சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விரக்தி.. ஏமாற்றம்.. பரபரத்த அந்த 23 மணி நேரம்.. சசிகலாவின் திடீர் முடிவிற்கு பின் நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசியலில் இருந்து திடீர் என்று விலகுவதாக சசிகலா எடுத்த முடிவிற்கு பின் என்ன நடந்தது என்று விவரங்கள் வெளியாகி உள்ளன.

தமிழக அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா அறிவித்து இருக்கிறார். சிறையில் இருந்து வெளியே வந்தபின் அதிமுகவின் லெட்டர் பேடை பயன்படுத்தி வந்த சசிகலா தற்போது வெறும் ஏ4 பேப்பரில் தனது விலகல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று கூறி அதிமுகவின் ஆட்சிக்கு வழிவிட்டு சசிகலா இந்த முடிவை அறிவித்துள்ளார். சசிகலாவின் இந்த முடிவிற்கு பின் என்ன நடந்தது என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.

"ஒற்றுமையாக இருக்க வாய்ப்பு இல்லை".. அரசியலில் இருந்து சசிகலா விலகியது ஏன்? தினகரன் பரபர பேட்டி

சசிகலா

சசிகலா

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த நாளே பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தார். அதிலும் பெங்களூரில் இருந்து இவர் காரில் சென்னைக்கு வந்ததே பெரிய திருவிழா போல நடைபெற்றது. 23 மணி நேரம் காரில் பயணம் செய்து, தொண்டர்கள் புடைசூழ சசிகலா சென்னைக்கு வந்தார்.

சென்னை

சென்னை

சசிகலா சென்னைக்கு வந்த தோரணையே அவர் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த 23 மணி நேர பயணமே அதிமுகவில் பெரிய அளவில் கிலியை ஏற்படுத்தியது. இவரின் வருகைக்காக ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது உட்பட பல்வேறு காரணங்களால் சசிகலா மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது.

ஆனால்

ஆனால்

ஆனால் தமிழகம் வந்த பின் சசிகலா பெரிதாக அரசியல் நிகழ்வு எதிலும் பங்கேற்கவில்லை. அதிமுகவை பற்றி எங்கும் அதிரடியாக சசிகலா பேசவில்லை. சில சினிமா நட்சத்திரங்களை, அரசியல் தலைவர்களை சசிகலா சந்தித்தார், அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கை விசாரிக்கும்படி துரித்தப்படுத்தினார். இதை தவிர சசிகலா பெரிதாக வேறு எதுவும் செய்யவில்லை.

ஓய்வு

ஓய்வு

இத்தனை நாட்கள் ஓய்வில் இருந்த சசிகலா தற்போது அரசியலில் இருந்து நிரந்தர ஓய்வை அறிவித்துள்ளார். இவரின் இந்த முடிவிற்கு பல காரணங்கள் உள்ளன. அதிமுகவை இனியும் மீட்க முடியாது என்று விரக்தியின் உச்சத்திற்கு சென்றுதான் சசிகலா இந்த முடிவை அறிவித்தார் என்று கூறுகிறார்கள். கட்சியை இனியும் கட்டுக்குள் கொண்டு வருவது கடினம் என்று அவர் நினைப்பதாக கூறுகிறார்கள்.

அரசியல் வேண்டாம்

அரசியல் வேண்டாம்

அதோடு சசிகலா போட்ட கணக்கு எதுவும் வேலை செய்யவில்லை, அதிமுகவிற்குள் செல்லும் முயற்சி எதுவும் பலிக்கவில்லை, பாஜக மூலம் அதிமுக உள்ளே செல்ல செய்த முயற்சியும் தோல்வி அடைந்துவிட்டது, கட்சிக்குள் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிந்து சசிகலா இந்த முடிவை எடுத்துவிட்டார் என்றும் கூறுகிறார்கள்.

 அதிமுக தோல்வி காரணம்

அதிமுக தோல்வி காரணம்

இன்னொரு பக்கம் அதிமுக இந்த தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டால் அதற்கு தான் காரணமாக இருந்து விட கூடாது என்று சசிகலா கருதுகிறார். தன்னால் வாக்குகள் சிதற கூடாது என்று சசிகலா நம்புகிறார். அப்படி நடந்தால் மட்டுமே தேர்தலுக்கு பின் அதிமுகவில் இணைய முடியும் என்று சசிகலா நம்புவதாக கூறுகிறார்கள்.

நம்பிக்கை

நம்பிக்கை

அதிமுகவின் தோல்விக்கு தான் காரணமாக இருந்துவிட கூடாது. தேர்தலுக்கு பின் மற்ற விஷயங்களை பார்த்துக்கொள்ளலாம், தேர்தல் வரை சைல்ட்டாக இருக்கலாம் என்று சசிகலா நினைப்பதாக கூறுகிறார்கள். இதுதான் அவரின் இந்த திடீர் முடிவிற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.. இதனால் சசிகலாவின் இந்த முடிவு தற்காலிக முடிவாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள்!

English summary
Why all of a sudden Sasikala quits the politics ahead of Tamilnadu assembly election?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X