ஸ்டாலின் ரூமில் காலடிவைத்த ஓபிஎஸ் மகன்.. முதல்வரை தனியாக சந்தித்த ரவீந்திரநாத்.. என்ன காரணம்?
சென்னை: முதல்வர் ஸ்டாலினை, ஓபிஎஸ் மகனும், தேனி எம்பியுமான ரவீந்திரநாத் தனியாக சந்தித்து பேசியுள்ளார்..!
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவில் போட்டியிட்ட அத்தனை பேரும் மண்ணை கவ்வ, ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மட்டுமே வெற்றியை பெற்றார்..
ராஜிவ் கொலை: அன்றே மன்னித்த ராகுல்.. 3 ஆண்டுகளாகியும் முறுக்கிக்கொண்டு நிற்கும் தமிழக காங்கிரஸ்
இது ஒரு பக்கம் அதிமுகவுக்கு மகிழ்ச்சிதான் என்றாலும், இவர் பெற்ற வெற்றியை முன்வைத்துத்தான் அன்று ஒற்றைத் தலைமை என்ற புகைச்சலே கிளம்பியது.

புகைச்சல்
எனினும் எதை பற்றியும் கவலைப்படாமல், தன் தொகுதிக்கான வளர்ச்சி பணியில் முழு கவனம் செலுத்தி கொண்டிருக்கிறார் ரவீந்திரநாத்.. சசிகலாவை ஓ.ராஜா சந்தித்தபோதும்சரி, எடப்பாடியுடன் ஓபிஎஸ் மறைமுகமாக மல்லுக்கட்டி கொண்டிருந்தாலும் சரி, தானுண்டு, தன் தொகுதியுண்டு என்று பிஸியாகவே காணப்படுகிறார் ரவீந்திரநாத்.

திருமாவளவன்
இந்தநிலையில், மாநில வளர்ச்சிக்குழுக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் அனைத்து கட்சிகளின் எம்பிக்கள் கலந்துகொண்டனர்... குறிப்பாக, விசிக தலைவர் திருவமாவளவன், காங்கிரஸ் திருநாவுகரசர், ஓ.பி. ரவிந்திரநாத் உட்பட பலரும் கலந்துகொண்டார்... முதல்வர் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது.. அப்போது ஸ்டாலின் பேசியதாவது:

பரந்த உள்ளம்
"நீங்கள் அனைவரும் ஒரு மாநிலத்தினுடைய வளர்ச்சிக்கு ஆலோசனை சொல்வதற்காக வந்திருக்கிறீர்கள்.. இந்த ஆட்சி அமைந்தபோதே நான் குறிப்பிட்டு ஒன்றை சொல்லி இருந்தேன்.. இது என்னுடைய அரசு கிடையாது.. நம்முடைய அரசு என்று சொன்னேன்.. நம்முடைய அரசு என்ற பரந்த உள்ளத்தோடு நீங்கள் எல்லாரும் இங்கே வந்துள்ளது மகிழ்ச்சி.. நம் மாநிலத்துக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற ஆலோசனைகளை சொல்லுங்கள்" என்று கேட்டுக்கொண்டார். இந்த கூட்டம் முடிந்ததுமே, முதல்வர் அவரது அலுவலகத்துக்கு சென்றுவிட்டார்..

ரவீந்திரநாத்
இதன்பிறகு முதல்வர் ஸ்டாலினை அவரது அலுவலகத்திலேயே சென்று, ஓ.பி. ரவிந்திரநாத் தனியாக சந்தித்து பேசினார்... நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் பல்வேறு வசதிகள் செய்துதர வேண்டும் என்றும், தேனி மக்களவை தொகுதிக்கான மற்ற கோரிக்கைகள் குறித்தும் அடங்கிய மனுவையும் முதல்வரிடம் அளித்தார்.. மேலும் பாரதியார் கவிதைகள் புத்தகத்தை முதல்வருக்கு எம்பி ரவீந்திரநாத் பரிசாக அளித்தார்.. ஸ்டாலினை, ஓ.பி. ரவிந்திரநாத் தனியாக சந்தித்து மனு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.