• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே ஒரு பேங்க் பெண்ணுக்கு இரு கள்ளக்காதலர்கள் உரிமை! நீயா நானா போட்டி.. கடைசியில் நடந்த பகீர் சம்பவம்

Google Oneindia Tamil News

சென்னை: வங்கி பெண் ஊழியருடன் யாருக்கு கள்ளத்தொடர்பு என்பதில் இரு இளைஞர்களுக்கு போட்டா போட்டியால் ஒருவரை கடத்த முயன்ற இன்னொரு கள்ளக்காதலனை போலீஸார் கைது செய்தனர்.

ஒரு பெண்ணை இருவர் காதலித்து அவர்களுக்குள்ளேயே சண்டை போடும் காலம் போய் கள்ளக்காதலர்களுக்குள் பிரச்சினை, தகராறு ஏற்படும் அளவுக்கு கலி முற்றிவிட்டது என்றே கூறும் அளவுக்கு நிகழ்ந்துள்ளது காஞ்சிபுரத்தில் ஒரு சம்பவம். காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டிசத்திரம் அருகே உள்ள சாமல் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி உஷா (37). இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். உஷா அதே பகுதியில் உள்ள வங்கியில் வேலை பார்த்து வந்தார். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள பள்ளிகொண்டா காமராஜர் நகரை சேர்ந்த ஐடி கால் சென்டர் ஊழியர் அஜித்குமார்.

இணையத்தையே புரட்டி போட்ட படம்.. இந்த போட்டோவில் இருப்பதில் யார் ஆண்? யார் பெண்? கண்டுபிடிங்க! இணையத்தையே புரட்டி போட்ட படம்.. இந்த போட்டோவில் இருப்பதில் யார் ஆண்? யார் பெண்? கண்டுபிடிங்க!

26 வயது

26 வயது

இவருக்கு 26 வயதாகிறது. இவருடன் உஷாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிபட்டினத்தில் உள்ள வங்கிக்கு உஷாவுக்கு மாற்றல் கிடைத்தது.

காவேரிபட்டினம்

காவேரிபட்டினம்

இதையடுத்து காவேரிபட்டினத்திற்கு சென்ற போது அஜித்குமாருக்கும் உஷாவிற்கும் கள்ளக்காதல் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் உஷாவின் மாறுதலால் அவருக்கும் அஜித்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் குடிபோதையில் இருந்த அஜித்குமார், உஷாவை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது.

 மாற்றலான உஷா

மாற்றலான உஷா

காவேரிபட்டினத்திற்கு மாற்றலாகி போன உஷாவுக்கு மத்தூர் அருகே உள்ள நாகம்பட்டியை சேர்ந்த பெயிண்டர் ஆறுமுகம் (40) என்பவருக்கும் , உஷாவிற்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. ஏற்கெனவே அஜித்குமாருடன் உஷாவுக்கு கள்ளக்காதல் இருந்ததை ஆறுமுகம் அறிந்து கொண்டார்.

 அஜித்துடன் தொடர்பு

அஜித்துடன் தொடர்பு

இதனால் அஜித்தை சந்தித்த ஆறுமுகம், உஷாவுடனான தொடர்பை முறித்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். எனினும் அஜித் உஷாவுடனான காதலை விடவில்லை. இதனால் ஆறுமுகத்திற்கும் அஜித்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் காவேரிபட்டினத்தில் உள்ள வங்கிக்கு அஜித்குமார் சென்றார்.

வழிமறித்த நபர்

வழிமறித்த நபர்

அங்கு உஷாவின் ஸ்கூட்டியை வாங்கிக் கொண்டு வெளியே வந்தார். இந்த தகவல் ஆறுமுகத்திற்கு கிடைத்துவிட்டது. இதையடுத்து தனது கூட்டாளிகளான காத்தவராயன் (31), பார்த்திபன் (32), சக்திவேல் (40), கிருஷ்ணமூர்த்தி (63) ஆகியோருடன் காரில் வந்து அஜிக்குமாரை வழிமறித்தார் ஆறுமுகம்.

 கடும் தாக்குதல்

கடும் தாக்குதல்

இதையடுத்து அஜித்குமாரை தாக்கிய ஆறுமுகம் அவரை காரில் கடத்தில் செல்ல முற்பட்டார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் தடுத்து காவேரிபட்டினம் போலீஸில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் அவரை மீட்டனர். அந்த காரையும் பறிமுதல் செய்தனர். காரில் கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்டவை இருந்தன. இதனால் அஜித்தை கொலை செய்ய முயற்சித்தனரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உளவியல் கல்வி எப்போது

உளவியல் கல்வி எப்போது

கள்ளக்காதலால் எத்தனையோ குடும்பங்கள் அழிந்து வரும் நிலையில் இப்படி ஒரு பெண்ணுக்கு இருவர் அடித்துக் கொள்ளும் சம்பவங்களை பார்க்கும் போது நாம் எதை நோக்கி பயணிக்கிறோம் என்ற கேள்வி எழுகிறது. இது போன்ற வன்முறை சம்பவங்களை இனி வருங்காலத்திலாவது தடுக்க மாணவர்களுக்கு உளவியல் பாடங்களை எடுக்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.

English summary
Two Paramours quarelled each other in the fight over a woman in Kanchipuram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X