சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹாட்ஸ்பாட் பகுதிகளில் தீவிரம் காட்டாதது ஏன்.. பொதுமக்கள் கேள்வி.. கொரோனா பிடியில் சென்னை!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரிக்க ஹாட்ஸ்பாட் பகுதிகளில் ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்படாதது காரணம் என்று புகார் எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் பெரிய ஹாட் ஸ்பாட் பகுதியாக சென்னை மாறியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் போதிய அளவில் சமூக இடைவெளி பின்பற்றப்படாதது மற்றும் ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்படாதது போன்றவை காரணமாக சொல்லப்படுகிறது.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மிகவும் அதிமாக உள்ளது. உயிரிழப்பும் சென்னையை சுற்றித்தான் அதிகமாக உள்ளது. சென்னையில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 4ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் சுகாதார துறையினர் கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுத்த பல்வேறு முயற்சிகள் வெற்றியடையாமல் தோல்வி அடைந்து வருகிறது.

அதிகரிக்கும் கொரோனா... 117 மருத்துவமனைகளில் 2000 பெட்கள் ரெடி... டெல்லி அரசின் அதிரடி திட்டம் அதிகரிக்கும் கொரோனா... 117 மருத்துவமனைகளில் 2000 பெட்கள் ரெடி... டெல்லி அரசின் அதிரடி திட்டம்

வெகுசகஜமான நிலை

வெகுசகஜமான நிலை

60 நாட்களுக்கு மேலாக வீடுகளில் முடங்கி கிடந்த மக்கள் சென்னையில் ஊரடங்கு தளர்வுகளால் வெகு சாதாரணமாக வெளியில் வரத் தொடங்கி உள்ளார்கள். இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள மக்களுக்கு கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு குறைந்து வருகிறது. ஏனெனில் கூட்டம் கூட்டமாக சாலைகளில் பயணிப்பது தொடங்கி, சமூக இடைவெளி இன்று அன்றாட பணிகளை வழக்கம் போல் செய்து வருகிறார்கள். அலட்சியம் அதிகரித்து வருகிறது. கொரோனாவை சாதாரணமா கடக்க தொடங்கிவிட்டதாக தெரிகிறது.

சமூக இடைவெளி இல்லை

சமூக இடைவெளி இல்லை

கோயம்பேடு சந்தையில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டிருந்தால், பல ஆயிரம் பேருக்கு கொரோனா பரவாமல் தடுக்கப்பட்டிருக்கும், துரதிஷ்டவசமாக சமூக இடைவெளி இல்லாமல் வியாபாரங்கள் நடந்தன. பலர் சமூக இடைவெளியை பற்றி சுத்தமாக கவலைப்படவில்லை. இதுவே இன்றைக்கு கொரோனா சென்னையில் கிடுகிடுவென உயர முக்கிய காரணமாக அமைந்தது. சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இரண்டாவது கட்டமாக கொரோனா அதிகரிக்க காரணமாக அமைந்தது கோயம்பேடுதான்.

அலட்சியம் அதிகம்

அலட்சியம் அதிகம்

கோயம்பேடு மார்க்கெட்டை தொடர்ந்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா பரவுவது மீண்டும் வேகமெடுத்துள்ளது அதிக தொற்றுள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் கூட அலட்சியம் அதிகமாக உள்ளது. சுகாதாரத்துறை தீவிரமாக கட்டுப்பாட்டை அமல்படுத்தினால் மட்டுமே கொரோனாவில் இருந்து சென்னை முழுமையா க மீண்டு வரும் என்ற நிலை உள்ளதாக மக்கள் கூறுகிறார்கள்.

கண்டிப்பு தேவை

கண்டிப்பு தேவை

ராயபுரம், திருவிக நகர் , கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட ஐந்து மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி உள்ளது வீடு வீடாக டெஸ்ட் எடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை சுகாதாரத்துறை செய்ய தொடங்கியிருந்தாலும், . கட்டுப்பாட்டு பகுதியில் கண்டிப்புடன் மக்களை கட்டுப்படுத்தி வைத்து நோய் பரவலை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மக்கள் பல நாட்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடந்து காப்பாற்றி வந்த சமூக இடைவெளி இப்போது காற்றில் பறந்து வருகிறது. எனவே இனி கொரோனா சென்னையில் எப்படி கட்டுப்படுத்த போகிறது என்பது பெரிய சவால் நிறைந்த கேள்வியாக மாறி உள்ளது.

English summary
many people not follow social distance thats why covid 19 cases increased in chennai, Will the curfew be seriously enforced?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X