சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Teachers Day: இந்தி எதிர்ப்பு...பாகிஸ்தானுடன் போர்...சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் வரலாற்றுப் பக்கம்!!

Google Oneindia Tamil News

சென்னை: சுதந்திர இந்தியாவின் முதல் மற்றும் இரண்டாவது குடியரசுத் தலைவராக இருந்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். ஆசிரியர் பணியைத் துவக்கி பின்னர் நாட்டின் உயரிய பதவி வகித்தவர். இவர் பிறந்த செப்டம்பர் 5ஆம் தேதியே ஆசிரியர் தினமாக ஆண்டு தோறும் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

வி. ராதாகிருஷ்ணன் என்று அழைக்கப்படும் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1888ல் செப்டம்பர் 5ஆம் தேதி பிறந்தார். தமிழ்நாட்டில் திருத்தணியில் இருக்கும் சர்வபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார்.

ஆசிரியர் தினம் 2020: ஆன்லைனில் ஆசிரியர் தின விழா போட்டிகள்... அசத்திய பள்ளி மாணவர்கள்ஆசிரியர் தினம் 2020: ஆன்லைனில் ஆசிரியர் தின விழா போட்டிகள்... அசத்திய பள்ளி மாணவர்கள்

குழந்தைகள்

குழந்தைகள்

தனது உறவினப் பெண் சிவகாமுவை தனது 16வது வயதில் மணமுடித்தார். இவர்களுக்கு 5 பெண் குழந்தைகளும், சர்வபள்ளி கோபால் என்ற மகனும் உள்ளனர். இவரது மகன் சர்வபள்ளி கோபால், இந்திய வரலாற்றுத் துறையில் முக்கிய நபராக பணியாற்றி வந்தார். 1956-ம் ஆண்டு, ராதாகிருஷ்ணன்னின் மனைவி சிவகாமு மறைந்தார்.

யுனெஸ்கோ தூதர்

யுனெஸ்கோ தூதர்

முதுகலைப் பட்டம் பெற்ற ராதாகிருஷ்ணன் 1909ல் சென்னை பிரசிடென்சி கல்லூரியிலும், 1918ல், மைசூர் பல்கலைக்கழகத்திலும், 1921ல், கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும் தத்துவப் பேராசிரியராக பணியாற்றினார். 1931 ஆம் ஆண்டு, ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக தேர்வு செய்யப்பட்டு இருந்தார். 1946ல், யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார்.

சோவியத் யூனியன்

சோவியத் யூனியன்

1931ஆம் ஆண்டு பிரிட்டன் நாட்டில் நன்றாக படித்த மேதைகளுக்கு வழங்கப்படும் சர் பட்டம் பெற்றார். 1949 ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் தூதராக நியமிக்கப்பட்டார். சோவியத் யூனியனுடன் வலுவான அடித்தளம் அமைக்க இந்தியாவுக்கு உதவியது.

பாகிஸ்தான் போர்

பாகிஸ்தான் போர்

1954ல், இவருக்கு இந்திய அரசு ‘பாரத ரத்னா' விருது வழங்கி கவுரவித்தது. இரண்டு முறை துணை ஜனாதிபதியாகப் பணியாற்றினார். பின்னர், 1962ல் இந்திய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இந்திய ஜனாதிபதியாக இருந்தபோதுதான், இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தானுடன் போர் நடந்தது. ஜனாதிபதியாக அவர் எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் நாட்டுக்கு மிகவும் உதவியது. 1967ல், ஜனாதிபதி பதவியிலுருந்து ஓய்வு பெற்று சென்னையில் குடியேறினார்.

ஆசிரியர் தினம்

ஆசிரியர் தினம்

தனது 86வது வயதில், ஏப்ரல் 17, 1975 ஆம் ஆண்டு சென்னையில் ராதாகிருஷ்ணன் காலமானார். இவர் ஆசிரியராக பணியாற்றி கல்விக்கு சிறந்த பணிகள் ஆற்றியதால், இவரது பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

நன்கொடை

நன்கொடை

நாட்டின் குடியரசுத் தலைவராக பதவியேற்ற போது இவரது வருமானம் ரூ.10,000. இதில் வெறும் ரூ.2,500 மட்டுமே எடுத்துக் கொண்டார். மீத சம்பளத்தை பிரதமரின் தேசிய நிவாரண நிதியத்திற்கு மாதந்தோறும் நன்கொடையாக வழங்கினார். இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு 16 முறையும், அமைதிக்கான நோபல் பரிசுக்கு 11 முறையும் ராதாகிருஷ்ணனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உயர்நிலைப்பள்ளி

உயர்நிலைப்பள்ளி

கடந்த 1938 ஆம் ஆண்டு சென்னை மாகாண முதலமைச்சராக ராஜாஜி இருந்தார். அப்போது, உயர் நிலைப் பள்ளிகளில் இந்தி மொழிப்பாடம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை வலுவாக எதிர்த்தார். அப்போது, சென்னை மாகாண காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார்.

Recommended Video

    Trichy க்கு கையில் Hall Ticket உடன் வந்த Sai Pallavi
    ராஜினாமா

    ராஜினாமா

    1965 ஆம் ஆண்டு மத்திய அரசின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து மத்திய அமைச்சர்களாக இருந்த சி. சுப்பிரமணியம், ஓ. வி. அழகேசன் இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அப்போது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி இவர்களது ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுமாறு குடியரசுத் தலைவராக இருந்த ராதாகிருஷ்ணனுக்கு பரிந்துரை செய்தார். ஆனால், இவர்களது ராஜினாமாவை ராதாகிருஷ்ணன் ஏற்க மறுத்துவிட்டார்.

    English summary
    Why are we celebrating Sarvepalli Radhakrishnan birth anniversary as teachers day
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X