"வீட்டோ பவர்".. எடப்பாடி கையில் எடுத்த பெரிய அஸ்திரம்.. "இதுமட்டும்" நடந்தால்.. மொத்த கேமும் ஓவர்!
சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்திற்கு உயர் நீதிமன்றம் வீட்டோ அதிகாரம் வழங்கி இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார். இதற்கு எதிராக அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு, பொதுக்குழு மீண்டும் நடப்பதற்கு எதிராக எதிராக வழக்கு என்று பல வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு வழக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு ஆகும்.
என் கேரக்டரே இது தான்! எதைப்பற்றியும் கவலைப்படும் ஆள் நானில்லை -அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கடந்து பொதுக்குழுவிற்கு முன்பாக சென்னை உயர் பொதுக்குழுவிற்கு பல கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது. 23 மசோதாக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மசோதாக்கள்
ஏற்கனவே ஒருங்கிணைப்பாளரின் அனுமதி பெற்ற 23 மசோதாக்களுக்கு மேல்.வேறு மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என்றால் அதற்கு ஒருங்கிணைப்பாளர் அனுமதி வேண்டும். ஒருங்கிணைப்பாளர் வரைவு மசோதாவில் கையெழுத்து போட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு காரணமாகவே கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.

வழக்கு தொடுப்பு
தற்போது இந்த தீர்ப்பிற்கு எதிராகவே உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி ஆதரவாளர்கள் வழக்கு தொடுத்துள்ளனர். நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட 10 நிர்வாகிகள் தனி தனியாக வழக்கு தொடுத்துள்ளனர். ஏற்கனவே இதில் யார் வழக்கு தொடுத்தாலும் தன்னுடைய கருத்தை கேட்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் கேவியட் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுக்கள் மீதான விசாரணை விரைவில் உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் விசாரணை
கடந்த உயர் நீதிமன்ற தீர்ப்பு.. எடப்பாடி தரப்பிற்கு முக்கியமான ஒரு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி, பொதுக்குழுவில் எந்த தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றாலும் அதற்கு ஒருங்கிணைப்பாளரிடம் அனுமதி பெற வேண்டும். அதாவது வரைவு தீர்மானத்தை ஒருங்கிணைப்பாளரிடம் கொடுத்து அனுமதி பெற வேண்டும். இதுதான் உயர் நீதிமன்ற தீர்ப்பு. இந்த தீர்ப்பு காரணமாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால் அதற்கு ஓ பன்னீர்செல்வம் அனுமதி வேண்டும்.

வீட்டோ அதிகாரம்
கிட்டத்தட்ட உயர் நீதிமன்ற தீர்ப்பு தற்போது ஓ பன்னீர்செல்வத்திற்கு வீட்டோ அதிகாரத்தை கொடுத்துள்ளது. அதாவது என்னதான் தீர்மானம் கொண்டு வந்தாலும்.. அது ஓ பன்னீர்செல்வம் வழியாகாவே செல்ல வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உச்சபட்ச அதிகாரத்தை கொடுத்துள்ளது. இதைத்தான் எதிர்த்து எடப்பாடி மனு தாக்கல் செய்துள்ளார். 378 பக்கங்கள் கொண்ட மனுவை எடப்பாடி தாக்கல் செய்துள்ளார்.

நீக்க வேண்டும்
இதில்தான் இந்த வீட்டோ அதிகாரத்தை நீக்க வேண்டும் என்று எடப்பாடி கோரிக்கை வைத்துள்ளார். கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளருக்கு இப்படி அதிகாரமே இல்லை. பொதுக்குழுவிற்கே உட்சபட்ச அதிகாரம் என்று எடப்பாடி பழனிசாமி தனது மனுவில் கூறியுள்ளார். இந்த தீர்ப்பு மூலம் ஓ பன்னீர்செல்வத்திற்கு இருக்கும் தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரத்தை பறிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான ரத்தத்தின் ரத்தங்கள். அது மட்டும் நடந்தால் எடப்பாடிதான் பொதுச்செயலாளர்!

பொதுச்செயலாளர்
உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் பட்சத்தில்.. ஓ பன்னீர்செல்வத்தின் அனுமதி இல்லாமலே தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். அதாவது தனித்தீர்மானம் கொண்டு வந்து பொதுச்செயலாளர் ஆகும் தீர்மானம் நிறைவேற்ற முடியும். இதற்காகவே ஓ பன்னீர்செல்வத்திற்கு உயர் நீதிமன்றம் கொடுத்துள்ள வீட்டோ அதிகாரத்திற்கு எதிராக எடப்பாடி மனுதாக்கல் செய்துள்ளார். இந்த தீர்ப்பை பொறுத்தே அடுத்த பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் தீர்மானம் வருமா, வராதா என்பது தெரிய வரும்.