சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேலூர் தேர்தல்.. இஸ்லாமிய வாக்குக்கு குறி.. பாஜகவை நாசூக்காக கழட்டி விட்ட அதிமுக

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக குறி வைக்கும் முஸ்லீம் ஓட்டுக்கள்.. காரணம் என்ன ?- வீடியோ

    சென்னை: வேலூர் லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக பாஜக தலைவர்கள் புறக்கணித்து அதிமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது இஸ்லாமியர்களின் வாக்கு வங்கிக்காகவே என்று எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள்.

    வேலூர் லோக்சபா தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். நாம் தமிழர் சார்பில் தீபலட்சுமி போட்டிடுகிறார்.

    இதில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் கடந்த சில நாள்களாக தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். இதேபோல் அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறாரகள்.

     காஷ்மீரில் ஏதோ நடக்கப்போகுது.. பீதியில் மக்கள்.. கூடுதலாக 28 ஆயிரம் ராணுவ வீரர்கள் விரைகிறார்கள் காஷ்மீரில் ஏதோ நடக்கப்போகுது.. பீதியில் மக்கள்.. கூடுதலாக 28 ஆயிரம் ராணுவ வீரர்கள் விரைகிறார்கள்

    சென்ற முறை படுதோல்வி

    சென்ற முறை படுதோல்வி

    தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதிமுக 37 இடங்களில் படுதோல்வி அடைந்து ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. எனவே வேலூரில் வெற்றி பெற்று பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று உறுதியாக உள்ளது.

     அதிமுக வேண்டுகோள்

    அதிமுக வேண்டுகோள்

    ஆனால் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜக வேலூர் தேர்தல் பிரச்சாரத்தில் இதுவரை ஈடுபடவில்லை. தமிழக பாஜக தலைவர்கள் யாருமே பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டாம் என அதிமுக தலைமை மறைமுகமாக வேண்டுகோள் விடுத்திருப்பதாக திமுகவினர் விமர்சித்து வருகிறார்கள்.

    எதிர்க்கட்சிகள் விமர்சனம்

    எதிர்க்கட்சிகள் விமர்சனம்

    வேலூரில் பாஜக தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டால் இஸ்லாமியர்கள் வாக்கு கிடைக்காமல் போகும் என்ற பயத்தால் அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்படவில்லை என அங்கு எதிர்க்கட்சியினர் விமர்சித்துள்ளனர். ஏனெனில் பாஜகவின் கொடிகள் பிரச்சாரத்தில் தென்படவில்லை என்றும், மாநிலங்களவை எம்பி முகமது ஜான் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

    பாமக ஆதரவு

    பாமக ஆதரவு

    அதேநேரம் ஆம்பூர் விஜயகாந்த் மனைவியின் சொந்த ஊர் என்பதால் அங்கு பிரேமலதா விஜயகாந்தை பிரச்சாரத்தில் அதிமுக களத்தில் இறக்கிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வன்னியர் வாக்குகளை கவருவதற்கு பாமகவின் ஆதரவு இருப்பதால் அதிமுக பாமகவையும் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தி வருகிறது. இதன் மூலம் இஸ்லாமியர்கள் மற்றும் வன்னியர்களின் ஆதரவை பெருவாரியாக பெற்று வெற்றி பெற முடியும் என அதிமுக நம்புவதாக கூறப்படுகிறது.

    English summary
    why bjp leaders not participate vellore lok sabha election campaign, aiadmk master move for vote bank of muslims and vaaniyar
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X