சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எழுத்துக்களே இல்லாத சமஸ்கிருதத்தில் எதற்கு செய்தி ஒளிபரப்பு - வேல்முருகன் கண்டனம்

இந்தித் திணிப்பே இந்தியா முழுவதும் எதிர்க்கப்படும் சூழலில், யாருக்குமே தாய்மொழியாக இல்லாத சமஸ்கிருதத்தில் ஏன் தொலைக்காட்சி ஒளிபரப்பு? என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல் முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: இந்தித் திணிப்பே இந்தியா முழுவதும் எதிர்க்கப்படும் சூழலில், யாருக்குமே தாய்மொழியாக இல்லாத சமஸ்கிருதத்தில் ஏன் தொலைக்காட்சி ஒளிபரப்பு? பார்க்க ஆளே இல்லாது, மக்களின் காசைக் கரியாக்கும் இந்த வீண்வேலையை வன்மையாகக் கண்டிப்பதுடன், இதைக் கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

சமஸ்கிருத மொழி என்பது எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. காரணம், அதற்கு எழுத்தே கிடையாது. சடங்குகளின் போது உதிர்க்கப்படும் ஒலி வடிவம், அவ்வளவுதான் அம்மொழி.

Why broadcast news in Sanskrit without letters - Velmurugan condemn

அந்தச் சடங்கில் ஒலிவடிவம் உதிர்க்கும் இருவர் சந்தித்துக் கொண்டாலும், அவர்கள் அந்தச் சமஸ்கிருதத்தில் பேசிக் கொள்வதில்லை. காரணம் சடங்கின் போது ஒவ்வொருவர் உதிர்க்கும் ஒலி வடிவமும் முரண்பாடானதாக இருக்கும்.

சமஸ்கிருதத்தில் நூல்கள் இருப்பதாகச் சொன்னாலும் வேறு மொழி எழுத்தில்தான் அவை இருக்கும். ஆகவே அது யாருக்கும் தாய்மொழியாக இல்லாத ஒரு மொழி என்பதுதான் உண்மை.

சமஸ்கிருத ஒலி வடிவத்திலிருந்தும் வேறு சில மொழிகளிலிருந்தும் உண்டாக்கப்பட்ட மொழிதான் ஹிந்தி. அதிலும் கூட போஜ்புரி ஹிந்தி, ராஜஸ்தானி ஹிந்தி, சட்டீஸ்கரி ஹிந்தி எனப் பல வகைகள் உள்ளன; பொதுவான ஹிந்தி என்று ஒன்றே கிடையாது. ஆனால் பலவித ஹிந்தி பேசுவோரையும் சேர்த்துக் கூட்டி, ஹிந்தி பேசுவோர்தான் அதிகம் பேர் என்று கதை கட்டுகின்றனர்.

சமஸ்கிருத செய்தித் திணிப்பு.. தமிழினம் ஒருபோதும் ஏற்காது.. தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம்சமஸ்கிருத செய்தித் திணிப்பு.. தமிழினம் ஒருபோதும் ஏற்காது.. தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம்

அப்படிப் பெரும்பான்மையோர் பேசாத இந்தி, ஆட்சி மொழி கிடையாது; ஆங்கிலத்தோடு ஹிந்தியும் ஓர் அலுவல் மொழிதான். அதைத் திணிக்கப் பார்த்து, அதற்கெதிராகக் குறிப்பாகத் தமிழ்நாட்டில் பெரும் போராட்டமே ஏற்பட்டு விரட்டியடிக்கப்பட்டது.

இப்போது யாருக்குமே தாய்மொழியாக இல்லாத சமஸ்கிருதத்தை புதிய கல்விக் கொள்கை-2020இல் சேர்த்திருப்பதோடு, சமஸ்கிருதத்தில் செய்தித் தொகுப்பு ஒளிபரப்ப வேண்டும் என்று மாநில மொழிச் சேனல்களுக்கெல்லம் ஒன்றிய அரசின் பிரசார் பாரதி மூலம் 26.11.2020 தேதியிட்ட சுற்றறிக்கையும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

இதனை வன்மையாகக் கண்டிப்பதுடன், உடனடியாக இந்த சுற்றறிக்கையை வாபஸ் பெற வேண்டும்; புதிய கல்விக் கொள்கையிலிருந்து சமஸ்கிருதத்தை நீக்க வேண்டும் என்றும் எச்சரிக்கிறோம்.

வேஷ்டி வரை முடிவெடுக்க வேண்டும்.. 3 மாதத்தில் ரஜினிக்கு இதுவெல்லாம் சாத்தியமா?வேஷ்டி வரை முடிவெடுக்க வேண்டும்.. 3 மாதத்தில் ரஜினிக்கு இதுவெல்லாம் சாத்தியமா?

அதோடு, யாருக்கும் தாய்மொழி இல்லாத மற்றும் மொழிக்குரிய தகுதி ஏதும் இல்லாது ஒரு மொழியாகவே இல்லாத சமஸ்கிருதம் என்பதை அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையிலிருந்து உடனடியாகத் நீக்குமாறும் வலியுறுத்துகிறோம்.

இந்தித் திணிப்பே இந்தியா முழுவதும் எதிர்க்கப்படும் சூழலில், யாருக்கும் தாய்மொழியாக இல்லாத சமஸ்கிருதத்தில் ஏன் தொலைக்காட்சி ஒளிபரப்பு?

பார்க்க ஆளே இல்லாது, மக்களின் காசைக் கரியாக்கும் இந்த வீண்வேலையை வன்மையாகக் கண்டிப்பதுடன், இதைக் கைவிடுமாறு எச்சரிக்கவும் செய்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

English summary
In an environment where Hindi dumping is being opposed all over India, why television broadcasts in Sanskrit, which is not the mother tongue of anyone? TamilNadu Valvurimai Party leader Velmurugan has strongly condemned this wasteful act of charging people's money and demanded that it be abandoned.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X