சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆ.. ஊன்னா "அவங்களை" போய் பார்க்கிறாரே.. என்னங்க இது.. மாஜி மீது பாய்ந்த எடப்பாடி.. அந்த "பயம்"

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவை சேர்ந்த மாஜி அமைச்சர் ஒருவர் மீது எடப்பாடி அப்செட்டில் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"உச்சு கொட்டும் நேரத்துல உட்கட்சி பூசல் தொட்டவளே" என்று சொல்லும் அளவிற்குத்தான் அதிமுகவிற்குள் உட்கட்சி பூசல் உச்சம் தொட்டு உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறந்த போது அதிமுகவில் நிலவிய உட்கட்சி மோதலை விட உச்சகட்ட மோதல் தற்போது கட்சிக்குள் நிலவிக்கொண்டு இருக்கிறது.

அதிமுக மோதலில் பாஜகவும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஜெயலலிதா மரணத்தின் போது பாஜகவின் சில டாப் தலைகள் அவரின் உடலுக்கு அருகிலேயே நின்றதில் தொடங்கி பாஜக இப்போது வரை கட்சியின் உட்கட்சி மோதலில் முக்கிய அங்கம் வகித்து முடிவுகளை எடுப்பதில் தலையிட்டு வருகிறது.

சமீபத்தில் அமித் ஷாவை ஓ பன்னீர்செல்வம் சந்தித்தது.. ஆளுநர் ஆர். என் ரவியை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசியது என்று பல விஷயங்களில் அதிமுகவின் நேரடி தலையீடு உள்ளது.

“ஹேப்பி மோடில்” ஓபிஎஸ்.. கிண்டியிலிருந்து கால்! இனிதான் தரமான சம்பவம் - அதிமுக மாஜி கொடுத்த “க்ளூ” “ஹேப்பி மோடில்” ஓபிஎஸ்.. கிண்டியிலிருந்து கால்! இனிதான் தரமான சம்பவம் - அதிமுக மாஜி கொடுத்த “க்ளூ”

மாஜி அமைச்சர்

மாஜி அமைச்சர்

இந்த நிலையில்தான் மாஜி அமைச்சர் ஒருவர் திடீரென பாஜகவுடன் மிகவும் நெருக்கம் காட்டி வருகிறார். அந்த அதிமுக மாஜி அமைச்சர் மீது தமிழ்நாடு அரசு பல்வேறு வழக்குகளை போட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட ரெய்டுகள் அவரின் வீட்டில் நடைபெற்றது. ரெய்டு காரணமாக இவர் மீது வழக்குகள் போடப்பட்டன. அதோடு இல்லாமல் வேறு சில வழக்குகளும் அந்த மாஜி அமைச்சர் மீது உள்ளன. இந்த மாஜி அமைச்சர் அதிமுகவில் எடப்பாடி அணியில்தான் இருக்கிறார். ஆனாலும் எடப்பாடிக்கு நெருக்கம் கிடையாது. ஓ பன்னீர்செல்வத்திற்கு மறைமுக சப்போர்ட் என்றால் அதுவும் கிடையாது.

பாஜக

பாஜக

இந்த நிலையில்தான் தற்போது அந்த மாஜி அமைச்சர் பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா தமிழ்நாடு வந்து இருந்தார். அப்போது மதுரையில் இந்த மாஜி அமைச்சர் போய் நட்டாவை போய் சந்தித்தார். அதிமுக தலைகள் யாருமே நட்டாவை போய் சந்திக்காத நிலையில் அந்த மாஜி அமைச்சர் மட்டும் போய் நட்டாவை சந்தித்துவிட்டு வந்தார். அப்போதே எடப்பாடி இவர் மீது அப்செட்டில் இருந்ததாக கூறப்பட்டது. நம்மிடம் கேட்காமல் பாஜக தலைவரை போய்.. அதுவும் தனியாக போய் சந்தித்துவிட்டு வந்து இருக்கிறாரே என்று எடப்பாடி பழனிசாமி அப்செட் ஆனதாக கூறப்படுகிறது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இந்த நிலையில் சமீபத்தில் அந்த மாஜி அமைச்சர் திடீரென டெல்லிக்கு சென்று இருக்கிறார். அந்த மாஜி அடிக்கடி இப்படி டெல்லி செல்ல ஒரு காரணம் இருக்கிறது. அவருக்கு எதிராக சிபிஐ வழக்கும் உள்ளது. தமிழ்நாடு அரசின் வழக்கு இல்லாமல் இன்னொரு பக்கம் டெல்லியிலும் இவருக்கு எதிராக சிபிஐ வழக்கு உள்ளது. இந்த வழக்கில் தற்போது பிடியும் இறுகி வருகிறது. இந்த நிலையில்தான் அதில் இருந்து எப்படியாவது விடுதலை பெற வேண்டும் என்று அந்த மாஜி அமைச்சர் தீவிரமாக முயன்று வருகிறார். இதற்காகவே சமீபத்தில் அவர் டெல்லிக்கு சென்றார்.

எடப்பாடி அப்செட்

எடப்பாடி அப்செட்

ஆனால் இதை எடப்பாடி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. எங்கே இவர் பாஜகவில் இணைய போகிறாரோ என்ற பயம் எடப்பாடிக்கு எழுந்து உள்ளதாம். அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவுகிறது. இதில் இரண்டு தலைவர்கள் பக்கமும் செல்ல விரும்பாத தலைவர்கள் சிலர் கட்சியை விட்டு வெளியே போய்விடலாமா என்று பார்த்துக்கொண்டு இருக்கிறார்களாம். எங்கே அந்த லிஸ்டில் இந்த மூத்த மாஜி அமைச்சரும் இணைந்து விடுவாரோ என்ற கேள்வி எடப்பாடிக்கு எழுந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதை பற்றி விசாரிக்கும்படியம் நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டு இருக்கிறாராம்.

என்ன நடக்கிறது?

என்ன நடக்கிறது?

என்ன அந்த மாஜி அடிக்கடி டெல்லி பக்கம் செல்கிறார். ஆ.. ஊன்னா பாஜக தலைவர்களை போய் பார்க்கிறார். ஏன் பாஜக தலைவர்களுடன் இவ்வளவு நெருக்கம் காட்டுகிறார். பிளான்தான் என்ன? என்னதான் அவர் சங்கதி. அவர் எதுவும் திட்டத்தில் இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பி இருக்கிறாராம். ஆனால் அதிமுக நிர்வாகிகளுக்கே அவரின் திட்டம் என்ன வென்று சரியாக தெரியவில்லை என்கிறார்கள் விவரம் அறிந்த ரத்தத்தின் ரத்தங்கள்!

English summary
Why does Edappadi Palanisamy not happy with former AIADMK minister? Is he close with Delhi BJP?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X