சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கட்சிக்காக "மானம்" பார்க்காமல் இறங்கி வந்த ஓபிஎஸ்! கையால் கூட சீண்டாத எடப்பாடி! நேற்று நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலுக்காக ஓ பன்னீர்செல்வம் சமாதானமாக பேச முன் வந்தாலும் கூட.. எடப்பாடி பழனிசாமி தரப்பு இறங்கி வர மறுத்துள்ளது. இந்த தேர்தல் மூலம் அதிமுகவில் சமாதானம் நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் எடப்பாடி - ஓபிஎஸ் இடையிலான மோதல் இன்னும் பெரிதாகி உள்ளது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் ஜூலை 9ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. அதிமுகவில் எப்போது என்ன பிரச்சனை வந்தாலும்.. கூடவே ஒரு இடைத்தேர்தலும் வந்துவிடும். 2017ல் பிரச்சனை இருந்த போதும் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வந்தது.

அதேபோல்தான் இப்போதும் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் வந்துள்ளது. இதில் என்ன சிக்கல் என்றால்.. தேர்தலில் போட்டியிட போகும் வேட்பாளர்களின் மனுவில் யார் கையெழுத்து போடுவார்கள் என்பதே!

"கொங்கு".. விட்டுக்கொடுக்காத டெல்லி.. குறி வைத்த ஸ்டாலின்.. ப்பா.. ஓபிஎஸ்ஸுக்கு அடிக்கும் "யோகம்"!

 கையெழுத்து?

கையெழுத்து?

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாவட்ட கவுன்சிவர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர், என்று மொத்தம் 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் கிட்டத்தட்ட 500 பதவிகளுக்கு அதிமுக நிர்வாகிகள் போட்டியிடுகிறார்கள். இதற்கு அவர்கள் வேட்பு மனுவும் தாக்கல் செய்துவிட்டனர். இன்று படிவம் ஏ மற்றும் பி இரண்டையும் அவர்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இன்று மதியம் 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

சின்னத்தை இழக்க நேரிடும்

சின்னத்தை இழக்க நேரிடும்

இல்லையென்றால் அவர்கள் அதிமுக வேட்பளார்களாக கருதப்பட மாட்டார்கள். இப்போது சிக்கல் என்னவென்றால்.. இந்த படிவங்களில் ஓபிஎஸ், இபிஎஸ்தான் கையெழுத்து போட வேண்டும். ஆனால் எடப்பாடி தரப்போ.. ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் பதவியே காலாவதியாகிவிட்டது என்று வாதம் வைத்து வருகிறது. அப்படி இருக்கும் போது.. ஓபிஎஸ் இதில் கையெழுத்து போடுவதை எடப்பாடி விரும்பவில்லை. அப்படி இருவரும் கையெழுத்து போட்டால்.. அதை கோர்ட்டில் ஆதாரமாக காட்டி.. பாருங்க இன்னமும் நான்தான் ஒருங்கிணைப்பாளர் என்று ஓபிஎஸ் தரப்பு வாதம் வைக்கும்.

இறங்கி வந்த ஓபிஎஸ்

இறங்கி வந்த ஓபிஎஸ்

இதை தடுக்கும் விதமாக இந்த மனுக்களில் கையெழுத்து போடவே எடப்பாடி தரப்பு மறுத்து வருகிறது. இதனால் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் அவர்களுக்கு சின்னம் கிடைக்க வேண்டும் என்ற விருப்பத்திலும், தான்தான் இன்னும் ஒருங்கிணைப்பாளர் என்பதை நிரூபிக்கும் வகையிலும் ஓபிஎஸ் இந்த மனுக்களில் கையெழுத்து போட முன் வந்தார். படிவம் ஏ மற்றும் பியில் நான் கையெழுத்து போடுகிறேன் என்று அவர் இறங்கி வந்தார்.

 சீண்டாத எடப்பாடி

சீண்டாத எடப்பாடி

இதில் கையெழுத்து போட இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ரெடியா என்று ஓபிஎஸ் கேட்டார். அதோடு எடப்பாடிக்கு இது தொடர்பாக கடிதமும் எழுதினார். ஆனால் எடப்பாடி மிகவும் கோபமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கடிதத்தை அவர் கையால் கூட சீண்டவில்லை. அதை தொட்டுப்பார்க்க கூட அவர் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. அப்படியே உதவியாளர் மூலமே கடிதத்தை திருப்பி அனுப்பி இருக்கிறார் எடப்பாடி.

எடப்பாடி ஏன் இப்படி?

எடப்பாடி ஏன் இப்படி?

எடப்பாடி தரப்பு இப்படி செய்ய காரணம் இல்லாமல் இல்லை. இப்போது அந்த கடிதத்தில் கையெழுத்து போட்டால்.. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இப்போதும் இருக்கிறது என்று அர்த்தம் ஆகும். அப்படி நடந்தால் ஒற்றை தலைமை தீர்மானத்தை தாக்கல் செய்ய ஒருங்கிணைப்பாளரிடம் அனுமதி பெற வேண்டிய நிலை ஏற்படும். அதோடு ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூடும் என்று அவைத்தலைவர் அறிவித்ததும் செல்லாமல் போகும். எனவேதான் எடப்பாடி சமயோஜிதமாக செயல்பட்டுள்ளார் என்கிறார்கள்.

Recommended Video

    எடப்பாடியெல்லாம் எம்ஜிஆராக முடியாது! ஓபிஎஸ் தான் கட்சிக்கு தலைமை! - ஜுனியர் எம்ஜிஆர்
    ஓபிஎஸ் தரப்பு கோபம்

    ஓபிஎஸ் தரப்பு கோபம்

    ஆனால் ஓபிஎஸ் தரப்போ.. ஓபிஎஸ்ஸை அவ்வளவு அவமானப்படுத்தினார்கள். நியாயப்படி பார்த்தால் அவர்தான் கையெழுத்து போட மறுக்க வேண்டும். ஆனால் அவரே மானம் பார்க்காமல் இறங்கி வந்துள்ளார். ஆனால் எடப்பாடி ஏன் வீம்பு பிடிக்கிறார். நம் சண்டைக்கு இடையில் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் ஏன் மாட்ட வேண்டும். கட்சிதான் முக்கியம் என்று அவர் நினைக்க வேண்டாமா? திமுகவிற்குதான் இது சாதகமாக முடியும் என்று புலம்பி வருகிறார்கள்.

    English summary
    Why did not Edappadi Palanisamy accept O Panneerselvam letter yesterday on AIADMK candidates?ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலுக்காக ஓ பன்னீர்செல்வம் சமாதானமாக பேச முன் வந்தாலும் கூட.. எடப்பாடி பழனிசாமி தரப்பு இறங்கி வர மறுத்துள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X