சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜலட்சுமி கொலைக்கு ஸ்டாலின் தாமத கண்டனம்.. உரிமையோடு கோபப்படுகிறோம்.. நெட்டிசன்கள் வருத்தம்

ஸ்டாலினின் தாமதமான கண்டனத்திற்கு நெட்டிசன்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜாதி வெறிக்கு பலியான சிறுமி ராஜலட்சுமி... என்ன நடந்தது... வீடியோ

    சென்னை: ஆத்தூர் சிறுமி படுகொலை சம்பவம் நடந்து ஒரு வாரம் கழித்து, இன்று திமுக தலைமை கண்டித்திருப்பது பலரையும் முனுமுனுக்க வைத்துள்ளது.

    13 வயது சிறுமி ராஜலட்சுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, சாதி பெயரை சொல்லி, அச்சிறுமியின் தாய் கண் எதிரிலேயே கொடூரமான முறையில் தலையை வெட்டி படுகொலை செய்தார் தினேஷ்குமார் என்பவர். சிறுமியின் இந்த படுகொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    [என்ன செய்கின்றன அரசியல் கட்சிகள்.. சாதி வெறிக்கு பலியான ராஜலட்சுமியை கண்டுகொள்ளாதது ஏன்?]

     ராமதாஸ் முதல் அறிக்கை

    ராமதாஸ் முதல் அறிக்கை

    சிறுமி படுகொலையை கண்டித்தும், குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்க கோரியும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. குறிப்பாக சம்பவம் நடந்த அடுத்த நாளே பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இந்த செயலை கண்டித்து தெளிவான அறிக்கை வெளியிட்டிருந்தார். இதில் அதேபோல சாதீய ரீதியான தாக்குதல் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்புணர்வினை கண்டு தமிழகமே கொதித்து போய் உள்ளது. சமூக இயக்கங்கள்

     திமுக மீது விமர்சனம்

    திமுக மீது விமர்சனம்

    ஆனால் மாவட்ட கலெக்டரோ, மாவட்ட எஸ்.பி.,யோ இந்த சம்பவம் குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என சிறுமியின் பெற்றோரே குற்றஞ்சாட்டப்பட்டதையடுத்து நேற்றுதான் கலெக்டர் ரோகிணி ஆறுதலே கூற சென்றார். ஆனால் மாவட்ட ஆட்சியர், எஸ்பி.யை விட சிறுமி விஷயத்தில் அதிக அளவு விமர்சனத்துக்கு ஆளானது திமுகதான்.

     நெட்டிசன்கள் ஆதங்கம்

    நெட்டிசன்கள் ஆதங்கம்

    தமிழகத்தின் மிகப் பிரதானமான எதிர்க்கட்சியான திமுக இதில் முதல் ஆளாக களம் இறங்கியிருக்க வேண்டாமா என்று பலரும் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த படுகொலை குறித்து வாயே திறக்காமல் இருந்தது பெரும் கண்டனத்துக்கு உள்ளானது. ஆத்தூருக்கு போகாமல் தேவர் பூஜைக்கு போனது ஏனோ என்றும் நெட்டிசன்கள் அதிருப்தி தெரிவித்தனர். இன்றுதான் ஸ்டாலின் தனது கண்டனத்தை டிவிட்டரில் போட்டார். அந்த டிவிட்டரில் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதிலிருந்து சில.

    உரிமையோடு கோபம்

    அய்யா.. உங்கள் மேல் உரிமையோடு கோபம்.. காரணம் கடந்த ஒரு வாரமாக இந்த படு கொலை பற்றி எதுவும் பேசாதது. பரவாயில்லை .சுற்று பயணம் நேரமின்மை என்பதை ஏற்று கொள்ள வேண்டியுள்ளது.

    ஏன் இந்தத் தாமதம்

    இதேபோல மற்றொரு ட்வீட்டில், சிறுமி படுகொலை நடந்து ஒரு வாரம் ஆகியும் இந்த விஷயத்தில் அமைதி காக்க வேண்டிய அரசியல் பின்னணி என்ன என்றும், ஸ்வாதி படுகாலை மற்றும் அனிதா மரணத்தின்போது அவர்களின் குடும்பத்தை விரைந்து சென்று சந்திக்க நேர்ந்ததே, அதுபோல ராஜலட்சுமி சம்பவத்திலும் ஏன் சென்று அந்த குடும்பத்தாரை சந்திக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    தாமதமான கண்டனம்

    ஸ்டாலினுடையது மிகவும் தாமதமான கண்டனம் என்றும், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஸ்டாலின் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் மற்றொரு ட்வீடில் பதிவிடப்பட்டுள்ளது.

    மீடியாக்களின் மெளனம்

    அந்த கொடூர காம வெறிப்பிடித்த மிருகத்தை காப்பாத்தும் கள்ள நாடகமே மனநிலை சரியில்லை என்று சொல்வது ஜாதி வெறிப்பிடித்த நாய்கள் ஆதரவு அற்றவர்கள் என்ன வேணும்னாலும் செய்யலாமா? ஐந்து நாளா எந்த மீடீயாவும் எந்த தலைவர்களுமே வாயே திறக்கலையே ஏனோ? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

    தேனி சிறுமி ராகவி

    நீங்கள் குரல் கொடுத்த உடனேயே ராஜலட்சுமி குடும்பம் நிம்மதியடையும். தளபதி ஸ்டாலின் க்கு ஆதித்தமிழர் பேரவை ஒரு கோரிக்கை வைக்கிறோம்.சில நாட்களுக்கு முன் நடந்த தேனி சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டது குறித்தும் நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் அப்போது சிறுமிக்கு நியாயம் கிடைக்கும். இவ்வாறு நெட்டிசன்கள் தங்கள் கண்டனங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

     இதுவா சமூக நீதி?

    இதுவா சமூக நீதி?

    பொதுவாக ஒரு குற்றம் நடந்தால் அதை ஆளுங்கட்சி மறைக்கத்தான் பார்க்கும் என்பது தெரிந்த விஷயம்தான். எனவே இப்படிப்பட்ட நேரங்களில் எதிர்கட்சிதானே இந்நேரம் வேகமாக களம் இறங்கி பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் அளித்தோ அல்லது படுகொலைக்கு எதிராக களத்தில் இறங்கி போராடியோ இருக்க வேண்டும்? சமூக நீதியைப் போற்றிப் பாதுகாக்கும் கட்சி என்று எப்போதுமே தங்களை முன்னிலைப்படுத்தி கொள்ளும் திமுக இதில் சறுக்கியிருப்பது என்னவோ உண்மைதான்.

    English summary
    Why did not MK Stalin just talk about the Aathur girl's assassination for a week?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X