சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கட் அண்ட் ரைட்.. என்ன நினைக்கிறீங்க? திருமா மணிவிழாவில் "சீறிய" ஸ்டாலின்.. ஒரேயடியாக "புல் ஸ்டாப்"

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக - திமுக கூட்டணி, நட்பு தொடர்பான யூகங்கள் அனைத்திற்கும் ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

Recommended Video

    Stalin தேசிய தலைவராக வேண்டிய நேரம் வந்துவிட்டது - Thol. Thirumavalavan *Politics

    கடந்த சில நாட்களாக திமுக - பாஜக நெருங்கி போவதாக பல்வேறு விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக நடந்து வந்தன. தமிழ்நாடு அரசியலில் சமீப காலமாக நடந்த ஒரு சில சம்பவங்கள் காரணமாக இரண்டு கட்சிகளும் நெருங்கி போவதாக விவாதங்கள் எழுந்தன.

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறக்க முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவை திமுக அழைத்ததில் இருந்தே இந்த விவாதம் நடந்து வந்தது. பின்னர் சமீபத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் மோடி - ஸ்டாலின் இருவரும் நெருக்கமாக சிரித்து பேசிக்கொண்டு இருந்தனர்

    இது போக நேற்று முதல்நாள் ஆளுநர் ஆர்.என் ரவி கொடுத்த தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு ஆளுனருடன் பேசியதும் விவாதத்தை ஏற்படுத்தியது.

    இது போக நேற்று மாலையே முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்வதாக இருந்தது.

    ஜிஎஸ்டி நிலுவைத் தொகை: பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்! ஜிஎஸ்டி நிலுவைத் தொகை: பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

    பாஜக கூட்டணி

    பாஜக கூட்டணி

    இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க கல்வி தொலைக்காட்சிக்கு சிஇஓவாக வலதுசாரி கொள்கை கொண்ட ஒருவரை நியமிக்க திட்டமிட்டது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களால் பாஜக - திமுக இணைந்து செயல்பட தொடங்குகிறது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இன்னும் சில அரசியல் விமர்சகர்கள் ஒரு படி மேலே போய் எடப்பாடி - பாஜக உறவு சரியில்லை. திமுக இனியும் காங்கிரசை நம்பாது. எனவே பாஜக - அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளது என்றும் பேச தொடங்கினர்.

    ஸ்டாலின் பேச்சு

    ஸ்டாலின் பேச்சு

    இந்த நிலையில்தான், விசிக தலைவரும், எம்பியுமான தொல்.திருமாவளவனின் 60வது பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த மணிவிழாவில் திருமா கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு முதல்வர் ஸ்டாலினிடம் மேடையிலேயே ஒரு முக்கிய கோரிக்கையை வைத்தார். பாஜகவுடன் திமுக சமரசம் செய்யவே கூடாது என்று அவர் கோரிக்கை வைத்தார்.

    சமரசம்

    சமரசம்

    பாஜகவுடன் குறைந்த அளவு சமரசத்தை திமுக செய்ய நினைத்தால் கூட அதனால் பாஜக மீதான எதிர்ப்பு நீர்த்து போய் விடும் என்று திருமா கூறினார். விமர்சனமாக வைக்காமல் கோரிக்கையாக திருமா வைத்ததை முதல்வர் ஸ்டாலினும் தன்மையாக எதிர்கொண்டு பதில் அளித்தார். அதில், திமுக கூட்டணி கொள்கை கூட்டணி. எங்கள் கொள்கை அறிவாலயத்தில் எப்படி இருக்கிறதோ அப்படித்தான் ஆட்சியிலும் இருக்கும். நாங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்.

    பாஜக சமரசம்

    பாஜக சமரசம்

    பாஜகவுடன் சிறிய சமரசத்தை கூட நாங்கள் செய்து கொள்ள மாட்டோம். நான் கட்சித் தலைவர்.. மாநில முதல்வர் என்ற இரண்டு பொறுப்பில் இருக்கிறேன். மாநில முதல்வர் பொறுப்பில் நான் இருக்க காரணம் நீங்கள்தான். மேடையில் இருக்கும் திருமா உள்ளிட்டோர் காரணமாக நான் இங்கே இருக்கிறேன். நான் என்ன டெல்லிக்கு காவடி தூக்கவா செல்கிறேன். கை கட்டி கும்பிடு போடவா செல்கிறேன்.

    யார்?

    யார்?

    உத்தரவு என்ன என்று கேட்பதற்கா நான் செல்கிறேன்? கலைஞரின் பிள்ளை நான். உறவுக்குக் கைகொடுப்போம், உரிமைக் குரல் கொடுப்போம் என்பதை மனதில் நிலைநிறுத்திக் கொள்பவன் நான் என்பதை மறக்க வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார். முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணம் காரணமாக அவர் பாஜகவுடன் நெருக்கமாகி வருவதாக பல்வேறு வாதங்கள் எழுந்தன. மோடியுடன் ஸ்டாலின் நெருக்கமாகி வருகிறாரா என்று வாதங்கள் வைக்கப்பட்டன.

    முற்றுப்புள்ளி

    முற்றுப்புள்ளி

    ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று பேசி இருக்கிறார். இதன் மூலம் பாஜக - திமுக கூட்டணி தொடர்பான விவாதங்களுக்கு ஸ்டாலின் முழுக்கு போட்டுள்ளார் என்று அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். சமீபத்தில் கூட பிரபல மலையாள ஊடகமான மனோரமா ஊடகத்தின் 'இந்தியா 75' என்ற விழா நேற்று இணைய வழியாக நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் ஆன்லைன் வழியாக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், திமுக சிபிஎம் கூட்டணி என்பது கொள்கை கூட்டணி.

    கூட்டணி

    கூட்டணி

    நாங்கள் வெறும் தேர்தலுக்காக கூட்டணி வைக்கவில்லை. நாங்கள் ஆரோக்கியமான ஆலோசனைகளை செய்து வருகிறோம். தீக்கதிர் சிபிஎம்மின் அதிகாரபூர்வ பத்திரிகை. ஆனால் அவர்களே கூட எங்களை ஆக்கபூர்வமாக விமர்சனம் செய்வார்கள். அந்த அளவிற்கு எங்களுக்கு இடையிலான உறவு ஆரோக்கியமானதாக உள்ளது. தமிழ்நாட்டில் திமுக தலைமையில் உள்ள கூட்டணி தொடரும். இது கொள்கை ரீதியாக இணைந்த கூட்டணி என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Why did Stalin close the possibility of an alliance with the BJP? What happened?பாஜக - திமுக கூட்டணி, நட்பு தொடர்பான யுகங்கள் அனைத்திற்கும் ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X