சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காரில் செல்வோர் கவனத்திற்கு.. அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் பலியாக 3 முக்கிய காரணம்

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக எம்.பி., ராஜேந்திரன் சாலை விபத்தில் பலி- வீடியோ

    சென்னை: அதிமுக எம்பி ராஜேந்திரன் கார் விபத்தில் பலியான சம்பவத்தில் மூன்று தவறுகள் முக்கியமான காரணமாக அமைந்துள்ளன.

    விழுப்புரம் தொகுதி, அதிமுக எம்பியாாக பதவி வகித்தவர் ராஜேந்திரன். இவர் இன்று அதிகாலை திண்டிவனம் அருகே தனது காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி பலியானார்.

    சாலையில், தடுப்புச் சுவர் ஒன்று புதிதாக கட்டப்பட்டு வரும் நிலையில், அதில் கார் மோதியதில் ராஜேந்திரன் பலியாகியுள்ளார்.

    3 தவறுகள்

    3 தவறுகள்

    இதுகுறித்த காவல்துறையின் விசாரணையில் மூன்று முக்கிய தவறுகள் காரணமாக இந்த விபத்து நடந்து அது உயிரிழப்பு வரை கொண்டு சென்று விட்டதாக கூறுகிறார்கள். முதலாவது முக்கியமான காரணம் என்பது, சாலையில் புதிதாக சாலை தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது. அது குறித்து அறிவிப்பு பலகை வைக்கப்படவில்லை என்பதுதான்.

    அறிவிப்பு பலகை

    அறிவிப்பு பலகை

    சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் டிரைவருக்கு அறிவிப்பு பலகை இல்லாமல் திடீரென வலதுபக்கத்தில் சாலை தடுப்பு சுவர் இருந்ததை கணிக்க முடியவில்லை. அறிவிப்பு பலகைகள் எந்த அளவுக்கு முக்கியமானவை என்பதை இதிலிருந்து அரசுகள் புரிந்து கொள்ளலாம். அதுவும் இரவு நேரங்களில், அறிவிப்பு பலகை வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த பலனளிக்கக் கூடியது என்பதை புரிந்து கொள்வது சாலைப் பணி மேற்கொள்வோர் அறிந்திருக்க வேண்டியது.

    சீட் பெல்ட்

    சீட் பெல்ட்

    என்னதான் கார் முன்பக்கம் கடுமையாக சேதம் அடைந்து இருந்தாலும் கூட, ராஜேந்திரன் உயிரிழக்க காரணமாக அமைந்தது அவர் சீட் பெல்ட் அணியாததுதான், என்று கூறப்படுகிறது. இவர் பயணித்தது டொயோட்டோ நிறுவனத்தின், எடியோஸ் வகை கார். பொதுவாக டொயோட்டோ கார்கள் வலுவான கட்டமைப்பை கொண்டவை. அப்பளம் போல கார் எளிதாக உடையாது. எனவே, சீட் பெல்ட் அணிந்திருந்தால், கார் மோதிய வேகத்தில் அவர் முன்னால் தூக்கி எறியப்பட்டு இருக்க மாட்டார் என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்.

    ஏர்பேக் அவசியம்

    ஏர்பேக் அவசியம்

    அதேபோன்று சீட்பெல்ட் அணியாததால் விபத்தின்போது காரில் இருந்த ஏர்பேக் பலனளிக்கவில்லை. ஏர்பேக் பலனளிக்காதது, 3வது காரணம். சீட் பெல்ட் அணியாமல் விபத்து ஏற்படும்போது, ஏர்பேக் விரிவடைந்தால் கூட அதனால் பெரிய அளவுக்கு பாதுகாக்க முடியாது. சீட் பெல்ட் அணிந்திருந்தால் மட்டுமே ஏற்படும் உயிர் சேதத்தை தடுக்க முடியும். வாட்ஸ்அப்பில் சுற்றும் தகவலை போல, சீட் பெல்ட் அணிந்தால்தான் ஏர்பேக் ஓபன் ஆகும் என்பது இல்லை. ஆனால், சீட் பெல்ட் போட்டால், பயணி சீட்டோடு இருப்பார். அப்போது ஏர்பேக் உடலை நன்கு கவர் செய்துவிடும் என்கிறார்கள், இந்த துறையில் உள்ள வல்லுநர்கள்,

    English summary
    3 important reasons behind AIADMK MP Rajendran accident, says sources.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X