சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"டி.ஆர். பாலுதான் மெயின்".. போட்டு கொடுத்த ஆர்.எஸ். பாரதி.. அதிர்ந்து போன அறிவாலயம்.. என்னாச்சு!

டிஆர் பாலு பற்றி பேசி ஆர்எஸ் பாரதி மீண்டும் சர்ச்சையாக பேசி வம்பில் சிக்கி கொண்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவின் மூத்த தலைவரும், அக்கட்சியின் அமைப்புச் செயலாளருமான ஆர்எஸ் பாரதி பேசிய பேச்சு சர்ச்சையை உருவாக்கி வருகிறது.

திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மாநிலங்களவை எம்பியாக இருக்கிறார்.. இவர் சீனியர் என்றாலும், அடிக்கடி ஏதாவது சர்ச்சையாக பேசி சிக்கி கொள்வார்.

ஏற்கெனவே பட்டியல் இனத்தவர் குறித்து பேசி வசமாக மாட்டிக் கொண்டதால், அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது... அதே போல, மீடியாக்களை "சிவப்பு விளக்கு" பகுதியுடன் தொடர்புபடுத்தி பேசியதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

சகுனம் சரியில்லன்னாங்களே.. இப்போ பாருங்க! 60 வருடத்தில் இப்படி ஆனதே இல்லை.. ஆடிப்போன அறிவாலயம்! சகுனம் சரியில்லன்னாங்களே.. இப்போ பாருங்க! 60 வருடத்தில் இப்படி ஆனதே இல்லை.. ஆடிப்போன அறிவாலயம்!

 ஆர்எஸ் பாரதி

ஆர்எஸ் பாரதி

இப்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார். திமுகவின் ஓராண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது, "திமுகவின் தேர்தல் அறிக்கையை டிஆர் பாலு தான் தயார் செய்தார். தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றாமல் ஏதாவது விட்டுப் போய் இருந்தால், அதை அவரிடம் தான் போய் கேட்க வேண்டும். அவர் வீட்டு முன்பு தான் சென்று மறியல் செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு, தெரியாமல் சில முண்டங்கள் ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். கேட்க வேண்டிய ஆள் டி.ஆர்.பாலு தான்" என்றார். இந்த பேச்சு மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

 டிஆர் பாலுதான்

டிஆர் பாலுதான்

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் ஏன் நிறைவேற்றவில்லை என்று முதல்வர் ஸ்டாலினை எதிர்க்கட்சிகள் அனைத்துமே கேள்வி எழுப்பி வரும் சூழலில், டிஆர் பாலுதான் எல்லாத்துக்கும் காரணம் என்பதுபோல அவரை போட்டுக் கொடுத்து விட்டாரே என்ற கொந்தளிப்பு திமுகவினரிடம் ஏற்பட்டு வருகிறது. இந்தவீடியோவை எதிர்க்கட்சிகளும் வைரலாக்கி கொண்டிருக்கிறார்கள்.. அத்துடன் எதிர்க்கட்சிகளான, அதிமுகவும், பாஜகவும் பதிலடிகளையும் தந்து வருகின்றனர்.

உதயநிதி

உதயநிதி

ஏற்கனவே, அமைச்சரவையில் விரைவில் மாற்றம் என்ற செய்தி இந்த ஒரு வருட காலமாகவே அடிபட்டு வருகிறது.. ஆனால், ஸ்டாலினின் கரிசனம், கனிவு மனப்பான்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், குறிப்பிட்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமலேயே உள்ளது.. தற்போதுவரை அமைச்சரவையும் மாற்றப்படவில்லை. தற்போது, உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என திமுகவில் பலர் விரும்புவதால், அதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கிறது..

கொந்தளிப்பு

கொந்தளிப்பு

இப்படிப்பட்ட சூழலில் ஆர்எஸ் பாரதி பேசியது கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதாம்.. இவர் மீது ஏற்கனவே புகார்கள், விமர்சனங்கள் உள்ளதால்தான், எம்பி சீட் இந்த முறை மறுக்கப்பட்டது.. இல்லாவிட்டால் இவருக்கு நிச்சயம் பதவி ஒதுக்கப்பட்டிருக்குமாம்... எதிர்க்கட்சிகள் திமுகவை ஒவ்வொரு விஷயத்துக்கும் விமர்சித்து கொண்டிருக்கும் நிலையில், மறுபடியும் இவருக்கே சீட் தந்தால் அது விவகாரமாகிவிடும் என்பதால்தான் அடக்கி வாசித்தது.. ஆனால், மறுபடியும் ஆர்எஸ் பாரதி அவராகவே சிக்கி கொண்டதுடன், டிஆர்பாலுவை தேவையில்லாமல் இழுத்து கொண்ட வந்துவிட்டாரே என்ற புலம்பல்கள் வெடித்து வருகின்றன..!

ஸ்டாலினா? டிஆர் பாலுவா?

ஸ்டாலினா? டிஆர் பாலுவா?

ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கை என்பது அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சேர்ந்து கட்சி தலைவர் ஆலோசித்து முடிவெடுத்து, அதற்க பிறகுதான் அறிவிப்பது வழக்கம்.. இன்னும் சொல்லப்போனால், கட்சியின் தலைவருக்குத்தான் அதில் முழு பொறுப்பும் உள்ளது.. வாக்குறுதியை நிறைவேற்றினால் பாராட்டும், நிறைவேறாவிட்டால், விமர்சனமும் தலைவரையே சாரும்.. அப்படி இருக்கும்போது, டிஆர் பாலுவை எப்படி இதில் சம்பந்தப்படுத்தப்படுத்த முடியும்? கட்சிக்கு தலைவர் ஸ்டாலினா? டி.ஆர்.பாலுவா? என்ற கேள்விகளும் எழுந்து வருகின்றன.

English summary
why did senior leader rs bharathi say in dmk meeting and What is the reason for the dissatisfaction of mk Stalin டிஆர் பாலு பற்றி பேசி ஆர்எஸ் பாரதி மீண்டும் சர்ச்சையாக பேசி வம்பில் சிக்கி கொண்டுள்ளார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X