சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திக்.. திக்.. திகாருக்கு மட்டும் அனுப்பிடாதீங்க.. ஏன் இப்படி பதறுகிறார்கள்.. மிரண்டு ஓடுகிறார்கள்!

அரசியல்வாதிகள் திகார் ஜெயிலுக்கு குறி வைத்து அனுப்பப்படுகிறார்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    ப.சிதம்பரத்தை 19ம் தேதிவரை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு

    சென்னை: "திகார் ஜெயிலுக்கு மட்டும் அனுப்பிடாதீங்க.." என்று ப.சிதம்பரம் வழக்கில் நாட்டின் புகழ்மிக்க வக்கீல் கபில்சிபல் நீதிபதியிடம் மன்றாடியது ஏன்? திகார் என்றாலே அரசியல்வாதிகளுக்கு அடிவயிற்றில் திக்கென்று வந்து போவது ஏன்?
    இந்தியாவில் மிக முக்கிய சிறைதான் திகார்.. ஆனால் இது அரசியலோடு சேர்த்து தொடர்புப்படுத்தி பார்க்கப்பட்டு வருகிறது. இதற்கு என்ன காரணம்? யார் காரணம் ... இந்திரா காந்தியேதான்!

    எமர்ஜென்சியை அமல்படுத்தியபோது இந்திரா காந்தி திகாருக்கு அனுப்பப்பட்டார். அப்போது இதற்கு சிறப்பான எந்த காரணமும் இல்லை என்றாலும், மிகவும் கேவலமான, கீழ்த்தரமான, மோசமான வசதிகளுடன் செயல்பட்டு வந்தது.

    மகன் அடைக்கப்பட்ட அதே அறையில் தந்தை.. இனி சிறையில் சிதம்பரத்தின் ரொட்டீன் வொர்க் இதுதான்!மகன் அடைக்கப்பட்ட அதே அறையில் தந்தை.. இனி சிறையில் சிதம்பரத்தின் ரொட்டீன் வொர்க் இதுதான்!

    அழுதனர்

    அழுதனர்

    இந்திரா காந்தி சிறை சென்று, அங்குள்ள சிறை கைதிகளிடம் லேசாக பேச்சு கொடுத்த போதுதான், சாப்பாடு முதல் பாலியல்வரை எல்லா தொந்தரவுகளையும் பெண்கள் சொல்லி அழுதனர். 80-ல் இந்திரா பிரதமர் ஆனபோது, முதல் வேலையே திகார் சிறையை சீரமைத்ததுதான் என்பது வேறு விஷயம்.

    ஜெயபிரகாஷ்

    ஜெயபிரகாஷ்

    இருந்தாலும், எமர்ஜென்சியை அமல்படுத்திய இந்திரா, அதற்கு தூண்டுகோலாக இருந்த சஞ்சய் காந்தி, எமர்ஜென்சிக்கு எதிராக போராடிய ஜெயபிரகாஷ் நாராயணன்.. இவர்கள் அனைவருமே திகாருக்கு அனுப்பப்பட்டபோதுதான் திகார் நாடு திரும்பி பார்க்கும் சிறையானது.. முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது!

    பழிவாங்கல்

    பழிவாங்கல்

    அப்போதிருந்துதான் அரசியல் பழிவாங்கல் என்றாலே திகார்தான் என்ற பிம்பமும் ஏற்பட்டுவிட்டது. திகாருக்கு சென்றால், அது மிகப்பெரிய அவமானம் என்று அரசியல்வாதிகளால் உணரப்பட்டது. இந்திரா காந்தி மட்டுமல்ல, அவரை சுட்டுக் கொன்ற சத்வந்த் சிங்கும் இங்குதான் அடைக்கப்பட்டார். இதையடுத்துதான், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத், சுரேஷ் கல்மாடி.. என்று தலைவர்கள் திகாருக்கு அனுப்பப்பட நேர்ந்தது.

    ராசா

    ராசா

    தமிழகத்தை பொறுத்தவரை, 2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, இரட்டை இலை லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன், ஐஎன்எக்ஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம்.. என ஊழல் தலைகளை வரவேற்றது இந்த திகார்தான்.

    அன்னாஹசாரே

    அன்னாஹசாரே

    ஊழல் குற்றவாளிகள் மட்டுமல்லை.. ஊழலுக்கு எதிராக போராடிய அன்னாஹசாரே, கெஜ்ரிவாலும்கூட திகாருக்கு விலக்கல்ல. இப்போது கடைசியாக ப.சிதம்பரம் சென்றிருக்கிறார். திகாருக்கு மட்டும் அனுப்பாதீங்க என்று கபில்சிபல் கேட்டு கொள்ளும் அளவுக்கு "அரசியல் பழிவாங்கும்" நோக்குதான் திகார் என பலமாக கருதப்படுகிறது.

    திக்.. திக்

    திக்.. திக்

    மேலும் இப்படிப்பட்டவர்களை குறிவைத்து திகாருக்கு அனுப்பிவிடுவது, நீண்ட கால பழிவாங்கலை தீர்த்து கொள்வதாகவும்.. திகாருக்கே அனுப்பிவிட்டோம் என்று திருப்திபட்டு கொள்வதாகவும் எதிர்தரப்பினால் உணரப்படுகிறது! ஆக மொத்தம்.. திகார் என்றாலே அரசியல்வாதிகளுக்கு திக்.. திக்..தான்!

    English summary
    From Indira Gandhi to P Chidambaram, Why are National Politicians being sent to Tihar Jail
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X