சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சத்தம் போடாமல் கப்சிப்னு இருக்கும் கூட்டணி கட்சிகள்.. கமுக்கமா இருக்கும் திமுக, அதிமுக.. என்ன காரணம்

அஇஅதிமுக, திமுகவுக்காக கூட்டணி கட்சிகள் பிரச்சாரம் செய்யாமல் உள்ளன.

Google Oneindia Tamil News

Recommended Video

    இடைத்தேர்தலில் கூட அதிமுக-வுக்கு தான் ஆதரவா?..குமுறும் தேமுதிக தொண்டர்கள்- வீடியோ

    சென்னை: 19-ம் தேதி தேர்தல்.. ஆனால் இன்னும் ஒரு கூட்டணி கட்சி தலைவர்கள் கூட அதிமுக, திமுகவுக்காக பிரச்சாரம் செய்யாமல் கம்முன்னு இருக்க என்ன காரணம் என்றே தெரியவில்லை.

    எம்பி தேர்தலில் முதல் ஆளாக போய் அதிமுக கூட்டணியில் சேர்ந்தது பாமகதான். ஆனால் தேர்தல் முடிந்த பிறகு சந்திப்பு, பேச்சு, ஆதரவு, பிரச்சாரம் என எதையுமே காணோம்.

    அதேபோல, கடைசியாக கூட்டணியில் வந்து சேர்ந்த தேமுதிக இந்த அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்வதாக முதலிலேயே அறிவித்தது. ஆனால் அந்த கட்சி பிரச்சாரத்தை இன்னும் காணோம்!.

    இலங்கை தீவிரவாதிகள் பெங்களூரில் ஊடுருவலாம், ஐடி நிறுவனங்களை தாக்க திட்டமாம்.. போதும்ப்பா நிறுத்துங்க இலங்கை தீவிரவாதிகள் பெங்களூரில் ஊடுருவலாம், ஐடி நிறுவனங்களை தாக்க திட்டமாம்.. போதும்ப்பா நிறுத்துங்க

    இடைத்தேர்தல்

    இடைத்தேர்தல்

    இவர்களே இப்படி என்றால், தேர்தலை சந்திக்காமல் நொந்து போயுள்ள ஏசி சண்முகம் நிலை கேட்கவே தேவையில்லை! அதனால் அதிமுகவில் இடைத்தேர்தலுக்கு, பிரச்சாரம் செய்ய உள்ளோம் என்று சொன்னார்களே தவிர, இதுவரை ஒருத்தரும் தொகுதி பக்கம் போகவில்லை!

     அதிமுக தடை

    அதிமுக தடை

    பாஜகவில் தமிழிசையும், எச்.ராஜாவும் ஸ்டாலினை வறுத்தெடுக்கிறார்களே தவிர, இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக போகிறார்களா, இல்லையா என்பதை மட்டும் சொல்லாமலேயே உள்ளனர். அதே சமயம், தமிழிசை, எச்.ராஜா, ஜான்பாண்டியன் இவர்கள் மூவருக்கும் பிரச்சாரம் செய்ய அதிமுக தடை விதித்துள்ளதாக செய்திகள் கசிகின்றன.

    கிருஷ்ணசாமி

    கிருஷ்ணசாமி

    இதற்கு காரணம், தூத்துக்குடியில் தமிழிசைக்கு எதிர்ப்பு உள்ளதாம்... கிருஷ்ணசாமிக்கும் ஜான்பாண்டியனுக்கும் ஜாதி மோதல் இருக்கிறதாம்... வாயை வைத்து கொண்டு சும்மா இல்லாமல் எதையாவது பேசிவிட்டு, ஒட்டுமொத்தமாக எச்.ராஜாவுக்கு எல்லா இடத்திலேயும் எதிர்ப்பு இருக்கிறதாம். அதற்காக இவர்கள் 3 பேரும் பிரச்சாரத்துக்கு வேண்டாம் என்று அதிமுக தலைமை சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

     திருமாவளவன்

    திருமாவளவன்

    இதே நிலைதான் திமுகவிலும்! கம்யூனிஸ்ட் கட்சி, வைகோமுதல் பிரச்சாரம் செய்ய உள்ளதாக சொல்லி இருந்தார்கள். இதுவரை அவர்களையும் காணோம். ஓட்டப்பிடாரத்தில் திண்ணை பிரச்சாரத்தை முடித்துகொண்டு, திருப்பரங்குன்றத்துக்கு ஸ்டாலின் வந்துவிட்டார். மேலும் ஓட்டப்பிடாரத்தை தவிர மற்ற 3 தொகுதிகளில் ஓரளவு தலித் வாக்குகள் இருந்தும் திருமாவளவன்கூட பிரச்சாரம் செய்ய போகவில்லை.

     விருப்பம் இல்லையா?

    விருப்பம் இல்லையா?

    ஒருவேளை கூட்டணி கட்சியினர் திமுக, அதிமுகவுக்காக பிரச்சாரத்துக்கு வர விருப்பமில்லையா அல்லது இன்னும் நாள் இருப்பதால், இனிமேல்தான் இது பற்றி முடிவு எடுத்து அறிவிப்பார்களா அல்லது பிரச்சாரம் சம்பந்தமாக கூட்டணி கட்சியினரை இந்த இரு பெரும் கட்சிகளும் கண்டுகொள்ளவில்லையா என தெரியவில்லை.

     நடக்குமா?

    நடக்குமா?

    இவர்கள் எல்லாம் கம்மென்று இருப்பதைப் பார்த்தால் 4 தொகுதி இடைத் தேர்தல் நடக்குமா அல்லது எதையாவது ஒரு குண்டை தூக்கி போட்டு தேர்தலே நடக்காது என்று சொல்லி விடுவார்களா என்று புரியவில்லை.

    English summary
    Will campaign AIADMK and DMK Alliance in in 4 constituencies by election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X