சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வலைவீசும் திமுக.. தூது அனுப்பும் அதிமுக.. தேமுதிகவுக்கு அவ்வளவு பலம் இருக்கிறதா? உண்மை என்ன?

வரிசையாக நடக்கும் தேர்தல்களில் எல்லாம் தேமுதிக மிக மோசமாக தோல்வி அடைந்தால் கூட, அந்த கட்சியுடன் கூட்டணி வைக்கவே எல்லா கட்சிகளும் விருப்பம் தெரிவிக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தேமுதிகவுக்கு கூட்டணிக்காக தொடரும் கட்சிகளின் அழைப்புகள்

    சென்னை: வரிசையாக நடக்கும் தேர்தல்களில் எல்லாம் தேமுதிக மிக மோசமாக தோல்வி அடைந்தால் கூட, அந்த கட்சியுடன் கூட்டணி வைக்கவே எல்லா கட்சிகளும் விருப்பம் தெரிவிக்கிறது.

    இந்த லோக்சபா தேர்தலுக்காக தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்பதே பெரிய கேள்வியாக இருக்கிறது. இதை அலசுவதற்கு முன் தேமுதிகவின் முந்தைய தேர்தல் செயல்பாடுகளை ஆராய வேண்டும். 2006ல்தான் தேமுதிக முதன்முதலாக தேர்தலில் நின்றது.

    அப்போது நல்ல வாக்கு வங்கியை பெற்று இருந்த தேமுதிக வரிசையாக பின்னடைவை சந்தித்தது. கடைசியாக நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் மிக மோசமாக தோல்வியை சந்தித்தது.

    2006 சட்டமன்றம்

    2006 சட்டமன்றம்

    தேமுதிக முதன் முதலாக போட்டியிட்ட தேர்தலான 2006 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியில் ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது. இதில் மொத்தம் 28 லட்சம் வாக்குகளை தேமுதிக பெற்றது. சதவிகிதம் அடிப்படையில் பார்த்தால் 8.38% வாக்குகளை தேமுதிக பெற்றது. விஜயகாந்த் மட்டுமே இந்த தேர்தலில் வெற்றிபெற்றார்.

    2009 லோக்சபா தேர்தல்

    2009 லோக்சபா தேர்தல்

    2009 லோக்சபா தேர்தலில் மொத்தம் 39 இடங்களில் தமிழகத்தில் தேமுதிக போட்டியிட்டது. இதில் ஒன்றில் கூட தேமுதிக வெற்றிபெறவில்லை. ஆனால் 31 லட்சம் வாக்குகளை வென்றது. பதிவான வாக்குகளில் மொத்தம் 10.09% வாக்குகளை தேமுதிக இதில் பெற்றது.

    2011 சட்டமன்ற

    2011 சட்டமன்ற

    2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேமுதிக தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட 41 தொகுதியில் 29 தொகுதியில் தேமுதிக வென்றது. ஆனால் இதில் தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் குறைந்தது. இந்த தேர்தலில் தேமுதிக 7.9% வாக்குகளை மட்டுமே பெற்றது.

    2014 தேர்தல்

    2014 தேர்தல்

    2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் தேமுதிக, பாஜக, பாமக, மதிமுக, கொங்கு மக்கள் தேசிய கட்சி கூட்டணி வைத்து போட்டியிட்டது. ஆனால் 40 தொகுதியில் 14ல் போட்டியிட்ட தேமுதிக ஒன்றில் கூட வெல்லவில்லை. மிக மோசமான தோல்வியை தழுவியது. இதன் வாக்கு சதவிகிதமும் 5.1% ஆக குறைந்தது.

    2016 சட்டமன்ற தேர்தல்

    2016 சட்டமன்ற தேர்தல்

    2016 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் தேமுதிக இடம்பிடித்தது. சிபிஐ, சிபிஎம், மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால் தேமுதிக இதிலும் தோல்வியை தழுவியது. இந்த தேர்தலில் ஒரு தொகுதியில் கூட தேமுதிக வெல்லவில்லை. இதில் வெறும் 2.41% வாக்குகளை மட்டுமே தேமுதிக பெற்றது.

    எப்படி மோசம்

    எப்படி மோசம்

    கடந்த தேர்தல்களின்படி பார்த்தால் தேமுதிக

    2006 சட்டமன்ற தேர்தல் - 8.38% வாக்கு

    2014 லோக்சபா தேர்தல் - 10.09% வாக்கு

    2011 சட்டமன்ற தேர்தல் - 7.9% வாக்கு

    2014 லோக்சபா தேர்தல் - 5.1% வாக்கு

    2016 சட்டமன்ற தேர்தல் - 2.41% வாக்குகளை பெற்று இருக்கிறது.

    எப்படி

    எப்படி

    இப்படி மோசமாக எல்லா தேர்தலிலும் வரிசையாக தோல்வி அடைந்தும் கூட, குறைந்த சதவிகித வாக்குகளை வாங்கியும் கூட இந்த தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி வைக்கவே எல்லா கட்சியினரும் ஆசைப்பட்டு வருகிறார்கள். பிரதான கட்சிகள் எல்லாம் தேமுதிகவுடன் கூட்டணி வைக்கவே தீவிரமாக இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்பதுதான் புரியாத புதிராகவே உள்ளது. விஜயகாந்த் என்ற தனிப்பட்ட நபருக்கு இருக்கும் புகழே கூட இதற்கு காரணமாக இருக்கலாம்.

    English summary
    Alliances talks clearly show that DMDK is still a Major party in Tamilnadu even after lose and lose.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X