சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காசெல்லாம் போச்சு.. மிஞ்சியதை காப்பாத்துவோம்.. தினகரனை விட்டு ஓடும் அமமுக தலைவர்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    வி.பி.கலைராஜன் பரபரப்பு பேட்டி- வீடியோ

    சென்னை: தினகரன் அணியிலிருந்து நிர்வாகிகள் வெளியேறுவதன் பின்னணி குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

    ஜெயலலிதா மறைந்த பிறகு பிரிந்த அதிமுகவை பாஜக உத்தரவுப்படி ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ் ஆகியோரின் கைகளை பிடித்து ஒரு மாநில ஆளுநர் இணைத்து வைத்த விந்தைக்கு பிறகு தினகரன் தனித்து விடப்பட்டார். தான் வளர்த்து விட்ட ஓபிஎஸ்சும், ஈபிஎஸ் முதல்வராக தனது சித்தி சசிகலா காரணமாக இருந்தும் அவர்கள் தங்களுக்கு துரோகத்தை பரிசாக தந்துவிட்டார்கள் என்று தமிழக மக்களிடம் கூறிய தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் அமைப்பு ஒன்றை தொடங்கினார்.

    அப்போது சசிகலாவின் விசுவாசிகள் அதாவது சசிகலாவால் பதவி பெற்றோரில் ஒரு சிலர் தினகரன் பின்னால் அணி திரண்டனர். தங்க தமிழ்ச்செல்வன். வெற்றிவேல், செந்தில் பாலாஜி, கலைராஜன், பழனியப்பன், உட்பட 18 எம்.எல்.ஏக்கள் தினகரனை நம்பி வந்தனர். அதன் பின்னர் 18 பேரின் பதவியும் பறிக்கப்பட்டது ஆனால் தினகரன் மட்டும் ஆர்.கே நகரில் போட்டியிட்டு தற்போது எம்.எல்.ஏ வாக உள்ளார். ஆக இவரை நம்பி வந்ததில் பதவியை பறிகொடுத்ததுதான் மிச்சம் என்று அந்த தகுதி நீக்கம் செய்யப்பட எம்.எல்.ஏ க்கள் புலம்பி வந்தனர். அவர்களுக்கு பல விதங்களில் சமாதானம் சொல்லி வந்தார் தினகரன்.

    சூப்பர்.. எஸ். காமராஜ் மீது தினகரனுக்கு எவ்வளவு நம்பிக்கை.. திருவாரூரின் அமமுக வேட்பாளர் இவர்தான்! சூப்பர்.. எஸ். காமராஜ் மீது தினகரனுக்கு எவ்வளவு நம்பிக்கை.. திருவாரூரின் அமமுக வேட்பாளர் இவர்தான்!

    காலி செய்த நாஞ்சில் சம்பத்

    காலி செய்த நாஞ்சில் சம்பத்

    இந்த நிலையில் அவரது புகழை நிமிடங்கள் தோறும் போற்றி, கொடுக்கப்பட்ட காசுக்கு மேல் கூவி வந்தவர் நாஞ்சில் சம்பத். அப்படிப்பட்டவரும் ஒரு கட்டத்தில் தினகரன் தன்னை மதிக்கவில்லை என்று கூறி கட்சியிலிருந்து வெளியேறினார். அதன் பின்னர் அமமுகவுக்கு பெரிய தூணாக நின்றவர் செந்தில் பாலாஜி. எப்படியும் தனக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்று எண்ணியவர் அமமுகவுக்கு ஃபைனான்சியராகவே இருந்தார். அப்படியெல்லாம் இருந்தவர் அவரும் இனிமேல் தினகரனை நம்பினால் நம்மிடம் இருக்கும் பொருளும் போய் விடும் என்று கருதி ஒரு சுபயோக சுப தினத்தில் திமுகவில் அடைக்கலமாகி விட்டார்.

    புலம்பல்

    புலம்பல்

    அதன் பின்னர் தங்க தமிழ்செல்வனும் அமமுகவில் இருந்து கம்பி நீட்டுவார் என்று கூறப்பட்டது. அப்போது பல நேரங்களில் அவரது பேட்டியும் அப்படித்தான் இருந்தது. அவரோடு வெளிமாநில நிர்வாகி ஒருவரும் வெளியேறுவார் என்று கூறப்பட்டது. அவரும் தனக்கு நெருக்கமான பத்திரிக்கையாளர்களிடம் தினகரனை பற்றி புலம்பி வந்ததாக கூறப்படுகிறது.

    [தமிழக லோக்சபா தொகுதிகள் முழு விவரமும் தெரியனுமா? இங்கே வாங்க!]

    ஆணவப் போக்கு

    ஆணவப் போக்கு

    தினகரனை அமமுகவின் நிர்வாகி ஒருவர் சந்திக்க சென்றுள்ளார். அப்போது இவர் சென்றுள்ளது பற்றி தினகரனுக்கு தகவல் கூறப்பட்டதாம். தினகரன் கூறினாராம் அம்மா எந்த நிர்வாகி வந்தாலும் உடனடியாக பார்க்க மாட்டார் குறைந்தது 2 மணி நேரம் கழித்துதான் பார்ப்பார். அப்படித்தான் இவரை பார்க்க முடியும் என்று தகவல் சொல்லி அனுப்பினாராம். இந்த செய்தி தினகரனை பார்க்க போன நிர்வாகி காதுக்கு வர "அப்படியே ஷாக்" காகி விட்டாராம். அதோடு பத்திரிக்கையாளர்கள் சென்றாலும் அவர்களையும் இப்படி பல நேரங்களில் தினகரன் அவமதிப்பதாக பத்திரிக்கையாளர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

    கலைராஜன் ஷாக்

    கலைராஜன் ஷாக்

    இந்த நிலையில்தான் தற்போது தினகரனின் வலது கரமாக இருந்த கலைராஜன் திமுகவில் இணைந்துள்ளார். தர்மயுத்தம் நடத்தி ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து பிரிந்தபோது அவரது அணியினர் அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்ற வருவதாக தகவல் கிடைத்தபோது ஓபிஎஸ் இங்கு வந்தால் அவரது கை இருக்காது என்று பீதி கிளப்பியவர் சட்சாத் இந்த கலைராஜன்தான். அப்படிப்பட்டவரும் இப்போது அமமுகவில் இல்லை.

    பண வரவு இல்லை

    பண வரவு இல்லை

    இதற்கெல்லாம் பின்னணியில் பணம் இருப்பதாகவும் சசிகலாவுடன் தினகரன் இப்போது சுமூக உறவில் இல்லை என்றும் கூறப்படுகிறது. மறைந்த சசிகலாவின் கணவர் நடராஜன், தினகரன் அடிக்கடி பெங்களூருவுக்கு சென்று சசியை பார்த்து வருவதாக கூறுகிறார். யாருக்கு தெரியும் இவர் சசிகலாவை சந்தித்தாரா இல்லையா என்று பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இப்படிப்பட்ட நிலையில் சசிகலா தரப்பில் இருந்து அமமுகவுக்கு எவ்வித பண உதவியும் செய்வதில்லையென்று கூறப்படுகிறது.

    காசு முக்கியம்

    காசு முக்கியம்

    இதனால்தான் தங்கள் கைக்காசை செலவு செய்து வந்தவர்கள் ஒரு கட்டத்தில் இனிமேலும் செலவு செய்ய முடியாது என்ற சூழலிலும் தினகரன் தன்னை இன்னொரு ஜெயலலிதா போன்று எண்ணி தங்களை அவமதிப்பதாலும் அமமுகவில் இருந்து வெளியேறுவதாக கூறப்படுகிறது. கலைராஜனை தொடர்ந்து இன்னும் சில நிர்வாகிகள் வெளியேற திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    English summary
    AMMK leaders are highly upset over the attitude of TTV Dinakaran and this is the main reason they leave the party.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X