காமராஜ், அம்மா விஜயா, சகோதரி சரஸ்வதி ஆகியோரிடம் விசாரணை தனித்தனியாக நடத்தப்பட்டது. தன் மகள் மரணத்துக்கு என்ன காரணம் என்று கண்டுபிடித்து தர வேண்டும் என்று சித்ராவின் அப்பா ஏற்கனவே போலீசில் புகார் அளித்திருந்தார்.

    விசாரணை

    விசாரணை

    அந்த புகாரின் அடிப்படையில், வரதட்சணை கொடுமை இதில் நடந்துள்ளதா என்று ஆர்டிஓ விசாரணை நடந்தது. தற்கொலைக்கு முன்பு சித்ரா பேசியது என்ன? வாக்குவாதம் நடந்தது உண்மைதானா போன்ற கேள்விகள் சித்ராவின் அம்மா விஜயாவிடம் எழுப்பப்பட்டன. கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றது.

    ஊடகம்

    ஊடகம்

    விசாரணைக்கு பிறகு வெளியே வந்த சித்ராவின் அம்மா பேசும்போது, "விசாரணை முடிந்த பின்பு முழு தகவலை அளிக்கிறோம், ஊடங்கள் தவறான தகவலை சொல்கிறார்கள். எந்தவொரு தாயால், மகளுக்கு மனஉளைச்சல் வருமா? எந்த தாயமே மகளின் தற்கொலைக்கு காரணமாக இருக்க மாட்டார்.. சித்ரா தற்கொலைக்கு முழுக்க, முழுக்க ஹேம்நாத் தான் காரணம்.. அதுக்கான விவரங்களை ஆர்டிஓ விசாரணையில் சொல்லி உள்ளோம்.. விசாரணைக்கு கூப்பிடும்போது மறுபடியும் ஆஜராவோம்.

    சண்டை

    சண்டை

    என்கிட்ட போனில் பேசினாள்.. ஆனா எதுவும் சொல்லல.. நார்மலாதான் பேசினாள்.. ஸ்டார்ட் மியூஸிக்கில் இருக்கேன்..ம்மான்னு சொன்னாள்.. எப்போ ஷூட்டிங் முடியும்னு கேட்டேன்.. லேட்டாகும்னு சொன்னாள்.. அவ்வளவுதான்.. சண்டையே நடக்கல" என்றார்.

    ஹேமந்த்

    ஹேமந்த்

    இன்றைய தினம், ஹேமந்த்தின் பெற்றோரிடம் விசாரணை நடத்தப்படுவதாக தெரிகிறது.. இதனிடையே, சித்ராவை தற்கொலைக்கு ஹேமந்த் நேற்றிரவு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.. சித்ராவின் நடத்தையில் சந்தேகப்பட்டு ஹேம்நாத் சண்டையிட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனாலேயே சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் ஐபிசி 306-ன் படி கைது செய்து, அவரை போலீசார் பொன்னேரி ஜெயிலில் அடைத்துள்ளனர். இதையடுத்து, போலீசார் அவரை நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.

    தகராறு

    தகராறு

    ஏற்கனவே, ஹேமந்த் சித்ரா மீது சந்தேகப்படுவதாகவும், சில சீன்களில் நடித்ததை வைத்து அவர்களுக்குள் தகராறு நடந்து வந்ததாகவும் தகவல்கள் கசிந்தன.. அதேபோல, ஹேமந்த் பொஸஸிவ் கேரக்டர் என்பதால், இருவருக்குள், அது தொடர்பாகவே தகராறுகள் வந்துதாகவும் சொல்லப்பட்டன.. அம்மாவுடன் கடைசியாக சித்ரா பேசினார், அம்மாவுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டார், என்றெல்லாம் சொல்லப்பட்டு வந்த நிலையில், ஹேமந்த்தான் தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் தற்போது தெரிவித்துள்ளது, இந்த வழக்கில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

    English summary
    Why Actress Chitra husband Hemanth arrested
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X