சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பரம வைரிகள் சசிகலா- சந்திரலேகா திடீர் சந்திப்பு.. காரணம் பாஜக இல்லையாம்... சொத்து பஞ்சாயத்தாமே!

Google Oneindia Tamil News

Recommended Video

    Reasons of Chandralekha - Sasikala meeting

    சென்னை: பரம வைரிகளான சசிகலாவும் மாஜி ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகாவும் சந்தித்து பேசியதால் ஏகப்பட்ட அரசியல் யூகங்கள்... ஆனால் இச்சந்திப்பே பிரமுகர் ஒருவரின் சொத்து விவகாரங்கள் குறித்துதான் என கூறப்படுகிறது.

    கடலூர் ஆட்சித் தலைவராக சந்திரலேகா பதவி வகித்த காலத்தில்தான் அவரது தயவில் ஜெயலலிதாவின் கோட்டைக்குள் சசிகலா குடும்பம் காலடி வைத்தது. காலப்போக்கில் இந்த நட்பில் விரிசல் ஏற்பட்டு ஆசிட் வீச்சு வரைக்கும் போனது.

    தலைமை நீதிபதி இடமாற்ற பரிந்துரைக்கு எதிரான வழக்கு ஹைகோர்ட் விசாரிக்குமா? தீர்ப்பு ஒத்திவைப்புதலைமை நீதிபதி இடமாற்ற பரிந்துரைக்கு எதிரான வழக்கு ஹைகோர்ட் விசாரிக்குமா? தீர்ப்பு ஒத்திவைப்பு

    அரசியல் பயணம்

    அரசியல் பயணம்

    பின்னர் சுப்பிரமணியன் சுவாமியுடன் சந்திரலேகா இணைந்து ஜனதா கட்சிப் பணிகளை மேற்கொண்டார். இப்போதும் சுப்பிரமணியன் சுவாமியுடன் இணைந்தே அரசியலில் பயணிக்கிறார் சந்திரலேகா.

    சசி.க்கு சு.சுவாமி ஆதரவு

    சசி.க்கு சு.சுவாமி ஆதரவு

    ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா அணியை ஆதரிப்பதில் படுதீவிரமாக இருந்தார் சுப்பிரமணியன் சுவாமி. இது எல்லோருக்கும் புரியாத புதிராக இருந்தது. சந்திரலேகாவின் நிலைப்பாடும் வெளிப்படையாக தெரியாமல் இருந்தது.

    சசிகலாவுடன் சந்திரலேகா சந்திப்பு

    சசிகலாவுடன் சந்திரலேகா சந்திப்பு

    இந்நிலையில்தான் பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திரலேகா திடீரென சந்தித்து பேசியிருக்கிறார் என்கிற தகவல் வெளியானது. அதிமுகவின் எதிர்காலம் தொடர்பாகத்தான் இச்சந்திப்பு நடைபெற்றதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின.

    சொத்து விவகாரமா?

    சொத்து விவகாரமா?

    ஆனால் தற்போது, ஜெயலலிதா முகாமில் சசிகலா கோலோச்சிக் கொண்டிருந்த போது அவருடன் இணைந்து முதலீடுகள் செய்த தொழிலதிபருக்காகத்தான் இந்த சந்திப்பு நடந்ததாம். அந்த முதலீடுகள் அனைத்தும் சசிகலா தரப்பு வசம் இருக்கிறதாம். இதை உரிய முறையில் பங்கீடுவது தொடர்பாகத்தான் சந்திரலேகாவை மத்தியஸ்தராக கொண்டு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாம்.

    உண்மை என்னவோ!

    English summary
    Here the behind the reasons of Chandralekha - Sasikala meeting in Bengaluru Jail.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X