சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சொதப்பிட்டாரா தினகரன்... படுகுழியில் விழுந்த அமமுக.. இந்த தவறை செஞ்சதுதான் காரணமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Elections 2019: 3-வது இடத்திற்கு முட்டி மோதும் மநீம, நாம் தமிழர், அமமுக!- வீடியோ

    சென்னை: யானைக்கும் அடிசறுக்கும் என்பார்களே அப்படித்தான் தமிழகத்தில் தினகரனுக்கு பெரிய அடியாக தேர்தல் முடிவு அமைந்துள்ளது. அவரது வியூகம் சொதப்பியதே அமமுக தேர்தலில் இப்படி ஒரு அடிவாங்கியதற்கு காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக இயக்கம் படுதோல்வி அடைந்தது. அதேநேரம் தோல்வியை தழுவிய அதிமுக, அமமுகவினர் ஓட்டை பிரித்ததும், பிரிந்து சென்றதுமே தோல்விக்கு காரணம் என புலம்பி வருகிறது.

    அதிமுக கழுத்தில் கத்தி என்ற நிலையில் தேர்தலில் களம் இறங்கி ஒரு பக்கம் மக்களவை தேர்தலில் படுதோல்வி அடைந்த நிலையில் மறுபக்கம்9 தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்கவைத்துள்ளது அதிமுக.

    வந்தார் மீண்டும் மோடி.. இனி ஹைட்ரோ கார்பன்.. நியூட்ரினோ.. 8 வழிச்சாலை... வேகம் எடுக்குமோ! வந்தார் மீண்டும் மோடி.. இனி ஹைட்ரோ கார்பன்.. நியூட்ரினோ.. 8 வழிச்சாலை... வேகம் எடுக்குமோ!

    ஏமாந்த 17 பேர்

    ஏமாந்த 17 பேர்

    ஆனால் மக்களவை தேர்தல் மட்டுமின்றி சட்டமன்ற தேர்தலிலும் அமமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. டிடிவி தினகரன் என்பவரை நம்பி சென்ற 17 எம்எல்ஏக்களும் பெரும் தோல்வியை சந்தித்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் அதிமுகவில் இருந்து அவர்கள் பிரிந்ததுதான் என்று சொல்கிறார்கள்.

    நடந்தது வேறு

    நடந்தது வேறு

    அமமுகவை ஆரம்பித்த போது அதிமுகவினர் அனைவரும் தன்னை நம்பி வந்துவிடுவார்கள் என்று நம்பினார் டிடிவி தினகரன் ஆனார். ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவு மக்களே அவர் பின்னால் சென்றனர்.மற்றவர்கள் அதிமுவிலேயே இருந்து கொண்டனர்.

    அதிமுக பிரச்சாரம்

    அதிமுக பிரச்சாரம்

    அதேநேரம் அதிமுக மற்றும் திமுகவுக்கு மாற்று தான் தான் என்பதை சொல்லி தினகரன் வலிமையான பிரச்சாரங்களை முன்னெடுக்க தவறியதாகவே தெரிகிறது. இதேபோல திமுகவுடன் கூட்டணி வைத்து தினகரன் செயல்படுவதாக அதிமுக கூறியதை முறியடிக்கும் வகையில் டிடிவி தினகரனின் பிரச்சாரம் அமையவில்லை. இதுவே அமமுகவின் படுதோல்விக்கு காரணமாக அமைந்ததாக சொல்கிறார்கள்.

    தாமத அறிவிப்பு

    தாமத அறிவிப்பு

    அதிமுகவின் ஒரு கிளைக்கழகமாகவே அமமுகவை பாவித்து வந்த தினகரன் எப்படியும் தன்கைவசம் அதிமுக வந்துவிடும் என்று நம்பி வந்தார். ஆனால் தேர்தல் முடிந்தபின்னர் தான் அவர் அமமுகவை தனி கட்சியாக அறிவித்து செயல்பட்டு வருகிறார். இதை முன்பே செய்திருந்தால் இந்நேரம் அமமுக இயக்கமும் சின்னமும் மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருக்கும். இதுவும் அமமுகவின் தோல்விக்கு காரணமாக சொல்லப்படுகிறது

    அம்மாவுக்கு துரோகம்

    அம்மாவுக்கு துரோகம்

    இன்னொரு புறம் தினகரன் அதிமுக தலைவர்கள் சசிகலாவுக்கு செய்த துரோகத்தை சொல்லிதான் பிரச்சாரங்களை முன்னெடுத்தார். சாமானியமக்களின் பிரச்னைகளை அவர் அதிகம் பேசியருந்தாலும். சசிகாலவுக்கு துரோகம், அம்மாவுக்கு துரோகம் என்ற ரீதியில் தான் அவரது பிரச்சாரங்கள் பெரும்பாலும் அமைந்து இருந்தது.அவர் திமுக அதிமுகவை கடுமையாக விமர்சித்து, அமமுகவால் தான் தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த தவறியதாகவே சொல்கிறார்கள்.தனிகட்சியாக மாறிவிட்ட தினகரன் புதிய குழந்தையாக அமமுகவை பாவித்து மக்களிடையே தனது இயக்கத்தை எடுத்து சென்றால் தான், பின்னாளில் நல்ல பலன் கிடைக்கும்.

    English summary
    lok sabha election results 2019 updates: why ammk loss in lok sabha polls and tn by election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X