சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிவி விவாதங்களில் இருந்து பாஜக விலகிய 10 நாட்களில்தான் இத்தனை கூத்தும் நடந்திருக்கிறது!

Google Oneindia Tamil News

சென்னை: டிவி விவாதங்களில் இருந்து பாஜக விலகிய 10 நாட்களில் தமிழகத்துக்கு எதிரான ஏராளமான அறிவிப்புகளை மத்திய அரசு அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. இந்த அறிவிப்புகள் அனைத்தும் விவாதங்களாக்கப்படும் என தெரிந்தேதான் பாஜக அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் தமது கொள்கைகளை படுதீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒரே தேசம் என்ற முழக்கத்தை அனைத்து துறைகளிலும் தீவிரமாக திணித்து வருகிறது டெல்லி.

வைகோ காலைப் பிடித்துக் கேட்கிறேன்.. தயவு செய்து அதைப் பேசுங்க.. பொன். ராதாகிருஷ்ணன் பரபர பேச்சு வைகோ காலைப் பிடித்துக் கேட்கிறேன்.. தயவு செய்து அதைப் பேசுங்க.. பொன். ராதாகிருஷ்ணன் பரபர பேச்சு

நீட் மசோதா தள்ளுபடி

நீட் மசோதா தள்ளுபடி

நீட் தேர்வு மசோதாவை 2 ஆண்டுகளுக்கு முன்னரே நிராகரித்துவிட்டதாக தற்போது திடீரென அறிவித்தது; அதனைத் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலையை கடுமையாக உயர்த்தி உள்ளது.

நியூட்ரினோவுக்கு ஒப்புதல்

நியூட்ரினோவுக்கு ஒப்புதல்

அதேபோல் 10% இடஒதுக்கீட்டை உக்கிரமாக அமல்படுத்தி வருகிறது பாஜக. அத்துடன் தேனியில் நியூட்ரினோ திட்டத்தை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழை நீக்கிய மத்திய அரசு

தமிழை நீக்கிய மத்திய அரசு

மேலும் தபால்துறை தேர்வுகளில் தமிழை நீக்கியிருக்கிறது மத்திய அரசு. இவை அனைத்துமே ஊடகங்களில் விவாதிக்கப்படுகிறவை. டிவி விவாதங்களுக்குப் போனால் இவற்றை நியாயப்படுத்தி பேச வேண்டும் அல்லது சப்தம் போட்டு நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும்.

பாஜக முடிவு

பாஜக முடிவு

இந்த இரண்டுமே மக்கள் மத்தியில் இருக்கும் கெட்ட பெயரை மேலும் அதிகரிக்கவே செய்யும். இதனால்தான் என்னவோ பாஜக முன்கூட்டியே ஊடக விவாதங்களுக்குப் போவதில்லை என முடிவெடுத்திருக்கக் கூடும்.

English summary
Here is the reason behinds the BJP's decision to boycott from the TV Debates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X