சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினியை விடுங்க.. ஸ்டாலினிடமிருந்து கமலுக்கு அழைப்பு போயிருக்கே!

கமல், ரஜினிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது எதற்காக?

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினியை விடுங்க... ஸ்டாலினிடமிருந்து கமலுக்கு அழைப்பு போயிருக்கே ஏன்?

கமல் கட்சி தொடங்கிய ஆரம்ப காலத்தில் இருந்தே திமுகவுடன் ஒன்று சேர காத்திருந்தார். அதேபோல, திமுக நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டங்களுக்கும் தன்னை அழைப்பார்கள் என்றும் எதிர்பார்த்தார். இதில் எதுவுமே நடக்கவில்லை.

திமுக கண்டுகொள்ளாததை பார்த்து பொறுமை இழந்த கமல், "திமுக, காங்கிரஸ் கூட்டணி உடைய கூடிய வாய்ப்பு உண்டு. அப்படி கூட்டணி உடையும் பட்சத்தில் வரும் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் இணைந்து போட்டியிடும் என்று சொல்லி அதிர வைத்தார்.

மேகதாது விவகாரம்

மேகதாது விவகாரம்

கூடவே, திமுகவுடன் கூட்டணி இல்லை என்றும் தெளிவாக சொல்லி விட்டார். அதனால்தானோ என்னவோ, ஸ்டாலின் கூட்டிய மேகதாது விவகாரம் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்திற்கு கூட கமலுக்கு அழைப்பு விடுக்கவில்லை. எனினும் தேர்தல் கூட்டணிக்காக இப்போது கமலை திமுக, அதிமுக தவிர பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் பக்கம் இழுக்க வியூகம் அமைத்து வருகிறார்கள்.

அரவணைப்பா?

அரவணைப்பா?

இந்த நேரத்தில் ஸ்டாலின் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பை கமலுக்கு விடுத்துள்ளார். ஒருவேளை கமலை மற்ற கட்சிகள் வளைத்து போடும் முயற்சியை அறிந்து, தன் முடிவிலிருந்து திமுக தலைமை மனம் மாறி கமலை அரவணைத்துகொள்ள முடிவு செய்துள்ளதா? அல்லது கட்சி தலைவர் என்ற முறையில் அழைப்பு விடுத்துள்ளதா என தெரியவில்லை.

முரசொலி தலையங்கம்

முரசொலி தலையங்கம்

இதேதான் ரஜினியும். உள்ளுக்குள்ளே புகைந்து கிடந்தது, முரசொலி தலையங்கம் மூலம் வெடித்து சிதறியது. அப்போதிலிருந்தே திமுக - ரஜினி மோதல் வலுக்க ஆரம்பித்தது. இந்நிலையில் இவருக்கும் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் இப்படி இருவரையும் எதிரும் புதிருமாக வைத்திருந்தாலும் திமுக அழைத்திருப்பதில் வேறு ஒரு காரணம் புதைந்துள்ளது.

நேரடி பாசம்

நேரடி பாசம்

ரஜினி - கமல் இருவருமே அரசியலையும் தாண்டி கருணாநிதியை நேசித்தவர்கள். (கருணாநிதிக்காவே அரசியல் பக்கம் வராமல் இருந்தவர்கள் என்ற பேச்சும் உண்டு) நிறைய மரியாதை வைத்தவர்கள். அரசியல் வாழ்வு என்பது ரஜினி, கமலுக்கு இப்போதுதான் தொடங்கினாலும் 40 வருடங்களுக்கு மேலாக கருணாநிதியிடம் பாசத்தை நேரிடையாகவே பெற்றவர்கள். எனவே கண்டிப்பாக இந்த விஷயத்துக்காகவே அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம் இந்த அழைப்பும் சிலை திறப்பும்.. வேறு ஏதாவது குறியீட்டை காட்டுகிறதா என்று.

English summary
MK Stalin called for Rajnikanth and MNM Kamalhasan What is the reason
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X