சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாடு விடுதலைக்குப் பின்னர் தேசதுரோக வழக்கில் தண்டிக்கப்பட்ட முதல் நபர் நான்.... வைகோ

Google Oneindia Tamil News

Recommended Video

    Vaiko Pressmeet : ராஜ்ய சபா சீட்.. ஸ்டாலினிடம் சொன்னதே நான் : வைகோ கலகல

    திண்டுக்கல்: நாடு விடுதலைக்குப் பின்னர் தேசதுரோக வழக்கில் தண்டிக்கப்பட்ட முதல்நபர் தாம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

    திண்டுக்கல்லில் இன்று செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:

    நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் என்னோடு தொடர்புகொண்டு பேசினார். 'நீங்கள் மாநிலங்கள் அவை உறுப்பினராகச் செல்வதற்கு விருப்பம் இருந்தால், நீங்கள் வேட்புமனு தாக்கல் செய்வதாக இருந்தால், மாநிலங்களவை உறுப்பினருக்கான வாய்ப்பு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வழங்கப்படும் என்று சொன்னார்.

    மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்துச் சகோதரர்களும் நான் மாநிலங்கள் அவைக்குச் செல்ல வேண்டும் என்று ஒட்டுமொத்தமாக விரும்பியதன் பேரில், அதனை நான் ஏற்றுக்கொண்டேன். ஆக, நான் போட்டியிடுவதாக இருந்தால்தான் ஒரு மக்கள் அவைத் தொகுதி, ஒரு மாநிலங்கள் அவை இடம் என்பது, மாநிலங்கள் அவை உறுப்பினர் இடம்; இல்லையேல் பேச்சுவார்த்தை வேறு விதமாகச் செல்வதற்கான வாய்ப்பு இருந்தது.

    நான் காமாட்சி அம்மன் பேசறேன்.. விடுதலை கிடைச்சிடுச்சு.. பாவா வந்தாதான் வருவேன்.. நிர்மலாதேவி ஆவேசம் நான் காமாட்சி அம்மன் பேசறேன்.. விடுதலை கிடைச்சிடுச்சு.. பாவா வந்தாதான் வருவேன்.. நிர்மலாதேவி ஆவேசம்

    விடுதலைக்கு முன்னர் தண்டனை

    விடுதலைக்கு முன்னர் தண்டனை

    இது எழுதப்படாத ஒப்பந்தம். எனவே, தேர்தல் உடன்பாட்டில் இதை நாங்கள் குறிப்பிடவில்லை. இந்த நிலையில், என் மீது 124எ பிரிவின் கீழ் தேசத் துரோக வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தண்டனை வராது என்று நான் நம்பியது உண்மை. காரணம், இந்திய விடுதலைக்கு முன்பு, மகாத்மா காந்தி அவர்களும், பாலகங்காதர திலகர் அவர்களும் இதே பிரிவின் கீழ் தண்டிக்கப்பட்டார்கள். திலகர் இரண்டு முறை தண்டிக்கப்பட்டு, இரண்டாவது முறை ஆறு ஆண்டுகள், பர்மாவில் மாண்டலே சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    நீக்க விரும்பிய நேரு

    நீக்க விரும்பிய நேரு

    பண்டித ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட அத்தனைத் தலைவர்களும், பிரித்தானிய ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட இந்தக் கொடூரமான சட்டப்பிரிவு நீக்கப்பட வேண்டும் என்று கருத்துச் சொன்னார்கள். சுதந்தரத்திற்குப் பிறகும்கூட ஒரு கட்டத்தில் நேரு அவர்கள் சொன்னார்கள். ஆனால் நீக்கப்படவில்லை.

    தேசதுரோக வழக்குகளில் விடுதலை

    தேசதுரோக வழக்குகளில் விடுதலை

    சட்ட மாற்றங்களைப் பற்றி ஒரு ஆணையம் பரிந்துரை செய்கின்றபோதுகூட, ராஜதுரோகக் குற்றச்சாட்டு என்கின்ற 124எ என்பது நீக்கப்பட வேண்டும் என்றுதான் சொன்னார்கள். நீக்கப்படவில்லை. ஆனால், இந்திய விடுதலைக்குப் பிறகு, இன்றுவரை, இந்தியாவில் இந்தச் சட்டப் பிரிவின் கீழ் யாரும் தண்டிக்கப்படவில்லை. பல பேர் மீது வழக்குகள் போடப்பட்டன. அந்த வழக்குகள் எல்லாம் விடுதலை ஆயிற்று.

    விடுதலைக்கு பின் முதல் தண்டனை

    விடுதலைக்கு பின் முதல் தண்டனை

    ஆனால் என் மீதான வழக்கில், 5ஆம் தேதி அன்று தீர்ப்பு வழங்கப்பட்ட தீர்ப்பில், எனக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பின்னர், பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் நான்தான். அதேபோல, விடுதலைக்குப் பிறகு, தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் தண்டிக்கப்பட்டவனாகவும் நான் இருக்கிறேன். நான் என்ன தேசத் துரோகம் செய்தேன்?

    அவர்கள் எல்லாம் தேசபக்தர்கள்

    அவர்கள் எல்லாம் தேசபக்தர்கள்

    மகாத்மா காந்தியின் உருவத்தைப் போன்று செய்து, அதைத் துப்பாக்கியால் சுட்டவர்கள், அந்த உருவத்தைக் காலில் போட்டு மிதித்துத் தீ வைத்துக் கொளுத்தியவர்கள், தேச பக்தர்களாக இருக்கின்றார்கள். காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் விநாயக கோட்சேவுக்கு ஊருக்கு ஊர் சிலை எழுப்ப வேண்டும் என்று சொல்பவர்கள் தேச பக்தர்களாக இருக்கின்றார்கள்.

    யார் போட்டியிட தடை

    யார் போட்டியிட தடை

    நான் வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 8(1) பிரிவின் கீழ் வரக்கூடிய குறிப்பிட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ், ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவின் கீழ், போதைப் பொருள் சம்பந்தப்பட்ட பிரிவின் கீழ், பெண்களுக்குக் கேடு செய்யும் பிரிவுகளின் கீழ், மதப் பிரச்சினைகளின் மூலமாக வரக்கூடிய பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்பட்டாலோ, வெறும் அபராதம் ஏற்பட்டலோகூட அவர்கள் போட்டியிட முடியாது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 8 பிரிவு 2இன் கீழ் இந்தந்தப் பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டாலும் அவர்கள் போட்டியிட முடியாது. சில வழக்குகளில் 100 ரூபாய் அபராதம் விதித்து இருந்தாலே போட்டியிட முடியாது.

    வேட்புமனு ஏற்கப்படும்

    வேட்புமனு ஏற்கப்படும்

    மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 8, 3ஆவது பிரிவு என்பது எந்தக் குற்றச்சாட்டாக இருந்தாலும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அதற்கு மேல் தண்டிக்கப்பட்டால் போட்டியிட முடியாது. இப்படித்தான் சட்டம் மிகத் தெளிவாக இருக்கின்றது. எனவே என்னுடைய வேட்புமனு நிச்சமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றேன்.

    தேர்தல் ஆணையத்திடம் கருத்து

    தேர்தல் ஆணையத்திடம் கருத்து

    இருந்தபோதிலும், இந்தத் தீர்ப்பு வருவதற்கு முன்பே, நான் ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினேன். ‘நீங்கள் நிற்பதாக இருந்தால்தான் மாநிலங்கள் அவை உறுப்பினர் இடம் என்ற நிபந்தனையின் பேரில் நீங்கள் தந்தீர்கள். ஒருவேளை நான் தண்டிக்கப்பட்டு, அதனால் போட்டியிட முடியாத நிலைமை ஏற்படுமானால், அதற்கு உரிய மாற்று ஏற்பாட்டை நீங்கள் செய்துகொள்ளுங்கள்' என்று, நான்தான் ஸ்டாலினிடம் வலியுறுத்திக் கூறினேன். இப்பொழுது, என்னுடைய வேட்பு மனுவை ஏற்பது குறித்துத் தேர்தல் ஆணையத்திடம் கருத்துக் கேட்பதாக ஒரு செய்தி உலவுகின்றது. அது உண்மையா? பொய்யா? என்று எனக்குத் தெரியாது.

    இளங்கோ மனுத்தாக்கல்

    இளங்கோ மனுத்தாக்கல்

    இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், என்னுடைய வேட்புமனு உறுதியாக ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை இருந்தபோதிலும்கூட, முன்னெச்சரிக்கையாக என்.ஆர்.இளங்கோ அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்கின்றார்கள். நாளைய தினம் மனு பரிசீலனை நடைபெறுகின்றது. நான் மறுபரிசீலனைக்குப் போக முடியாது. காரணம், அதே நீதிமன்றத்தில் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் இவர்களுக்கான வழக்கு விசாரிக்கக்கூடிய மாண்புமிகு நீதிபதி சாந்தி அவர்கள் நீதிபதியாக இருக்கக்கூடிய நீதிமன்றத்தில், மற்றொரு வழக்கு விசாரணை நடைபெறுகின்றது. எனவே, அன்று காலை 10.30 மணிக்கு அந்த நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டும். எனவே, வேட்பு மனு பரிசீலனைக்கு என்னுடைய பிரதிநிதியாக வழக்கறிஞர் தேவதாஸ் அவர்கள் செல்வார்கள். அந்தப் பரிசீலனையில் என்னுடைய மனு ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்புகின்றேன். ஏற்றுக்கொள்ளப்பட்டால், அதற்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்.ஆர்.இளங்கோ அவர்கள் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றுக் கொள்வார் என்று தகவல் சொல்லப்படுகின்றது.

    இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

    English summary
    MDMK General Secretary Vaiko has explained that the DMK filed its one more candidate for the Rajyasabha Election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X