சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பார்க்க அழகுதான்.. ஆனால் ஆபத்து இருக்குது.. சென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..

    சென்னை: சென்னை கடற்கரை பகுதிகளில் நேற்று இரவு, திடீரென நீல நிறத்தில் அலைகள் காட்சியளித்த விஷயம் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

    இந்த நிலையில், இப்படியான அலைகள் ஏன் ஏற்படுகின்றன, இதனால் ஆபத்து உண்டா, இயல்பானதுதானா என்பது தொடர்பாக கடல்சார் விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளனர்.

    இதற்கு முன்பாக பல்வேறு கடல் பகுதிகளிலும் இதுபோன்ற நீல நிற அலைகள் எழுந்துள்ளன என்றாலும் சென்னைக்கு இந்த அனுபவம் புதிது என்பதால், பழைய ஆய்வுகளை முழுமையாக சென்னை கடல் நிலையுடன் ஒப்பிட்டு பார்க்க முடியாது. ஆனால், அதை ஒரு ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியும்.

    சென்னையில் பரபரப்பு.. திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்.. குழப்பத்தில் மக்கள்சென்னையில் பரபரப்பு.. திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்.. குழப்பத்தில் மக்கள்

    பாசி காரணம்

    பாசி காரணம்

    கடலில் உள்ள சில வகை நச்சுத்தன்மை கொண்ட பாசிகள், தங்களை உண்ண வரும் சிறிய மீன்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள உமிழும் ஒளிதான் இப்படி நீல நிறத்தை எதிரொலித்திருக்கும் என்பது பொதுவான பார்வையாகும். இவ்வாறு நீல வண்ணம் வெளிப்படும்போது பெரிய வகை மீன்கள் அப்பகுதிக்கு வந்து, சிறிய மீன்களை பிடித்து சாப்பிட்டுவிடுமாம். இதனால் இந்த பாசிகள், அப்பாடா என்று நிம்மதியடையும். இதுபற்றி ஆய்வாளர்கள் சொல்லும் தகவல்களை தொகுத்துள்ளோம் பாருங்கள்:

    பார்க்க அழகாக இருக்கும், ஆனால் ஆபத்து

    பார்க்க அழகாக இருக்கும், ஆனால் ஆபத்து

    இவை உருவாக்கும் காட்சி பார்க்க அழகாக இருந்தாலும், அதன் வருகை நல்ல செய்தியாக இருக்காது. நொக்டிலுகா என்பது பிளாங்க்டோனிக் உயிரினங்களின் (diatoms) கொடூரமான வேட்டையாடுபவர்களாக அறியப்படுகிறது. இது கடல் உணவு சங்கிலியை சீர்குலைக்க வழிவகுக்கும். இவை அதிக அளவு அம்மோனியாவையும் வெளியேற்றுகின்றன, இதனால் பெரிய அளவில் மீன்கள் செத்து குவியும் வாய்ப்பு உள்ளது. இந்த பாசி திட்டுகள் கடலோர மாசுபாடு மற்றும் கழிவுகள் வெளியேறுவதன் காரணமாக ஏற்படுவதாகவும் கூறப்படுவது உண்டு.

    பூமி வெப்பமயமாதல்

    பூமி வெப்பமயமாதல்

    'ஹார்ம்ஃபுல் ஆல்கா' இதழில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையில், புவி வெப்பமடைதல், இதுபோன்ற பாசிக்கள் அதிகரிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கிறது. அரபிக் கடல் இதுபோன்ற நிகழ்வுகள் கடந்த 2000மாவது ஆண்டு முதல் அடிக்கடி நடக்கிறது. அரபிக் கடல் மேற்பரப்பு நீர் வெப்பமயமாகுவதும், ஊட்டச்சத்து பாய்ச்சல் குறைந்ததும் இதுபோன்ர பாசிகளின் அதிகரிப்புக்கு முக்கிய காரணங்கள் என்று தெரியவந்துள்ளது.

    சினிமா

    சினிமா

    கோவா, மும்பை மற்றும் கேரளாவின் நீர் நிலைகளில் பாசிகள் அதிகம் காணப்படுகின்றன. சமீபத்தில் வெளியான மலையாள, சூப்பர் ஹிட் திரைப்படமான கும்பலங்கி நைட்ஸ் என்ற திரைப்படத்தில், இதுபோன்ற பாசி பளபளப்பு காட்சி இடம்பெற்று அதிகம் பேரை ஈர்த்தது நினைவிருக்கலாம்.

    English summary
    Chennai sea become blue: A study published last year in the journal 'Hormeful Algae' suggests that global warming may be responsible for the increase in such mosses. Events such as the Arabian Sea have been frequent since the year 2000.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X