சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜகவில் ஆளே இல்லையா.. முருகனே வாய் விட்டு குஷ்புவை கூப்பிடுகிறாரே.. ரொம்ப திணறுதே?!

குஷ்புவை விடாமல் தன் கட்சியில் இழுக்க முயல்கிறது பாஜக

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவால் தனியாக சமாளிக்க முடியவில்லையா? முக்கிய பிரமுகர்கள் இல்லாமல் அந்த கட்சியால் அரசியல் செய்ய முடியவில்லையா? ஏன் ரஜினி முதல் குஷ்பு வரை விடாமல் விரட்டி கொண்டிருக்கிறார்கள்? என்ற கேள்வி பரவலாக எழுந்து வருகிறது!!

இந்திரா காந்தி காலத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி சமாச்சாரத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை.. ஆளுக்கு ஒரு கோஷ்டியை வைத்து கொண்டு விவகாரம் செய்து வருகிறார்கள்.

ஏதாவது ஒரு பிரச்சனை என்றால், உடனே டெல்லிக்கே ஃபிளைட் பிடித்து கொண்டு போய்விடுவார்கள். தங்களுக்கு நெருக்கமான தலைவர்களிடம் உட்கார்ந்து பேசி காரியத்தையோ, பிரச்சனையையோ சரி செய்து கொண்டு வருவார்கள். இதில்தான் குஷ்புவும் சிக்கினார்.

கள்ளத்தனமாக அந்நிய நாட்டிற்கு சென்றது அரசியல் சட்ட இடிப்பு இல்லையா மிஸ்டர் வைகோ? கேட்பது ஹெச். ராஜா கள்ளத்தனமாக அந்நிய நாட்டிற்கு சென்றது அரசியல் சட்ட இடிப்பு இல்லையா மிஸ்டர் வைகோ? கேட்பது ஹெச். ராஜா

அரசியல்

அரசியல்

ஆரம்பத்தில் இருந்தே எம்எல்ஏ, எம்பி சீட்டுக்கு குறி வைத்துதான் குஷ்பு அரசியலுக்குள் நுழைந்தார்.. திமுகவில் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்பதுடன் சில அதிருப்தி என்பதால்தான் காங்கிரசுக்கே போனார்.. இவரை மாநில காங்கிரஸ் தலைமை பதவிக்கு ஈவிகேஎஸ் போன்றோர் முயற்சித்தும் நடக்காமல் போயிற்று. அப்போதே குஷ்பு அப்செட் ஆனதாக சொல்லப்பட்டது. இதற்கு பிறகு எம்பி தேர்தலில் சீட் தந்தால் நிற்பேன் என்று பூடகமாக தன் ஆசையை சொன்னார்.. அப்போதும் சீட் கிடைக்கவில்லை.

பென்னிக்ஸ் மரணம்

பென்னிக்ஸ் மரணம்

இப்போது கட்சியின் செயல்பாடு குஷ்புவுக்கே பிடிக்கவில்லை.. நாளுக்கு நாள் அக்கட்சியை பகிரங்கமாகவே விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளார்.. டெல்லி தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை மனப்பூர்வமாக ஏற்று, கட்சி ஆக்டிவாக இல்லை என்பதை ஒப்புக் கொண்டார்.. பென்னிக்ஸ் மரணத்துக்கு துக்கம் விசாரிக்க மாநில தலைவர் சென்றபோது, அந்த இரங்கல் நிகழ்ச்சிக்கு கட்அவுட் வைத்து அழகிரியை வரவேற்றதையும் தப்பு என்று சுட்டிக்காட்டி, அந்த செயலுக்கு மன்னிப்பும் கேட்டார்.

ராகுல்காந்தி

ராகுல்காந்தி

அதேபோல, காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்க மறுத்ததும், சச்சின் பைலட், ஜோதிர் ஆதித்ய சிந்தியா போன்றவர்கள் தலைவர் பதவியை ஏற்கலாம் என்ற கருத்துக்கு குஷ்பு தன் ஆதரவை வெளிப்படையாகவே சொன்னார். அப்போதிருந்தே அவர் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுவிட்டதாக சொல்லப்பட்டது.

கல்யாணராமன்

கல்யாணராமன்

இந்த சமயத்தில்தான் பாஜகவில் குஷ்பு இணைய போவதாக மற்றொரு செய்தி கசிய தொடங்கியது. இதை தொடங்கி வைத்ததே பாஜகவின் கல்யாணராமன்தான்.. "விரைவில் குஷ்பூ சுந்தரை கமலாலயத்தில் எதிர்பார்க்கலாம்" என்று பதிவிட்டிருந்தார்.. ஒரு தேசிய கட்சியில், குஷ்பு இணைவது குறித்து இவர் ஏன் ட்வீட் போட்டார், இவர் என்ன பாஜகவின் பிரதிநிதியா? என்று சந்தேகம் வலுத்தபோது, கல்யாணராமனுக்கு டேக் செய்து "பகல் கனவா??" (Day dreaming??) என்று கேட்டு குஷ்பு பதில் ட்வீட்டை போட்டார்.

தீவிரம்

தீவிரம்

இதற்கு பிறகுதான் நிலைமை இன்னும் தீவிரமானது.. இப்போது பகிரங்கமாகவே பாஜக குஷ்புவை கட்சிக்கு அழைத்துள்ளது.. இதற்கு என்ன காரணம்? ஏன் விடாமல் குஷ்புவை பாஜக துரத்துகிறது என்பது அரசியல் நோக்கர்கள் சிலரிடம் பேசினோம்.. அவர்கள் அனுமானமாக சொன்னதாவது:

கட்சி பதவி

கட்சி பதவி

"உண்மையை சொல்லபோனால், திமுகவில் இருந்து விலகின சமயத்துலலேயே குஷ்புவிடம் பாஜக பேச்சுவார்த்தை நடத்தியதாக ஒரு தகவல்.. ஆனால் ஆளுநரா இருந்த தமிழிசைதான் அவரை இணைத்து கொள்ள மறுப்பு சொன்னாங்கன்னு சொல்றாங்க.. அவங்க திமுகவில் இருந்தபோது, எம்எல்ஏ, எம்பி சீட் ஒதுக்கிடாம ஒரு குரூப் தடுத்துட்டே இருந்தது.

தேர்தல்

தேர்தல்

இப்போ எம்பி தேர்தலிலும் காங்கிரஸ் வாய்ப்பு தரல.. இருந்தாலும், தேசிய அரசியலில் மட்டுமே கவனம் செலுத்திட்டு வர்றாங்க.. தினேஷ் குண்டுராவ் நிகழ்ச்சியில், கட்சியையே பகிரங்கமாக குறை சொன்னதுதான் இப்போ பிரச்சனை பெரிசாயிடுச்சு.. இதுக்கப்பறம்தான் அவருடைய கணவர் சுந்தர்.சி மாநில தலைவரை முருகனை போய் சந்தித்து பேசிட்டு வந்ததா தெரியுது.

நட்டா

நட்டா

கடைசிவரை எந்த வாய்ப்பும் தனக்கு தரப்படவில்லை என்பது இவங்களுக்கு எப்பவுமே இருக்கிற மனக்குறை.. இப்போகூட ஜே.பி.நட்டாவை சந்திக்க இருக்கிறதா சொல்றாங்க.. அரசியலில் இத்தனை வருஷமாக இருக்கும் தன்னை எந்த கட்சியும் பயன்படுத்தி கொள்ளாத நிலையில், நட்டாவிடம் ஏதாவது முக்கிய பொறுப்பு கேட்கலாம்.. இல்லாட்டி, இல்லையென்றால், வரப்போகிற தேர்தலில் சீட் கேட்கலாம்.. அந்த முடிவை வெச்சுதான் இவங்க அரசியல் நகர்வு இனி இருக்கும்னு தோணுது.

வடமாநிலம்

வடமாநிலம்

அதேமாதிரி, காங்கிரஸ் இதையெல்லாம் கவனிச்சிட்டுதான் வருது.. குஷ்புவை சரிக்கட்ட முக்கிய பொறுப்பு, சீட் தந்து தங்களுடனேயே வைத்து கொள்ளவும் ஒரு சான்ஸ் இருக்கு. ஒருவேளை பாஜகவில் இவங்க சேர்ந்துட்டால், வடமாநிலங்களில் நடிகைகளின் பிரச்சாரம் எந்த அளவுக்கு எடுபடுகிறதோ, அப்படி குஷ்புவுக்கு ஒரு வரவேற்பு இங்கே கண்டிப்பா இருக்கவே செய்வும்.. திமுக, காங்கிரஸ் கட்சியின் பலவீனங்கள் இவங்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்கிறதால, அதையே பிரச்சாரத்துல கொண்டு வந்து சரவெடி வெடிக்க வாய்ப்பு இருக்கு.

 மைனஸ்

மைனஸ்

ஆனால், பாஜகவின் மதவாத அரசியல் இவங்களுக்கு எப்படி ஒத்து போகும் என்றுதான் தெரியவில்லை.. மதவாதத்துக்கு எதிராக பலமுறை கருத்தை சொல்லி இருக்கும்போது, அது இவங்களுக்கே மைனஸாக அமையலாம்.. இதோ இந்த வேளாண் மசோதா வரைக்கும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு சொல்லிட்டாங்க.. ஆனால், இவ்வளவு காலம் குஷ்புக்கு பதில் சொல்லிட்டு இருந்த பாஜக, கொஞ்ச நாளாகவே அமைதியை கடைப்பிடிக்குது.. இதையெல்லாம் பார்த்தால், இவங்க அந்த கட்சியில் சேர நிறைய வாய்ப்பு இருக்கு.

முருகன்

முருகன்

இன்னொரு விஷயம், தனித்து போட்டி, 60 சீட்ல சும்மாவே ஜெயிப்போம் என்று முருகன் சொல்லிட்டாலும் அது அவ்வளவு சுலபமல்ல.. ரஜினி வராத நிலையில் வேறு ஒரு முக்கிய பிரபலம் கட்சிக்கு தேவைப்படுகிறது. அதனால்தான் "குஷ்பு தைரியமானவர்.. பாஜகவுக்கு கட்டாயம் வரணும்"ன்னு அண்ணாமலை சொன்னார்.. குஷ்பு வந்தால் நிச்சயம் வரவேற்போம் என்று முருகனும் சொல்லி உள்ளார்.. அதனால் குஷ்புவின் பாஜக வருகையை தவிர்க்க முடியாதது போல்தான் தெரிகிறது" என்றனர்.

English summary
Why BJP leaders are wooing other party VIPS
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X