• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க துடிக்கும் பாஜக, காங். தந்த கச்சத்தீவை மீட்போம் என சொல்லாதது ஏன்?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக மீனவர்கள் பிரச்சினை, இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக மணிக்கணக்கில் லாவணி கச்சேரி பேசும் பாஜக தேர்தல் அறிக்கையில் இதனை திட்டமிட்டே புறக்கணித்திருப்பதுதான் தமிழ் மக்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இப்படி தமிழர் நலனை புறக்கணித்துவிட்டு இந்த மண்ணில் எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என பாஜக எப்படி கேட்கிறது என்பதும் அதிர்ச்சியாகவே இருக்கிறது.

சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்ய வந்த பிரதமர் மோடி, எங்களுடைய ஆட்சியில் ஒரு தமிழக மீனவர் கூட இலங்கை சிறையில் இல்லை; பெரும்பாலான படகுகளை மீட்டுவிட்டோம்; சில படகுகளையும் மீட்போம் என சகட்டுமேனிக்கு அடித்துவிட்டார். யதார்த்தம் என்ன என்பது தெரியாமல் ஒரு பிரதமரே இப்படி பேசலாமா என கொந்தளித்தனர் மீனவர்கள்.

மீனவர்களுக்கு தனி அமைச்சகமே அமைத்திட்டோம் என்றெல்லாம் மார்தட்டினர் பாஜகவினர். ஆனால் தமிழக சட்டசபை தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ஏதோ போகிற போக்கில் மீனவர்களுக்கு சில உட்கட்டமைப்பு, வாழ்வாதார வாக்குறுதிகள் மட்டுமே தரப்பட்டுள்ளன.

 தமிழக மீனவர் பிரச்சினை

தமிழக மீனவர் பிரச்சினை

இலங்கை கடற்படையால் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் தமிழ்நாட்டு மீனவர்கள் கொடூரமாக தாக்கப்படுவதும் படுகொலை செய்யப்படுவதும் தொடர் கதையாகிறதே.. இதனைத் தடுக்க தீர்வு ஏதேனும் முன்வைத்திருக்கிறதா? இல்லை.. இனியும் இப்படி நடந்தால் இலங்கையை எச்சரிப்போம் என்கிறதா? இல்லை.

கச்சத்தீவு மீட்பு

கச்சத்தீவு மீட்பு

70 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை இந்திய வரைபடத்தில் சேர்த்துக் கொண்டு டாம்பீகம் பேசுகிறது பாரதிய ஜனதா கட்சி... ஏன் 40 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவால் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்டுத் தருவோம்; கச்சத்தீவை மீட்டு தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டியே தீருவோம் என வாக்குறுதி கொடுக்காமல் பம்முவது ஏன்?

அக்கறை அவ்வளவுதான்

அக்கறை அவ்வளவுதான்

உங்களின் தமிழர் நலன் மீதான அக்கறை அவ்வளவுதான்.. தமிழ் எழுத்துகள் மீது அக்கறை காட்ட மறுக்கும் நீங்கள்.. தமிழர் தலை எழுத்தினை மாற்றுவீர்கள் என நம்பத்தான் முடியுமா? அடுத்து இலங்கை தமிழர் பிரச்சனை.

ஈழத் தமிழர் பிரச்சனையே இல்லையா?

ஈழத் தமிழர் பிரச்சனையே இல்லையா?

ஈழத் தமிழர் பிரச்சனையில் எப்ப பார்த்தாலும் 13வது அரசியல் சாசன திருத்தம், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்றெல்லாம் பிரசங்கம் செய்வது பாஜகவின் வாடிக்கை. ஆனால் அதன் தேர்தல் அறிக்கையில் அப்படி ஒரு கடுமையான மவுனமாக கடந்து போகிறார்களாம்..

அன்று கேட்டதே தமிழகம்

அன்று கேட்டதே தமிழகம்

கேட்டால் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவோம் என சொல்லி இருக்கிறோம் என்கிறார். இதனைத்தானே சி.ஏ.ஏ.வை நீங்கள் கொண்டுவந்த போது ஏன் அந்த மசோதாவில் இலங்கையும் இல்லை.. இலங்கை இந்துக்களான தமிழர்களும் இல்லை என்று ஒட்டுமொத்த தமிழகமுமே கேட்டது? வியாக்கியானங்கள் விலாவாரியாக விழுந்த போதும் ஒன்றும் நடக்கவில்லை.. உங்கள் தேர்தல் அறிக்கையிலும் எதுவும் இல்லை. அப்புறம் எந்த முகத்தை வைத்துக் கொண்டு இந்த தமிழ் நிலத்தில் வாக்கு கேட்கும் துணிச்சல் பாஜகவுக்கு இருக்கிறதோ?

English summary
Tamilnadu BJP's Election Manifesto not speak on Tamilnadu Fishermen issue and Eelam Tamils Issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X