சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திடீரென கிளம்பி போன குருமூர்த்தி.. ரஜினியிடம் பேசியது என்ன.. "அதை" கேட்டாராமே.. கிடைக்குமா?

ரஜினிகாந்த்தை குருமூர்த்தி சந்தித்து பேசியதன் பின்னணி என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: நேற்றிரவு குருமூர்த்தி, ரஜினியை சந்தித்து பேசியுள்ளார்.. அவர் என்ன பேசினார்? ஏன் இந்த சந்திப்பு என்பது குறித்த சலசலப்பு இன்னமும் அடங்கவே இல்லை.

ரஜினிகாந்த் எப்போது அரசியல் கட்சியை ஆரம்பிப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தவேளையில், 4 நாளைக்கு முன்பு சோஷியல் மீடியாவில் வந்த கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியது.... அந்த கடிதத்தில் ரஜினிக்கு சிங்கப்பூர், அமெரிக்காவில் நடந்த ஆபரேஷன்களை பற்றி குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த கடிதம் உண்மையா? இல்லையா? என்று குழப்ப நிலையில் 2 நாளாக அவரது ரசிகர்கள் தவித்த நிலையில், ரஜினிகாந்தே தனது ட்விட்டர் மூலம் விளக்கம் தந்து முற்றுப்புள்ளி வைத்தார்.

பட்டென போட்டு உடைத்த ரஜினி.. வீடு தேடி சந்தித்த குருமூர்த்தி.. திடீர் திருப்பம்.. பரபர பின்னணி! பட்டென போட்டு உடைத்த ரஜினி.. வீடு தேடி சந்தித்த குருமூர்த்தி.. திடீர் திருப்பம்.. பரபர பின்னணி!

 உடல்நலம்

உடல்நலம்

சொல்லப்பட்ட தகவல்கள் அனைத்தும் உண்மை என்றும், தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்" என்றார்.

 ரசிகர்கள்

ரசிகர்கள்

இதையடுத்து அதிர்ச்சியான அவரது ரசிகர்கள் போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டு முன்பு குவிந்து, அவர் அரசியலுக்கு வர அழைப்பு விடுத்து வருகின்றனர்.. சிலர் அவருக்கு ஆதரவாக போஸ்டர்களை அண்ணா அறிவாலயம் முன்பு ஒட்டி வருகிறார்கள்.. சிலர் வெறுத்துபோய் திமுகவிலேயே சேர்ந்துவிட்டனர்.

 போயஸ் கார்டன்

போயஸ் கார்டன்

இந்நிலையில்தான், ரஜினியின் ஆதரவாளர்கள் அவரை ஒவ்வொரு நாளாக நேரில் சந்தித்து பேசி வருகிறார்கள்... ட்விட்டரில் விளக்கம் தந்த அன்றே தமிழருவி மணியன் போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்றார்.. என்ன பேசினார் என்று தெரியவில்லை.. ஆனால் ரஜினியின் உடல்நலம் குறித்து விசாரித்ததாக சொல்லப்படுகிறது..

 அரசியல் சூழல்

அரசியல் சூழல்

அதற்கு பிறகு நேற்று துக்ளக் ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்தி போயஸ்கார்டன் வீட்டுக்கு சென்று ரஜினிகாந்தை சந்தித்து பேசினார்.. ராத்திரி 7 மணிக்கு சென்றிருக்கிறார்.. ரஜினியின் உடல் நலம், அரசியல் சூழல்கள், அரசியல் செயல் திட்டங்கள் குறித்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக 2 பேரும் ஆலோசித்ததாக சொல்லப்படுகிறது.

 பாஜக

பாஜக

ஆனால் இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. ரஜினிகாந்த்தை அதிகமாக அரசியலுக்கு வரும்படி அழைத்து கொண்டிருப்பது பாஜகதான்.. அமித்ஷா முதல் அண்ணாமலை வரை ரஜினியை அழைத்து பார்த்துவிட்டார்கள்.. பொன்.ராதா முதல் வானதி வரை நேரடியாகவே அழைப்பும் விடுத்துவிட்டனர்.. இறுதிவரை ரஜினியிடம் அதற்கான அறிகுறியே இல்லாத பட்சத்தில், பாஜக அதிர்ந்து போய்விட்டதாம்.

 ஜோதிடர்கள்

ஜோதிடர்கள்

அப்போது ரஜினி, தன்னுடைய உடல்நிலை குறித்தும் பேசியிருக்கிறார்.. இன்னொரு முறை உடல்நல பிரச்சினைகள் வர வாய்ப்பு இருப்பதாக ஜோதிடர்கள் பலர் கருத்து சொல்லி வருவதாகவும், இந்த சமயத்தில் தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்தால், அது மேலும் பாதிப்பை தரும் என்றாராம்.. ஒருவேளை கட்சி ஆரம்பித்து, அதை திறன்பட செயல்படுத்த முடியாமல் போனால், இருக்கும் இமேஜும் மொத்தமாக சரிந்துவிடும் என்றும் சொன்னாராம்.

 ரஜினி வாய்ஸ்

ரஜினி வாய்ஸ்

அதற்கு குருமூர்த்தியோ, அப்படியானால் அன்று எப்படி திமுகவுக்கு ரஜினி வாய்ஸ் தந்தீர்களோ அதுபோலவே இப்போதும் பாஜகவுக்கு வாய்ஸ் தாருங்கள் என்று கேட்டுள்ளதாக தெரிகிறது.. இதற்கு ரஜினி எந்த பதிலையும் சொல்லவில்லையாம்.. குருமூர்த்திக்கு எந்த நம்பிக்கை வார்த்தையும் தரவில்லையாம்.. இதெல்லாம் உண்மையா என்று தெரியவில்லை. ஆனால், பாஜக விடாமல் இன்னமும் ரஜினியை நம்பி கொண்டே இருக்கிறது என்று மட்டும் தெளிவாகிறது.

 வாய்ஸ்

வாய்ஸ்

இதுகுறித்து அரசியல் நோக்கர்கள் சிலரிடம் பேசினோம், அவர்கள் சொன்னதாவது, "எந்த கட்சிக்கு ஆதரவு தருவது என்பது அவரவர் விருப்பம்.. யாரும் கட்டாயப்படுத்த முடியாது.. அன்று மூப்பனார் பின்புலமாக இருந்தார்.. ரஜினியின் செல்வாக்கும் வேற லெவலில் இருந்தது.. திமுகவுக்கு அவரது வாய்ஸ் சாதகமானது.. இப்போது ரஜினி ரசிகர்களிடமே ஒருவித சோர்வு தென்படுகிறது.. பாஜகவின் நிழல் என்ற பிம்பமும் ரஜினி மீது இன்னமும் உடையவில்லை.. ஒருவேளை இவர் பாஜகவுக்கு ஆதரவு தந்தால், அப்போது ரஜினிக்கான செல்வாக்கு மேலும் குறையவே செய்யலாம்" என்றனர்.

English summary
Why BJPs Gurumurthy Met Rajinikanth in Poes Garden houseWhy BJPs Gurumurthy Met Rajinikanth in Poes Garden house
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X