சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்து திமுக.. காஷ்மீருக்காக ஏன் டெல்லிக்கு வந்து போராடணும்.. விசாரணையில் குதிக்கும் பாஜக!

திமுகவின் போராட்டத்துக்கு என்ன காரணம் என்று பாஜக ஆராய்ந்து வருகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுக பின் திரண்ட 13 கட்சிகள்.. காஷ்மீருக்காக டெல்லியில் போராட்டம்- வீடியோ

    சென்னை: தமிழ்நாட்டில் இருக்கிற திமுக, காஷ்மீர் விவகாரத்துக்காக டெல்லியில் வந்து ஏன் போராடணும்? இதற்கு ஏதாவது பின்னணி உள்ளதா என்று விசாரிக்க பாஜக தலைமை உளவுத்துறையை முடுக்கி விட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு 70 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த வாரம் நீக்கி நாடாளுமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டது.

    எதிர்க்கட்சிகள் இதை கடுமையாக எதிர்த்தன.. கண்டனம் தெரிவித்தன.. எல்லாமே வெறும் அறிக்கைகளாக இருந்தநிலையில், இறங்கி போராட துணிந்தது திமுகதான். ஆரம்பத்தில் இருந்தே இந்த மசோதாவை எதிர்த்து வந்ததுடன், அதன் தீவிரத்தை வெளிப்படுத்தவும் டெல்லியில் போராட்டம் நடத்தியது.

    "எங்கள் அண்ணா".. சீக்கிரம் நல்லபடியா வாங்க "கேப்டன்".. கோவில் கோவிலாக கும்பிடும் தொண்டர்கள்!

    செய்திகள்

    செய்திகள்

    திமுக எம்பிக்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டம் டிஆர்பாலு தலைமையில் நடந்து முடிந்தது. பாகிஸ்தான் ரேடியோவில்கூட திமுகவின் பெயர் அடிபடும் அளவுக்கு இந்த ஆர்ப்பாட்டம் பாப்புலர் ஆனது. அது மட்டுமில்லை.. "2019 ம் ஆண்டு தேர்தலில் 3வது பெரிய கட்சியாக வெற்றி பெற்ற திமுக, மோடி அரசின் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவுக்கு எதிராக போராட்டம்" என்று அறிவித்தது பாஜகவுக்கு எரிச்சலைதான் தந்ததாக சொல்கிறார்கள்.

    முழக்கம்

    முழக்கம்

    "ஜம்மு-காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்" என்ற முழக்கங்களை முன்வைத்து திமுக எம்பிக்கள் உசத்தி முழக்கமிடவும், பாஜக தலைமையே மிரண்டு போனதாக கூறப்படுகிறது.

    திமுக

    திமுக

    எங்கோ ஒரு மாநிலத்தில் இருக்கும் திமுக, டெல்லியில் வந்து போராட வேண்டிய அவசியம் என்ன? அதிலும் சொந்த மாநில பிரச்சனையை முன்வைத்து போராடாமல், காஷ்மீர் விஷயத்துக்கு வரிந்து கட்டிக் கொண்டு வருவது ஏன் என்ற பல குழப்பங்களையும் மத்திய அரசுக்கு ஏற்படுத்தியது.

    அடிநாதம்

    அடிநாதம்

    பாஜக அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை ஆழமாக பதிய வைக்க வேண்டும் என்பதற்காக திமுக இந்த காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்ததா அல்லது திமுக சிறுபான்மையின மக்களின் கட்சி என்பதை பாகிஸ்தான் விவகாரத்தில் புரிய வைக்க முயற்சி செய்ததா என்று நமக்கு தெளிவாக தெரியவில்லை. ஆனால் இந்த போராட்டம், பாஜக தரப்பின் அடிநாதத்தை அசைத்து பார்த்துள்ளதாகவே தெரிகிறது.

    டெல்லி

    டெல்லி

    செய்தி வெளியாகும் அளவுக்கு பாகிஸ்தானில் இருந்து திமுகவுக்கு ஏதாவது தொடர்பு உள்ளதா, இப்படி டெல்லியில் வந்து காஷ்மீரத்துக்கு தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்தியது ஏன், என்பது குறித்தெல்லாம் விசாரிக்கும்படி உளவுத்துறையை பாஜக தலைமை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் கசிகின்றன.

    அரசியல் மூவ்

    அரசியல் மூவ்

    பாஜக தலைமை இப்படி செயல்பாட்டினை எடுக்கும் என்பதும் திமுகவுக்கு முன்பேயே தெரிந்திருக்கவே செய்யும் என்பதில் சந்தேகமும் இல்லை. ஆக மொத்தம்.. சர்வதேச அளவில் திமுகவின் அரசியல் நகர்ந்து செல்கிறது என்று மட்டும் தெரிகிறது.

    English summary
    It is said that, The BJP is investigating what caused the DMK's struggle on Kashmir issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X