சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னைக்கு 2000 கிலோ நாய் இறைச்சி கொண்டுவர தேவை என்ன? போலீசில் சிக்கியது எப்படி?

Google Oneindia Tamil News

Recommended Video

    எழும்பூர் ரயில் நிலையத்தில் 2000 கிலோ நாய்க்கறி பறிமுதல்

    சென்னை: மாட்டிறைச்சி என்று ஏமாற்றி கொண்டுவரப்பட்ட, 2000 கிலோ நாய் இறைச்சி, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நாய் இறைச்சி எதற்காக சென்னைக்கு கொண்டுவரப்பட்டது? இது எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது? என்பதன் பின்னணி குறித்து பார்ப்பதற்கு முன்பாக நாய்க்கறி தொடர்பான சில தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம்.

    உலகின் பல நாடுகள் நாய்க்கறி தின்பதை கேள்விப்பட்டிராத நிலையில், சில நாடுகளில், மக்கள் அதனை, சிக்கன், மட்டன் போல் சாப்பிட்டுதான் வருகிறார்கள்.

    எழும்பூர் ரயில் நிலையத்தில் 2000 கிலோ நாய்க்கறி பறிமுதல்.. சென்னைவாசிகள் கிரேட் எஸ்கேப் எழும்பூர் ரயில் நிலையத்தில் 2000 கிலோ நாய்க்கறி பறிமுதல்.. சென்னைவாசிகள் கிரேட் எஸ்கேப்

    வியட்நாம் அதிகம்

    வியட்நாம் அதிகம்

    உதாரணத்திற்கு, வியட்நாம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 லட்சம் நாய்கள், உணவுக்காக கொல்லப்படுகின்றன. ஐரோப்பா, ரஷ்யா, ஆப்பிரிக்கா லத்தீன் அமெரிக்கா, சீனா, பிலிப்பைன்ஸ், தென்கொரியா மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் நாய்க்கறி என்பது பரவலான ஒன்றாக உள்ளது.
    நாய்க்கறி திருவிழா அவ்வப்போது நடத்தப்படுவதும் அவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்துவதும் கூட வாடிக்கை. விலங்கு ஆர்வலர்கள், குறிப்பாக, நாய் பிரியர்கள் இதுபோன்ற விழாக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாய்க்கறி திருவிழா அவ்வப்போது நடத்தப்படுவதும் அவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்துவதும் கூட வாடிக்கை. விலங்கு ஆர்வலர்கள், குறிப்பாக, நாய் பிரியர்கள் இதுபோன்ற விழாக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    ரேபிஸ் நோய்

    ரேபிஸ் நோய்

    நாய்க்கறி சாப்பிடுவதால் சில வியாதிகள் மனிதர்களை எளிதாக தொற்றிக் கொள்ளும். அதில் முக்கியமான ஒரு வியாதி, என்பது ரேபிஸ். நாய்களுக்கு வரக்கூடிய ரேபிஸ் நோய், அதை சாப்பிடக்கூடிய மனிதர்களுக்கும் பரவி விடுகிறது. ஒவ்வொரு ஆண்டும், பிலிப்பைன்ஸ் நாட்டில், சராசரியாக 10,000 நாய்களும், 300 மனிதர்களும், ரேபிஸ் நோய் காரணமாக பலியாகிறார்கள். உலக சுகாதார நிறுவனம் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பு ஊசியை செலுத்தி வந்தாலும் கூட, இந்த நோய் இன்னும் கட்டுப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    நாய்க்கறியால் நோய்கள்

    நாய்க்கறியால் நோய்கள்

    நாய்க்கறி உண்பதன் காரணமாக பாக்டீரியாக்களால் ஏற்படும் ஆந்த்ராக்ஸ், லெப்டோஸ்பிரோசிஸ் போன்ற நோய்களும், காலரா போன்ற நோய்களுடன் தொடர்பான பாக்டீரியாவும், மனிதர்களுக்கு பரவக்கூடும். இது ஒருபுறமிருக்க, சென்னையில் நாய் இறைச்சிக்கான தேவை ஏன் அதிகரிக்கிறது என்று பார்க்கலாம்.

    சென்னை ரோட்டோர ஓட்டல்கள்

    சென்னை ரோட்டோர ஓட்டல்கள்

    சென்னையை பொறுத்த அளவில், பணிக்காகவும், கல்வி உள்ளிட்ட பிற தேவைகளுக்காகவும் குடும்பத்தைவிட்டு பிரிந்து தங்கியிருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் அதிகம். இவர்களின், உணவுத்தேவையை, அதிலும் குறிப்பாக இளைஞர்களின் உணவு தேவையை, ரோட்டோர கடைகள் தீர்த்து வைக்கின்றன. ஆம்பூர் பிரியாணி என்ற பெயரில் ஆங்காங்கு கடைகள் திறக்கப்படுவது என்பது சாதாரணமாகிவிட்டது. இதில் சில ரோட்டோர கடைகள் மட்டனுக்கு பதிலாக நாய்க்கறி பயன்படுத்தி பிரியாணி தயாரிப்பதாக சொல்லப்படுகிறது. பிரியாணி குறைந்த விலைக்கு கொடுக்கப்படுவதால், மட்டன் வாங்கி கட்டுப்படி ஆகாது என்பதால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்..

    சிக்கியது

    சிக்கியது

    இன்று எழும்பூர் ரயில் நிலையத்தில் நாய்க்கறியை அதிகாரிகள் சரியாக கண்டுபிடிப்பதற்கு பின்னணியில் ஒரு சுவாரசியம் உள்ளது. இந்த சோதனை நாய்க்கறிக்காக நடத்தப்பட்டது கிடையாது. பிற இறைச்சி தொடர்பான சோதனையின் போது தான் எதிர்பாராத விதமாக சிக்கிக்கொண்டுள்ளது நாய் இறைச்சி. சென்னையில் சில பெரிய ஓட்டல்களில், தரமற்ற மட்டன் பயன்படுத்தப்படுவதாக சமீப காலத்தில் செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக, சில பிரபல ஹோட்டல்களின் கிச்சன்களை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்து இருந்தனர். இதுபோன்ற சுகாதாரமற்ற மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி வருவதை தடுப்பதற்காக தான் ரயில் நிலையத்தில் சோதனை போடப்பட்டுக்கொண்டிருந்தது. அப்போது மாட்டிறைச்சி என்று கூறி கொண்டு வரப்பட்ட, பதப்படுத்தப்பட்ட பெட்டிகளைத் திறந்து பார்த்தபோது தான், அங்கே இருந்தது நாய்க்கறி என்பது தெரியவந்தது. இவ்வாறுதான் சிக்கிக் கொண்டுள்ளனர்.

    English summary
    Why Chennai's small Hotel outlets wants Dog meat instead of mutton to prepare biryani and how the police seized 2000 kgs of dog meats at Egmore railway station on Saturday morning?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X