சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் ராயபுரம், பிராட்வே, புதுப்பேட்டையில் அதிகம் கொரோனா பரவ என்ன காரணம்? பரபரப்பு தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் ராயபுரம், பிராட்வே, புதுப்பேட்டையில் அதிகம் பேருக்கு கொரோனா பரவ மக்கள் நெருக்கமே இதற்கான காரணம்.. மிகவும் குறுகிய இடத்தில் அதிக மக்கள் வசிக்கிறார்கள். இதனால் எளிதாக பரவி விட்டது. எனவே இப்பகுதிகளில் சமூக விலகல் மிகவும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இதைப் பார்த்து மற்ற பகுதிகள் உஷாராக வேண்டியது அவசியம் ஆகும் .

Recommended Video

    அல்லாடும் IIT, IIM & மற்ற கல்லூரி மாணவர்கள்! கொரோனாவால் பறி போகும் வேலை வாய்ப்புகள்!

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த மாவட்டம் என்றால் சென்னை தான். நேற்று மாலை நிவரப்படி 110 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் 621 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ராயபுரம் மண்டலத்தில் ராயுபுரம், புதுப்பேட்டை, பிராட்வே பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த பகுதிகளில் அதிகம் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணம் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பது. மிகக்சிறிய பகுதிகளில் பல்லாயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இதனால் எளிதாக கொரோனா வைரஸ் அதிகமாக பரவி உள்ளது.

    நாட்டில் 3ல் 2 பங்கு கொரோனா பாதிப்பு 31 மாவட்டங்களில் தான்.. அத்தனைக்கும் உள்ள ஒற்றுமை.. ஷாக் தகவல் நாட்டில் 3ல் 2 பங்கு கொரோனா பாதிப்பு 31 மாவட்டங்களில் தான்.. அத்தனைக்கும் உள்ள ஒற்றுமை.. ஷாக் தகவல்

    திருவல்லிக்கேணி

    திருவல்லிக்கேணி

    ராயபுரம், புதுப்பேட்டை மட்டுமல்ல, அமைந்தகரை, புரசைவாக்கம்,, சைதாப்பேட்டை, மாம்பலம், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கொரோனா வைரஸ் அதிகம் பரவி உள்ளது. சென்னையின் இதயபகுதியான திருவல்லிக்கேணி, சாந்தோம் பகுதியலும், வடசென்னை பகுதியான தண்டையார் பேட்டையிலும் கொரோனா அதிகம் பேருக்கு பரவி உள்ளது. ஏனெனில் மேற்கண்ட பகுதிகளிலும் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ளது.

    மக்கள் நெருக்கம்

    மக்கள் நெருக்கம்

    அதேநேரம் திருவல்லிக்கேணி பிராட்வே உள்ளிட்ட பகுதிகளை ஒப்பிடும் போது மக்கள் நெருக்கம் அதிகம் இல்லாமல் உள்ள வளசரவாக்கம், பெருங்குடி, அடையாறு, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் குறைவாகவே உள்ளது. இங்கு 3 முதல் 4 பேர் என்ற அளவிலேயே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக சென்னையில் அதிகம் கொரோனா வைரஸ் பரவுவதற்கு மக்கள் அடர்த்தி முக்கிய காரணம் ஆகும். மிகக்சிறிய பரப்பளவில் கோடிக்கணக்கான மக்கள் வசிப்பது முக்கிய காரணம் ஆகும்.

    சமூக விலகல் அவசியம்

    சமூக விலகல் அவசியம்

    கொரோனாவின் தாக்கம் சென்னையில் குறைய வேண்டும் என்றால் அரசின்அறிவுரைகளை கட்டாயம் பின்பற்றி வீட்டிலேயே இருப்பது நல்லது. சமூக விலகலை கடைபிடிப்பது மிக அவசியம் ஆகும். இந்த நேரத்தில் நோய் நம்மை தாக்காமல் இருக்க வேண்டும். நம் குடும்பத்தை தாக்காமல் இருக்க வேண்டும். நம் குழந்தைகளை, நமது பெற்றோரை தாக்கமல் இருக்க வேண்டும் என்று விரும்புவோர் கட்டாயம் தங்கள் வீட்டையே மொத்தமாக தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பது நல்லது.

    தனித்திருப்பது மிக அவசியம்

    தனித்திருப்பது மிக அவசியம்

    சமூக விலகலை கடைபிடிக்காவிட்டால் கண்ணுக்குத் தெரியாத கொரோனா என்ற எதிரி யார் மூலம் வேண்டும் என்றாலும் எப்படி வேண்டும் என்றாலும் பரவும். அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் பாதிப்பு மிக குறைவுதான். இதற்கு இயற்கை முக்கிய காரணம் ஆகும். அதேநேரம் இப்போது இந்தியாவில் கொரோனா பரவ அதிகப்படியான காரணம் என்றால் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்காமல் அலட்சியமாக மொத்தமாக ஒன்றுகூடியதே ஆகும். எனவே சமூகத்தில் இருந்து விலகி இருப்பதை தவிர கொரோனாவை வீழ்ந்த எந்த ஆயுதமும் இப்போது நம்மிடம் இல்லை.

    English summary
    chennai reports 110 new coronavirus cases, why coronavirus cases increased in chennai's brodway, rayapuram, pudupettai and triplicane
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X