"முட்டு" கொடுத்து.. புட்டு புட்டு வைத்து.. பாஜகவை வெளுத்த "தலை".. திமுகவுக்கு செம குஷி..!
காரைக்குடி: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், பாஜகவை லிஸ்ட் போட்டு விமர்சித்துள்ளதுடன், திமுக அரசை பாராட்டி உள்ளார்.
2 நாட்களாக தமிழக காங்கிரஸ் சார்பில், சிந்தனையாளர்கள் பயிற்சி கருத்தரங்கம், மகாபலிபுரத்தில் நடைபெற்றது.
சென்னை உட்பட.. 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை வெளுக்குமாம்.. அலர்ட் மக்களே!
இதில், இந்த கூட்டத்தில் கூட்டணியில் உள்ள திமுக குறித்தும் பேசப்பட்டுள்ளது.. குறிப்பாக மாவட்ட செயலாளர்கள், திமுக பற்றி கடுப்பில் பொரிந்து தள்ளிவிட்டார்களாம்.

எம்பி சீட்டுகள்
ராகுல்காந்தியை பிரதமராக்குவோம்னு ஸ்டாலின் சொன்னார். ஆனா, எம்பி தேர்தலில் காங்கிரசுக்கு குறைவான சீட்டுகளை ஒதுக்கினார். ராஜீவ் காந்தியை மரணத்துக்கு காரணமானவர்களை கட்டிப்பிடித்து ஆதரிக்கிறார்... பாஜகவை வெளியில் தான் எதிர்ப்பது போல திமுக காட்டிக் கொள்கிறது. ஆனால் உள்ளுக்குள் அவர்களுக்கும் ஒரு உடன்பாடு இருக்கிறது" என்றெல்லாம் கொந்தளித்துள்ளனர் மாவட்ட தலைவர்கள்.. எனவே, திமுகவுக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்ற முடிவாகி உள்ளது. இந்த முடிவை, ப.சிதம்பரத்திடமும் சொல்லி உள்ளனர்.

நீண்ட கால உறவு
அதற்கு ப.சி. உடனடியாக, வேண்டாம் என்று மறுப்பு சொன்னாராம்.. நீண்ட கால உறவுகளுக்காக திமுக காங்கிரஸ் கூட்டணி உருவாக்கப்பட்டது. குறுகிய கால நோக்கத்திற்காக அல்ல. திமுகவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம் என தடுத்துள்ளார்.. இதனால் பாஜகவுக்கு எதிராக கூட தீர்மானம் நிறைவேற்றாமல் கூட்டத்தை முடித்துள்ளனர் போலும்.. இதனால் கடுப்பான நிர்வாகிகள், திமுக தயவில் எம்.பி.யாகியிருப்பதால் திமுகவுக்கு விசுவாசம் காட்டுகிறார் என்று ப.சிதம்பரம் மீது காட்டமாக இருக்கின்றனராம் கதர் சட்டையினர்..

எம்பி சீட் - சீனியர்கள்
இந்த எம்பி சீட் கிடைப்பதற்காக, டெல்லியில் முகாமிட்டு வந்தவர், பிறகு ஒருநாள் திடீரென ஸ்டாலினையும் சந்தித்து பேசியிருந்தார் ப.சிதம்பரம்.. இவருக்கு சீட் தந்தபோதே, பலரும் அதிருப்திக்கு உள்ளாகவும் செய்தனர்.. இவருக்கும் எம்பி சீட், இவர் மகனுக்கும் எம்பி சீட்.. நாங்க எல்லாம் இப்படியே காத்திருப்பதுதானா? என்று சீனியர்கள் புலம்பியதாகவும் செய்திகள் வந்தன.. இப்படி ப.சி. குறித்து சொந்த கட்சிக்குள்ளேயே புலம்பல்கள் எழுந்து வரும் நிலையில், இப்போது திடீரென முதல்வர் ஸ்டாலினை பாராட்டியும், பாஜகவை சரமாரியாக விமர்சித்தும் ஒரு பேட்டியும் தந்துள்ளார் ப.சிதம்பரம்.

கார்த்தி சிதம்பரம்
காரைக்குடியில் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழக அரசியலில் கூடுதலாக கவனம் செலுத்தும் வாய்ப்பாக மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைத்திருக்கிறது... குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் விருப்பம். இலங்கை ஒரு காலத்தில் தனிநபர் வருமானத்தில் உயர்ந்த நாடாகவும், 98 சதவீதம் எழுத்தறிவுமிக்க மக்கள் மற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்ற நாடாகவும் இருந்தது.

நிபுணர்கள்
ஏற்றுமதியில் பல துறைகளில் முன்னணியில் இருந்த நாடு அது... அவங்களுக்கு இன்னைக்கு இந்த நிலைமை என்றால், நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டும்.. அதாவது தன்னிச்சையாக முடிவுகளை அரசு எடுக்காமல் பொருளாதார நிபுணர்களை கலந்தாலோசித்தும், எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை கேட்டும் எடுத்த முடிவுகள்தான் நிலைத்த முடிவுகளாக, நல்ல விளைவுகள் தரக்கூடிய முடிவுகளாக இருக்கும். இப்போதும் நம் நாட்டில் பணவீக்கம் உயர்ந்திருக்கிறது. விலைவாசி உயர்வுக்கு அந்நிய காரணிகளும், உள்நாட்டு காரணிகளும் இருக்கின்றன.

கன்ட்ரோல்
இரண்டும் சேர்த்துத்தான் விலைவாசி உயர்வை தீர்மானிக்கிறது. உள்நாட்டு காரணிகளை நிர்ணயிப்பதில் மத்திய அரசு முற்றிலும் தவறிவிட்டது. 3, 4 மாதங்களுக்கு முன்பே பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை அரசு குறைத்திருக்க வேண்டும். ஜி.எஸ்.டி.வரிவிகிதம் மற்றும் சுங்கவரியை குறைத்திருக்க வேண்டும். இதையெல்லாம் தடுக்க அரசு தவறி விட்டது. அதனால்தான் பணவீக்கம் கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. உக்ரைன் போர், கச்சா எண்ணை விலை உயர்வு போன்றவையும் சேர்ந்துகொண்டு பாதிப்பை தந்துவிட்டது..

பணவீக்கம்
அதனால், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் சேர்ந்து முடிவு எடுத்தால்தான் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியும். வட்டி விகிதத்தை உயர்த்தியிருப்பதை ஒன்றரை மாதங்களுக்கு முன்பேயே ரிசர்வ் வங்கி செய்திருக்க வேண்டும்... அரசின் தாமதமான முடிவுகள் தான், தற்போதைய விலைவாசி உயர்வுக்கான காரணமாகும்.. அதனால், முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் எந்தவிதமான குறைகளையும், தவறுகளையும் காண முடியவில்லை" என்றார்.