• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"கொரோனாவா" அல்லது "திமுக"வா.. எதை கண்டு அஞ்சுகிறது அதிமுக அரசு.. கிராம சபை கூட்டங்கள் ரத்து ஏன்?

Google Oneindia Tamil News

சென்னை: கிராம சபை கூட்டத்தை திடுதிப்பென்று மாநில அரசு ரத்து செய்துள்ளது என்றால் என்ன காரணம்? ஸ்டாலின் சொன்னதுபோல திமுவை கண்டு முதல்வர் நடுங்குகிறாரா? என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் முன்வைத்து வருகின்றனர்.

இந்த கிராம சபை என்பது மக்களவைக்கு இணையானது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிலேயே சொல்லப்பட்டிருக்கிறது.. இது இந்திய அரசியல் சாசனத்தால் உருவாக்கப்பட்ட சபை.. மேலும், கிராம சபைக்கு மாநில சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட, அதன் அதிகாரத்திற்கு உட்பட்டு எடுக்கும் முடிவுகளை யாராலும் மாற்ற இயலாது.

இந்த கிராம சபைக்கான அதிகாரம் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியானது கிடையாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும். அந்த மாநில அரசின் பஞ்சாயத்து சட்டத்திற்கு ஏற்ப தான் கிராம சபை செயல்பட முடியும்... இதுதான் பொதுவான விதி.

செம.. வாழ்ந்தால் இப்படித்தான் வாழணும்.. அபூர்வ பிறவி.. திரும்பி பார்க்க வைத்த ருக்மணியம்மாள்!செம.. வாழ்ந்தால் இப்படித்தான் வாழணும்.. அபூர்வ பிறவி.. திரும்பி பார்க்க வைத்த ருக்மணியம்மாள்!

உள்ளாட்சி

உள்ளாட்சி

கிராம சபை என்பது நம் நாட்டில் எப்போதிலிருந்தோ இருக்கிறது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்த எந்த அரசுகளும் எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. இந்த உள்ளாட்சி அமைப்புகளை யாருமே கையில் எடுக்கவில்லை, சரியாக பயன்படுத்தி கொள்ளவும் இல்லை.

 குறைகள்

குறைகள்

இப்படி கிராம சபை என்கிற ஒரு பவர் நம் கையில் இருக்கிறது என்பதையும், இதன் மூலம் ஒவ்வொரு கிராமங்களும் தம் தேவைகளை தாங்களே நிறைவேற்றி கொள்ள முடியும் என்பதையும், தங்கள் குறைகளை தாங்களே களைந்து கொள்ளலாம் என்பதையும்தான் கமல் வலியுறுத்த ஆரம்பித்தார்.. அவரையொட்டி ஸ்டாலினும் இதே பாணியை வலியுறுத்தி வருகின்றன விஷயம்.

ஆச்சரியம்

ஆச்சரியம்

கடந்த 2 வருடமாக வரை கிராம சபை என்ற பெயரை கேள்விப்படாத இளைஞர் கூட்டமும் நம் மாநிலத்தில் இருந்தனர். தற்போது கிராம சபை என்ற பெயர் பரவலாக தெரிய ஆரம்பித்துள்ளதுடன், அதன் அவசியமும் தெரிய ஆரம்பித்துள்ளது.. கிராம சபைக்குக் கூட்டங்கள், கிராம மக்களது கோரிக்கைகளை, பதிவு செய்வதற்காக ஏற்பாடு செய்யப்படுகின்றன. அத்துடன் ஊராட்சி செலவினம், திட்டங்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்படுகிறது.

 தீர்மானம்

தீர்மானம்

உதாரணமாக டாஸ்மாக்-கிற்கு எதிராக ஊரே ஒன்று கூடி போராடுவதை விட்டுவிட்டு, கிராம சபையை கூட்டி டாஸ்மாக் வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றி விட்டால், அந்த முடிதான் இறுதியான முடிவு!! இதில் மக்களின் ஒட்டுமொத்த கருத்தையும் மீறி யாரும் செயல்படவோ, செயல்படுத்தவோ முடியாது. இந்தக் கூட்டத்தில் அதிகாரிகளோ, பஞ்சாயத்து தலைவர்களோ மக்கள் முன்னே வைக்கும் கோரிக்கைகளை ஒருக்காலும் நிராகரிக்கவே முடியாது... இது அவ்வளவும் மக்களுக்கு பலம் என்றால், எந்த ஆளுகின்ற அரசுக்குமே பலவீனமாக போய்விடுகிறது!

 சிறப்பு கிராம சபை

சிறப்பு கிராம சபை

தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில் குடியரசு தினமான ஜனவரி 26, தொழிலாளர் தினமான மே 1, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 மற்றும் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2 ஆகிய 4 சிறப்பு நாட்களின்போது கிராம சபை நடத்தப்படும். ஆனால், மே 1, ஆகஸ்ட் 15 ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த கூட்டம் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது.. அதுபோலவே, லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

கொரோனா

கொரோனா

தன் அடிப்படையில்தான், கிராம சபை கூட்டத்துக்கான ஏற்பாடுகள் அந்தந்த ஊராட்சி தலைவர்களால் செய்யப்பட்டு வந்தன.. ஆனால், திடீரென இந்த கூட்டங்கள் திடீரென ரத்து செய்யப்படுவதாக அந்தந்த மாவட்ட நிர்வாகங்களால் அறிவிக்கப்பட்டுள்ளன. இது திமுக, மநீம உள்ளிட்ட கட்சிகளுக்கு பெருத்த அதிர்ச்சியை தந்துள்ளது.

இதற்கு என்ன காரணம்?

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த வாரம் முழுவதும் வலியுறுத்தியபடியே வந்தார்.. இப்படி ஒரு கருத்தை அவர் காஞ்சிபுரம் போராட்டத்தில் முன்வைக்கவும் அதிமுக தரப்பை அது அதிர வைப்பதாகவே கூறப்பட்டது.

திமுக

திமுக


தற்போது கூட்டம் ரத்து செய்யப்பட்டதால், திமுக கடுமையான அதிருப்தியை முன்வைத்துள்ளது.."நோயைக் கட்டுப்படுத்தி விட்டோம் என்ற பாராட்டுரையை தனக்குத் தானே வாசித்து கொள்ளும் முதலமைச்சர் திமுகவை கண்டு அஞ்சி அதே கொரோனாவைக் காட்டி அலறுகிறார்... உள்கட்சிப் பிரச்சினைகளின் உச்சாணிக் கொம்பில் குழம்பித் தவிக்கிறார்.. இது ஒரு ஜனநாயக பச்சை படுகொலை.. திட்டமிட்டபடி நாளை திமுக ஊராட்சி மன்ற தலைவர்கள் மக்களை சந்திப்பார்கள். வேளாண் சட்டங்களின் தீமைகளையும் அதிமுக அரசின் வஞ்சக நாடகத்தையும் மக்களிடம் எடுத்துரைப்பார்கள்" என்று ஸ்டாலின் கொதித்து போய் தெரிவித்துள்ளார்.

மநீம

மநீம

இதுபோலவே கமலும் ஆவேசமடைந்துள்ளார்.. இதற்கு காரணம், கொரோனா கால செலவு கணக்கை மக்கள் நீதி மய்யம் பகிரங்கமாக கேட்டது.. 6 மாதமாக தொற்றை கட்டுப்படுத்திவிட்டோம், இவ்வளவு செலவு இதற்காக செய்திருக்கிறோம் என்று அரசு சார்பில் சொன்னாலும், அதற்கான கணக்கை திமுககூட கேட்கவில்லை.. ஆனால், கமல் துணிச்சலாக கேட்டிருந்தார்.. இப்போது கூட்டம் ரத்து என்றதும் அவரும் அதிர்ந்து போய்விட்டார்.

கணக்கு

கணக்கு

"கிராம சபை கூட்டங்களை ரத்து செய்ய வைத்த நிஜக் காரணம் என்ன? கொரோனா கால செலவு கணக்கு பற்றி மக்கள் கேள்விகள் கேட்பார்கள் என்ற பயமா அல்லது மக்கள் நீதி மய்யம் கொண்டுவிடும் என்ற நடுக்கமா? சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா?" என்று காட்டமாக கேட்டுள்ளார்.

 விவாதங்கள்

விவாதங்கள்

உண்மையிலேயே கிராம சபை கூட்டம் ரத்தானது பல்வேறு விவாதங்களை சோஷியல் மீடியாவில் கிளப்பி வருகிறது.. டாஸ்மாக்கை திறந்து வெச்சு, அதுல முட்டி மோதி முண்டியடித்து வராத கூட்டமா இந்த கிராம சபைக்கு வந்துவிட போகிறது? டாஸ்மாக்கை திறந்து வைக்க அனுமதிக்கும் அரசு, மக்கள் பிரச்சனைகளை விவாதிக்க அனுமதிக்காதது ஏன்?

தியேட்டர்கள்

தியேட்டர்கள்

4 நாளைக்கு முன்னாடிதானே, கொரோனா கட்டுக்குள் இருக்கிறது என்று சொன்னார்கள்.. இந்த 5 நாளில் அது பலமடங்கு பெருகிடுச்சா? சினிமா தியேட்டர்களை திறக்கறாங்களே? அதுக்கு மட்டும் ஏன் அனுமதி? அந்த அளவுக்கு தளர்வுகள் இருக்கும் நிலைமை தமிழ்நாட்டில் இருக்கிறதுதானே? தியேட்டர் திறக்கிறார்கள் என்றால், கிராம சபை கூட்டக்கூடாது என்றால் என்ன நியாயம்?

கணக்கு

கணக்கு

உள்ளாட்சி அமைப்புகள் இயங்க வேண்டாமா? அது வெறும் ஊழல் செய்வதற்கு மட்டும்தானா? கொரோனா கணக்கை ஒரு கட்சி கேட்கிறது என்றால், இவர்கள் அதை தாராளமாக தந்திருக்கலாம்.. அப்படியென்றால் மடியில் கணம் இருக்கிறதா? விவசாய மசோதாவுக்கு எதிரான தீர்மானம் போடப்பட்டுவிடும் என்றால், அந்த மசோதாக்கள் தவறு என்று அரசு ஒப்புக் கொள்கிறதா?

அதிருப்தி

அதிருப்தி

முதல்வரே முன்பு கிராம சபைக்கு அனுமதி தந்தார்? இப்போது அவரே ரத்தும் செய்கிறார் என்றால், ஸ்டாலின் சொன்னபடி, திமுகவை கண்டு அலறுகிறாரா? என்று தெரியவில்லை. ஆனால், கூட்டம் நடத்தியிருந்தால் எழும் எதிர்ப்பை விட, கூட்டத்தை ரத்து செய்து அதன்மூலம் ஆளும் தரப்பு நிறைய அதிருப்தியை சந்தித்துவருகிறது என்ற கருத்து பரவலாக எழுந்து வருகிறது.

English summary
Why ADMK govt cancels Grama sabha meetings?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X