சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

5.5 கோடி கடன் பாக்கிக்காக ரூ.100 கோடி சொத்துக்கள் ஏலம்... விஜயகாந்துக்கு இந்த நிலை வந்தது ஏன்?

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை: வாங்கிய கடனுக்காக ஏலத்துக்கு வந்த விஜயகாந்தின் சொத்து..! பரபரப்பு தகவல்கள்

    சென்னை: விஜயகாந்தின் கடன்பாக்கி என்பது 5.5 கோடி கடதான் அதற்காக100 கோடி சொத்துக்களை ஏலம் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன. என்பது தெரியாமல் தேமுதிக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விஜயகாந்துக்கு தெரிந்தே இந்த தவறு நடந்ததா அல்லது அவரது கவனத்துக்கு ஏல விவகாரம் வரவில்லையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வைத்துள்ள 5 கோடி 52 லட்சத்து 73 ஆயிரத்து 825 ரூபாய் கடன் பாக்கி மற்றும் வட்டி மற்றும் இதர பாக்கிகள் ஆகியவறுக்காக அவரது சொத்துக்களை ஏலத்துக்குவிட இந்தியன் ஓவர்சிஸ் வங்கி முடிவு செய்துள்ளது.

    இதற்காக தினசரி நாளிதழ்களில் இன்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டுள்ளது.

    ஏலத்திற்கு வந்த விஜயகாந்த்தின் சொத்துக்கள்.. தேமுதிகவினர் பேரதிர்ச்சி!ஏலத்திற்கு வந்த விஜயகாந்த்தின் சொத்துக்கள்.. தேமுதிகவினர் பேரதிர்ச்சி!

    சாலி கிராமவீடு

    சாலி கிராமவீடு

    அதில் விஜயகாந்தின் சாலி கிராம வீடு மற்றும் மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் கல்லூரி ஆகியவற்றை ஏலம் விடப்போவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது.

    5.5 கோடி கடனுக்காக

    5.5 கோடி கடனுக்காக

    இதில் மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் கல்லூரிக்கு குறைந்தபட்ச கேட்பு விலையாக 92 கோடியோ 5லட்சத்து 5 ஆயிரத்து 51 ரூபாயாகவும், சாலிகிராமம் வீட்டுக்கு குறைந்த பட்ச கேட்பு தொகையாக 3 கோடியே 4லட்சத்து 34 ஆயிரத்து 344 ரூபாய் ஆகவும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்ணயித்துள்ளது. இதன்படி பார்க்கையில் சுமார் ரூபாய் 100 கோடி சொத்துக்களை வெறும் 5.5. கோடிரூபாய் கடனுக்காக ஏலம் விடும் நிலைமைக்கு செல்ல வேண்டிய நிலைமைக்கு என்ன காரணம் என்று தொண்டர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    கவனத்துக்கு வரவில்லையா

    கவனத்துக்கு வரவில்லையா

    வெறும் 5.5 கோடி ரூபாய் கடன் பாக்கி என்பது விஜயகாந்தால் எளிதாக முடியும் என்பதால் ஏன் ஏலத்துக்கு வ்ந்தது என்றும் ஏலத்துக்கு வரும் விஷயம் விஜயகாந்தின் கவனத்துக்கு வரவில்லையா என்பது ஆச்சர்யமாக இருப்பதாக தேமுதிக தொண்டர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    விஜயகாந்துக்கு இப்படி ஒருநிலை

    விஜயகாந்துக்கு இப்படி ஒருநிலை

    ஏழைகளுக்கு வாரி வாரி உதவிகளை வழங்கிய விஜயகாந்தின் சொத்துக்கள் இன்று பொதுவெளியில் ஏலம் விடப்படப்போவதாக செய்திதாளர்களில் வெளியான அறிவிப்பு நிச்சயம் பலரையும் கலங்க வைத்துள்ளது. விஜயகாந்துக்கு இப்படி ஒரு நிலையா என்றும் பலர் வேதனை தெரிவித்து வருகிறார்கள்.

    English summary
    why dmdk leader vijayakanth rs.100 crore properties include house and collage to be actioned due to not pay the amount of RS.5.5 core to iob bank loan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X