சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சூத்திரதாரி.. ஓபிஎஸ் திடீரென டெல்லி போனது ஏன்?.. "வெயிட் அண்ட் சீ".. மேலிடம் போட்ட மெகா உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை; அதிமுகவில் நேற்று கடுமையான மோதல், பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் திடீரென மாலை டெல்லிக்கு கிளம்பினார். இவர் திடீரென டெல்லி சென்றது ஏன் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்ததில் சில முக்கிய தகவல்கள் கிடைத்தன.

Recommended Video

    ADMK குழப்பத்துக்கு மத்தியில் OPS டெல்லி போனது ஏன்? பரபரப்பு தகவல்கள் *Politics

    அதிமுக பொதுக்குழு நேற்று மிகப்பெரிய களேபரங்களுக்கு இடையில்தான் நடந்தது. பொதுக்குழுவிற்கு வந்த ஓ பன்னீர்செல்வம் கடுமையாக அவமதிக்கப்பட்டார்.

    அவரை மேடையில் கூட ஏற விடாத எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வெளியே போயா, வெளியே போயா என்று கூறியதோடு வசை சொற்களையும் கூறினர்.

    காத்திருந்த ஓபிஎஸ்.. கரெக்டா வந்த புள்ளிகள்- அதைவைத்தே 'தலை’களை பார்த்து.. டெல்லியில் என்ன நடக்கும்? காத்திருந்த ஓபிஎஸ்.. கரெக்டா வந்த புள்ளிகள்- அதைவைத்தே 'தலை’களை பார்த்து.. டெல்லியில் என்ன நடக்கும்?

    மோதல்

    மோதல்

    அதன்பின் மேடையில் அதிமுகவின் 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக பொதுக்குழு தெரிவித்தது. சிவி சண்முகம், கேபி முனுசாமி ஆகியோர் பொதுக்குழுவிற்கு எதிராக மிக கடுமையாக பேசினர். பின்னர் பேசிய அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் பொதுக்குழுவை மீண்டும் ஜூலை 11ம் தேதி கூட்டுவோம் என்று அறிவித்த்தார். அதில் ஒற்றை தலைமை பற்றி முடிவு எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

    ஓபிஎஸ் வெளியேறினார்

    ஓபிஎஸ் வெளியேறினார்

    இதனால் மனம் உடைந்த ஓபிஎஸ் மேடையில் இருந்து வெளியேறினார். அதோடு துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கமும் மேடையில் இருந்து வெளியேறினார். வெளியே சென்ற ஓபிஎஸ் மீது வாட்டர் பாட்டில்கள் வீசப்பட்ட சம்பவமும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவில் மோதல்களுக்கு பின்.. பொதுக்குழுவில் சாப்பிடாமல்.. வெளியே சென்று போகும் வழியில் சங்கீதாவில் சாப்பிட்டுவிட்டு கிரீன்வேஸ் இல்லம் சென்றார் ஓ பன்னீர்செல்வம்.

    என்ன நடந்தது?

    என்ன நடந்தது?

    இந்த நிலையில்தான் நேற்று மாலை அவர் திடீரென டெல்லிக்கு அவசரமாக புறப்பட்டு சென்றார். இந்த பயணத்தில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் உடன் இருந்தார். இந்த பயணம் திடீரென மேற்கொள்ளப்பட்டது ஏன் ஓபிஎஸ் தரப்பிடம் விசாரித்தோம். அதன்படி அதிமுகவில் பிரச்சனைகள் ஏற்பட்ட போதே.. லகான் கையை விட்டு செல்கிறது என்று தெரிந்தது ஓபிஎஸ் டெல்லி மூலம் நூல் விட பார்த்த்தார். டெல்லி உதவியுடன் அதிமுகவில் பிரச்னையை சரி செய்ய பார்த்தார். ஆனால் டெல்லி பெரிதாக இதில் விருப்பம் காட்டவில்லை.

    விருப்பம்

    விருப்பம்

    அதிமுக விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று அண்ணாமலையும் வெளிப்படையாக தெரிவித்தார். இந்த நிலையில்தான் நேற்று அதிமுக விவகாரம் பெரிதாக வெடித்தது. இதையடுத்தே அண்ணாமலை, சிடி ரவி ஆகியோர் நேற்று எடப்பாடி, ஓபிஎஸ்ஸை அடுத்தடுத்து சந்தித்தனர். இதில் வேறு பல விஷயங்கள் பேசப்பட்டாலும், ஓபிஎஸ்- இபிஎஸ் மோதல் பற்றியும் பேசி இருக்கிறார்கள். ஆனால் எடப்பாடி இது உட்கட்சி விவகாரம் நீங்கள் தலையிட வேண்டாம் என்று பாலிசாக சொன்னதாக கூறப்படுகிறது.

    ஓபிஎஸ் அதிருப்தி

    ஓபிஎஸ் அதிருப்தி

    இந்த விவரங்களை அண்ணாமலை நேற்று ஓபிஎஸ்ஸிடம் தெரிவித்துள்ளார். எடப்பாடி விட்டுக்கொடுக்க மாட்டேங்குகிறார். நீங்கள்தான் விட்டுக்கொடுங்களேன் என்று ஓபிஎஸ் பேசி இருக்கிறார். இதனால் அதிருப்தி அடைந்த ஓபிஎஸ்.. நான் எத்தனை முறை விட்டுக்கொடுப்பது. பாஜக சொல்லித்தானே நான் மீண்டும் அதிமுகவில் எடப்பாடியோடு சேர்ந்தேன். துணை முதல்வர் பதவியை ஏற்றது பிரதமர் மோடி சொல்லித்தானே. யார் சூத்திரதாரி இதற்கு எல்லாமே.. ஏன் அரசியல் வாழ்க்கை சரிகிறதே என்று மிக கடுமையாக புலம்பி இருக்கிறாராம்.

    தர்ம யுத்தம்

    தர்ம யுத்தம்

    தர்ம யுத்த நாட்களை எல்லாம் நினைவு படுத்தி பேசி இருக்கிறாராம். இதன் பின்பே டெல்லிக்கு சிடி ரவி மூலம் உடனே தகவல் சென்றுள்ளது. அதிமுகவில் நடந்த பிரச்சனைகளை உணர்ந்த டெல்லி உடனே ஓபிஎஸ்சை அழைத்துள்ளது. வாருங்கள்.. பேசலாம் என்று ஓபிஎஸ்ஸிடம் டெல்லி தலைமை கூறி இருக்கிறதாம். அதோடு சில மெகா உத்தரவுகள் உள்ளன. அதை நீங்கள் செய்ய வேண்டும் என்றும் கூறி இருக்கிறதாம். இதனால்தான் அவர் பரக்க பரக்க டெல்லி சென்றார்.

    என்ன நடக்கும்?

    என்ன நடக்கும்?

    ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக டெல்லி களமிறங்குமோ என்ற கேள்வியை இது எழுப்பி உள்ளது. நேற்று மீட்டிங்கில்.. பாஜகவை எடப்பாடி கண்டுக்க மாட்டார். உங்களுக்கு கூட்டணி கிடைப்பது கஷ்டம் என்று ஓபிஎஸ் பேசி இருக்கிறாராம். இதுவும் கூட டெல்லி இந்த விவகாரத்தில் திடீரென ஆர்வம் காட்ட காரணம் என்கிறார்கள். இந்த நிலையில் நேற்று விமானம் நிலையம் செல்லும் வழியில், செய்தியாளர்களிடம் வெயிட் அண்ட் சீ என்று கூறிவிட்டு ஓபிஎஸ் சென்றார்.. இன்று அவர் நடத்தும் மீட்டிங்குகள்.. அவர் அரசியல் கெரியரை தீர்மானிக்க போவதாக அமையும் என்கிறார்கள்.

    English summary
    Why did O Panneerselvam go to Delhi amid the tussle with Edappadi Palanisamy? அதிமுகவில் நேற்று கடுமையான மோதல், பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் திடீரென மாலை டெல்லிக்கு கிளம்பினார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X