India
 • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓஹோ.. அதான் விஷயமா.."2 விஐபிக்கள்"..கொளுத்தி போட்ட ஓபிஎஸ்..பற்றி எரியும் அதிமுக கூடாரம்.. என்னாச்சு?

Google Oneindia Tamil News

சென்னை: நேற்று சசிகலா பற்றி மறைமுகமாக ஓபிஎஸ் கொளுத்தி போட்ட பேச்சு, இப்போது வரை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.. ஓபிஎஸ் அப்படி பேசுவதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்தெல்லாம் அனுமானத்துடன் செய்திகள் பரபரத்து கொண்டிருக்கின்றன.

அன்று தேவர் ஜெயந்தி விழாவின்போது, சசிகலா பற்றி ஓபிஎஸ் கூறிய கருத்தாக இருந்தாலும் சரி, நேற்றைய தினம் கிறிஸ்துமஸ் விழாவின்போது, சொன்ன கருத்தாக இருந்தாலும் சரி, கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது..

 இலங்கை கடற்படையால் 13 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு-3 நாட்களில் 68 பேர் கைது- ராமேஸ்வரத்தில் ஸ்டிரைக் இலங்கை கடற்படையால் 13 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு-3 நாட்களில் 68 பேர் கைது- ராமேஸ்வரத்தில் ஸ்டிரைக்

சசிகலாவை கட்சிக்குள் சேர்த்து கொள்வீர்களா என்று செய்தியாளர்கள் அன்று கேட்டதற்கு, அதுபற்றி கட்சியின் தலைமை நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்றார் ஓபிஎஸ்.. ஆனால் நேற்றைய தினம் யாருமே எந்த கேள்வியையும் கேட்காமலேயே அவராகவே சசிகலா பேச்சை ஆரம்பித்ததுதான் பெரும் கொந்தளிப்பை கட்சிக்குள் ஏற்படுத்தி வருகிறது.

 ஓபிஎஸ்

ஓபிஎஸ்

"தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு அழகு" என்று ஓபிஎஸ் ஏன் சொன்னார்? யாரால் சொன்னார்? அப்படி சொல்ல வேண்டிய கட்டாயம் என்ன? யாராவது அழுத்தம் தந்தார்களா? என்பன போன்ற சந்தேகங்களுடன் பரபரப்பும் அதிமுக கூடாரத்தில் கூடி வருகிறது... இதற்கு வழக்கம்போல் உடனடியாக ஓடிவந்து கருத்து சொல்லி ஜெயக்குமார் மறுத்தாலும், ஓபிஎஸ் பேச வேண்டிய நேற்றைய தினம் ஏன் வந்தது? என்பதுதான் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

நிர்வாகிகள்

நிர்வாகிகள்

இது தொடர்பாக கட்சிக்குள்ளேயே என்ன நடக்கிறது என்று ஒருசில நிர்வாகிகளிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது: கட்சியை ஒருங்கிணைக்கும் பொறுப்பில் இருக்கும் ஓபிஎஸ், கட்சியை ஒருங்கிணைக்காமல் பிளவுபடுவது போல பேசி வருகிறார்.. எதற்காக அன்று திடீரென ஸ்டாலினை புகழ்ந்தார் என்று தெரியவில்லை. உடனே கருணாநிதியையும் புகழ்ந்தார்.. பிறகு துரைமுருகனையும் புகழ்ந்தார்.. இதற்கே இன்னும் ஒரு விடை எங்களுக்கு கிடைக்கவில்லை.. அதற்குள் சசிகலா பற்றி பேச்சை அவராகவே எடுக்கிறார்.. சர்ச்சையாக பேசக்கூடாது என்று நாங்கள் போய், கட்சி ஒருங்கிணைப்பாளரிடம் எடுத்து சொல்ல முடியாது.. இதை இரு தலைமைகளும்தான் உட்கார்ந்து பேசி தீர்த்து கொள்ள வேண்டும்" என்று வேதனையுடன் கூறினர்.

 ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

அதேபோல, ஓபிஎஸ் ஏன் அப்படி பேசினார்? என்று அரசியல் நோக்கர்கள் சிலரிடம் நாம் பேசினோம்.. அவர்கள் யூகத்தின் அடிப்படையில் சில கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.. "ஓபிஎஸ் தானாகவே அப்படி பேசியிருக்க வாய்ப்பிருக்காது.. கடந்த சில தினங்களில் 2 விஐபிக்கள் ரஜினியை சென்று சந்தித்து பேசியதையும் இங்கு பொருத்தி பார்க்க வேண்டி உள்ளது..

 அண்ணாமலை

அண்ணாமலை

சசிகலா சமீபத்தில் ரஜினியை சந்தித்து பேசியபோது, பாஜக மேலிடத்தில் தன்னை பற்றி பரிந்துரைக்கவும் சொன்னதாக செய்திகள் வந்தன.. அப்போது ரஜினியும் மேலிடத்தில் பேசி பாசிட்டிவ் சிக்னலை பெற்று தந்ததாகவும் சொன்னார்கள். அதேபோல, அண்ணாமலையும் ரஜினியை சந்தித்து பேசியிருக்கிறார்.. அப்போதுதான் சசிகலா வந்து போன விஷயத்தை ரஜினி அண்ணாமலையிடம் தெரிவித்து, அது தொடர்பாக இருவரும் விவாதித்தாகவும் தெரிகிறது.

பேட்டி

பேட்டி

அதுமட்டுமல்ல, அன்றைய தினமே அண்ணாமலை டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் சசிகலா பற்றின கேள்விக்கும் பதிலளித்துள்ளார்.. "தமிழக அரசியலில் யாரையும் ஒதுக்கிவிட முடியாது... யாரும் எப்போதும் மீண்டு வரலாம்... தொண்டர்கள் இவர்தான் நம் தலைவர் என்று முடிவு செய்துவிட்டால் அதை யாரும் தடுக்க முடியாது. சசிகலாவின் பிளஸ், மைனஸ் என்றெல்லாம் கருத்து சொல்ல விரும்பவில்லை.. ஆனால், மாநிலத்தின் வளர்ச்சிக்காக நல்ல தலைவர்கள் சேர்வதும், அதிமுக வலுவாக இருக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறேன்" என்றார்..

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

அதனால், பாஜகவுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வரும் ஓபிஎஸ், அவராகவே இப்படி பேசியிருக்க முடியாது.. அப்படி எடப்பாடியை எதிர்த்து கொண்டும் கட்சியில் ஓபிஎஸ் தொடர முடியாது.. எனவே, சசிகலா விஷயத்தில் மேலிட சிக்னல் வலுவாக கிடைத்திருக்கலாம்.. அதைதான் ஓபிஎஸ் நேற்றைய தினம் வெளிப்படுத்தியிருக்க கூடும்.. சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் ஒவ்வொருவராக கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகிறார்கள்.. அது தொண்டர்களாக இருந்தாலும் சரி, அன்வர் ராஜா போன்ற சீனியர்களாக இருந்தாலும் சரி..

  Sasikala-வை குறிப்பிட்டாரா OPS? டக்கென திரும்பிய எடப்பாடி | Oneindia Tamil
   அன்வர் ராஜா

  அன்வர் ராஜா

  அப்படி கட்சியை விட்டு நீக்கும்போது, அதில் கையெழுத்திடுவதே ஓபிஎஸ்தான்.. இப்போது ஓபிஎஸ்ஸே சசிகலாவை பற்றி பேசியிருக்கும்போது, இது எந்த வகையில் சேரும்? அப்படியானால் அன்வர் ராஜாவும் இதைதானே அன்னைக்கு பேசினார்? அன்று மா.செ. கூட்டத்தில் நாற்காலியை எடுத்து அடிக்க பாய்ந்த சிவி சண்முகம், ஓபிஎஸ்ஸுக்கு இது பற்றி என்ன பதில் சொல்ல போகிறார்? ஆக மொத்தம் தொண்டர்கள்தான் குழம்பி போயுள்ளனர்" என்றனர்.

  English summary
  Why did OPS talk about Sasikala and What are the reasons for this
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X