India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராத்திரியெல்லாம் பாய்பிரண்டுடன் பேசிய நிஷா.. விடிகாலை கிச்சனுக்குள் சென்று.. வீடியோ வேற.. என்னாச்சு?

Google Oneindia Tamil News

சென்னை: மதுரவாயல் அருகே விடிய விடிய போனில் பேசிய இளம்பெண் காலையில் தூக்கில் தொங்கியபடி இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதி, தொட்டி துறையைச் சேர்ந்தவர் வெங்கடேசன்... இவர் தன்னுடைய வீட்டு பக்கத்திலேயே ஒரு பெட்டிக் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவரது மகள் நிஷா.. 21 வயதாகிறது.. டிப்ளமோ படித்து விட்டு சென்னை அயனம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப்பார்த்து வந்தார்... மதுரவாயல் லட்சுமி நகரில், தோழியுடன் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்..

இளம்பெண் கடத்தல் சர்ச்சையில் நித்தியானந்தா ஆசிரமம்- திருவண்ணாமலை ஆசிரமத்தில் போலீசார் தீவிர தேடுதல்! இளம்பெண் கடத்தல் சர்ச்சையில் நித்தியானந்தா ஆசிரமம்- திருவண்ணாமலை ஆசிரமத்தில் போலீசார் தீவிர தேடுதல்!

நிஷா

நிஷா

இந்தநிலையில், கடந்த 25ம் தேதி நள்ளிரவில் வெங்கடேசனுக்கு போன் வந்துள்ளது.. அதில், நிஷா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக, வீட்டு ஹவுஸ் ஓனர் சொல்லி உள்ளார்.. இதை கேட்டு கதறி துடித்த நிஷா குடும்பத்தினர், மதுரவாயலுக்கு விரைந்து வந்தனர்.. நிஷாவின் சடலத்தை பார்த்து, தரையில் புரண்டு அழுதனர்.. என்ன நடந்தது என்று நிஷாவின் தோழியிடமும் விசாரித்தனர்.. சம்பவத்தன்று இரவு முழுக்க, நிஷா யாரிடமோ போனில் பேசி கொண்டே இருந்தாராம்.

 கிச்சனில் தற்கொலை

கிச்சனில் தற்கொலை

தூக்கம் வந்ததால், நிஷா அறையைவிட்டு, தன் அறைக்கு கிளம்பி சென்றுவிட்டதாகவும், காலையில் எழுந்து பார்த்தபோதுதான் கிச்சனில் நிஷா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார் என்றும் அந்த தோழி தெரிவித்தார்.. இதையடுத்து, நிஷாவின் செல்போனை பார்த்தபோது, அதில் ஒரு வீடியோ இருந்தது.. நிஷாவே அந்த வீடியோவை எடுத்ததாக தெரிகிறது. அந்த வீடியோவையும், அதனுடன் சேர்த்து ஒரு புகார் மனுவையும், வெங்கடேசன் மதுரவாயல் போலீசில் புகார் தந்தார்..

 வீடியோ

வீடியோ

அதில், "தன்னுடைய மகள் நிஷா, நள்ளிரவு 3 மணி அளவில் தூக்கு போட்டுக்கொண்டதை செல்போனில் படம் பிடித்துள்ளார்... மேலும், தற்கொலைக்கு முன்பு ஒரு ஆணுடன் நீண்ட நேரம் பேசியிருப்பதும் பதிவாகி உள்ளது. அந்த செல்போனை ஆய்வுசெய்ததில் அவர் ஒருவரைக் காதலித்துவந்தது தெரியவருகிறது.. அதனால், காதல் விவகாரத்தில் தன்னுடைய மகள் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம், எனவே உரிய விசாரணை நடத்தி மகளின் தற்கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும்" என்று வெங்கடேசன் கூறியுள்ளார்...

 போஸ்ட் மார்ட்டம்

போஸ்ட் மார்ட்டம்

இதையடுத்து, வழக்கு பதிவு செய்துள்ள மதுரவாயல் போலீசார் நிஷாவின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. நிஷாவின் செல்போனை கைப்பற்றிய போலீஸார் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்... அவரின் காதலனிடம் போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்திருக்கின்றனர். அதன் பிறகே நிஷாவின் தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவிக்கிறார்கள்.

English summary
why did maduravoyil girl commits suicide and what happened in chennai incident காதல் தோல்வி காரணமாக இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X