3 ஆங்கிள்கள்.. திமுக கையில் பெரிய "லகான்".. சீக்ரெட்டை உடைத்த ஓ பி ரவீந்திரநாத்.. எடப்பாடிக்கு செக்?
சென்னை: அதிமுக பொதுக்குழு நாளை மறுநாள் கூடுமா, கூடாதா என்ற கேள்வி நிலவி வரும் நிலையில் நேற்று ஓ பி ரவீந்திரநாத் அளித்த பேட்டியில் சில முக்கிய தகவல்களை வெளியிட்டார்.
Recommended Video
சிஎஸ்கே ஆடும் ஐபிஎல் போட்டிகளின் கடைசி 5 ஓவர் போல அதிமுக உட்கட்சி பூசல் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. தேனியின் தோனியாக மாறி கடைசி பாலில் ஓபிஎஸ் சிக்ஸ் அடிப்பாரா.. இல்லை சிக்ஸ் லைனில் கேட்ச் பிடித்து எடப்பாடி விக்கெட் எடுப்பாரா என்ற கேள்வி அதிமுகவில் எழுந்துள்ளது.
இந்த நிலையில்தான் மொத்தமாக மேட்சையே (பொதுக்குழுவை) ஒத்திவைக்க கோரி நேற்று ஓபிஎஸ் எடப்பாடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். இதற்கு இபிஎஸ் இன்னும் பதில் அளிக்காத நிலையில் நேற்று ஓபிஎஸ் உடன் அவரின் மகன் எம்பி ரவீந்தரநாத் சந்திப்பு நடத்தினார்.

ரவீந்திரநாத்
இந்த சந்திப்பிற்கு பின் எம்பி ரவீந்திரநாத் பேட்டியில், சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தேன். ஆனால் அதில் அரசியல் இல்லை. அடிப்படை தேவைகள் தொடர்பாக சில கோரிக்கைகளை வைத்து அவரை சந்தித்தேன், மக்கள் பிரச்சனைகளுக்காக முதல்வரை சந்தித்தேன். பொதுக்குழு நடக்குமா என்று பொறுத்திருந்து பாருங்கள்.

ஓ பன்னீர்செல்வம்
ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஒரு முடிவை எடுத்து இருக்கிறார். அவர் கடிதம் அனுப்பி இருக்கிறார். அதேபோல் இதில் இன்னொரு பக்கம் அரசும் முடிவு எடுக்க வேண்டும். இது போக சட்ட வல்லுனர்கள் ஆலோசனை வழங்குவார்கள். நீதிமன்றத்தை நாட வேண்டுமா என்று அவர்கள்தான் முடிவு எடுப்பார்கள். மொத்தத்தில் இதில் 3 ஆங்கிள் இருக்கிறது.

3 திசைகள்
இதில் 3 திசைகளில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சசிகலாவை பார்க்க போவதாக செய்திகள் வருகிறது. அதில் உண்மை கிடையாது என்று ஓ.பி ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினை ஓபி ரவீந்திரநாத் நேரில் சந்தித்தார். இந்த நிலையில் பொதுக்குழுவை நிறுத்த ஓபிஎஸ் தரப்பு முயன்று வருகிறது. ஆளும் தரப்பை ஓபிஎஸ் அணுக வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது.

ஆளும் தரப்பு
ஆளும் திமுக தரப்பை அணுகி, பொதுக்குழுவை ஒத்திவைக்க ஓபிஎஸ் தரப்பு முயன்று வருவதாக தகவல்கள் வருகின்றன. இந்த நிலையில் பொதுக்குழு கூடினால் சட்ட ஒழுங்கு பிரச்சனை வரும். பொதுக்குழுவில் மோதல் வந்தால் சட்ட ரீதியாக பெரிய பிரச்சனை வரும். ராயப்பேட்டை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. அங்கு மோதல் ஏற்பட்டு, வெளியே மோதல் பரவினால் சிக்கல் ஆகும் என்ற பாயின்டை வைத்து.. பொதுக்குழுவை பாதியில் நிறுத்த ஓபிஎஸ் தரப்பில் சிலர் முயன்று வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

ஓபி ரவீந்திரநாத்
இந்த நிலையில்தான் ஓபி ரவீந்திரநாத் அரசு தரப்பும் இதில் முடிவு எடுக்க வேண்டும் என்று சூசகமாக குறிப்பிட்டு இருக்கிறார். அதோடு சசிகலாவை ஓபிஎஸ் சந்திக்க போவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வந்தன. எடப்பாடியை எதிர்க்க சசிகலாவுடன் ஓபிஎஸ் கைகோர்க்க போவதாக தகவல்கள் வந்தன. ஆனால் செய்தியாளர் சந்திப்பில் ரவீந்திரநாத் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications