சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரஜினிக்காக திமுகவை உடைக்க முயற்சித்த கராத்தே... காங். நடவடிக்கை பாய்ந்ததன் பரபர பின்னணி!

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை: கட்சிக்கு எதிரான செயல்பாடு..! காங்கிரசில் இருந்து கராத்தே தியாகராஜன் நீக்கம்...

    சென்னை: ரஜினிகாந்த் எப்பவோ தொடங்கப் போகும் கட்சிக்காக திமுகவின் மிக முக்கிய பிரமுகர்களை இணைப்பதற்கான வேலைகளில் படுதீவிரமாக இறங்கியதால்தான் கராத்தே தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க திமுகசார்பில், காங்கிரஸுக்கு அக்கட்சி அழுத்தம் கொடுத்தது என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.

    திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் காங்கிரஸ் தென்சென்னை மாவட்ட தலைவராக இருந்த கராத்தே தியாகராஜனுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். இதனாலேயே திமுகவுக்கு எதிராக குடைச்சல் கொடுத்துக் கொண்டே வந்தார் கராத்தே. மேயராக ஸ்டாலின் இருந்தபோது துணை மேயராக கராத்தே இருந்தார். அப்போது நடந்த முட்டல் மோதல் உலகம் அறிந்தது.

    கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு சோனியா, ராகுல் காந்தி வந்தபோது கூட காமராஜர் நினைவிடத்துக்கு ஏன் போகவில்லை என கூறி போராட்டத்தை நடத்தியவர் கராத்தே. கராத்தே செய்து வந்த இத்தனை உள்ளடி வேலைகளையும் திமுக, காங்கிரஸ் சகித்துக் கொண்டு வந்தது.

    இடைநீக்கத்துக்கு கட்சிக்குள் இருந்து அழுத்தம் காரணமா.. கராத்தே தியாகராஜன் பரபரப்பு விளக்கம் இடைநீக்கத்துக்கு கட்சிக்குள் இருந்து அழுத்தம் காரணமா.. கராத்தே தியாகராஜன் பரபரப்பு விளக்கம்

    அதிமுகவுடன் ரகசிய கூட்டணி

    அதிமுகவுடன் ரகசிய கூட்டணி

    இந்நிலையில்தான் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும்; லோக்கல் அஜெட்ஸ்மெண்ட் மூலம் ஜெயித்துவிடலாம் என சத்தியமூர்த்தி பவன் ஆலோசனைக் கூட்டத்தில் கராத்தே தியாகராஜன் பேசினார். லோக்கல் அஜெஸ்மெண்ட் என்பது அதிமுகவுடனான மறைமுக கூட்டணி என்பதையே அவர் கூறியிருந்தார்.

    திருநாவுக்கரசர் மீது பழி

    திருநாவுக்கரசர் மீது பழி

    இதனையடுத்துதான் காங்கிரஸை ஏன் தூக்கி சுமக்க வேண்டும் என கே.என்.நேரு கேள்வி கேட்டார். இதற்கு மாஜி தலைவர் திருநாவுக்கரசர் மீது பழியை போட்டார் கராத்தே. இதனால் காங்கிரஸ்- திமுக கூட்டணியில் விரிசல் தொடங்கியது.

    திமுகவின் கொந்தளிப்பு

    திமுகவின் கொந்தளிப்பு

    இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ஒருவர் டெல்லி மேலிடத்தில் நேரடியாக கராத்தே மீது புகார் பட்டியலை வாசித்திருக்கிறார். இது ஒருபுறம் இன்னொரு திமுகவை உடைக்க முயற்சிக்கிறார் கராத்தே என்கிற தகவல்தான் அக்கட்சி தலைமையை கொந்தளிக்க வைத்ததாம்.

    திமுகவை உடைக்க சதி

    திமுகவை உடைக்க சதி

    ரஜினிகாந்துடன் மிக நெருக்கமான நட்பில் இருந்து வரும் கராத்தே தியாகராஜன், அவர் கட்சி தொடங்கும் போது மாநிலப் பொறுப்பு ஒன்றில் இருப்பார். அது ரஜினி கட்சியின் செயல் தலைவர் அல்லது பொதுச்செயலாளர் பதவியாகவும் இருக்கலாம். காங்கிரஸில் பதவி வகித்தாலும் ரஜினிக்கு ஆலோசகராகவும் கராத்தே செயல்பட்டு வருகிறார்.

    திமுக பெருந்தலைகளுக்கு வலை

    திமுக பெருந்தலைகளுக்கு வலை

    அதேநேரத்தில் ரஜினிகாந்த் கட்சிக்கு திமுகவின் பசையான பல பிரமுகர்களை இழுத்துச் செல்லும் பேச்சுவார்த்தைகளையும் படுதீவிரமாக மேற்கொண்டு வந்தாராம் கராத்தே. அதுவும் ஸ்டாலினை சுற்றி இப்போது வலம் வந்து கொண்டிருக்கும் சில பெருந்தலைகளுக்கும் கராத்தே வலைவிரித்திருக்கிறார். இதனால்தான் உக்கிரமாகி கராத்தே மீது நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என காங்கிரஸ் மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்ததாம் திமுக.

    English summary
    Here is the reason behind the Congress High Command's suspension of South Chennai District President Karate Thiagarajan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X