சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அசிங்கம்.. எதுக்கு வீரரின் மனைவியை இழுத்தீங்க? அருவெறுப்பாக பேசிய கவாஸ்கர்! கமெண்ட்ரியில் பரபரப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: நேற்று ராஜஸ்தான் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான போட்டியில் கவாஸ்கர் அடித்த கமெண்ட் ஒன்று பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.

நேற்று சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. சிஎஸ்கே அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடிக்க கூடாது என்பதற்காக ஆடியது.

ராஜஸ்தான் அணி எப்படியாவது புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக தீவிரமாக ஆடிக்கொண்டு இருந்தது. நேற்று சிஎஸ்கே அணி பேட்டிங்கில் மொயின் அலி அதிரடியால் நல்ல தொடக்கம் கொடுத்தாலும் பின்னர் சொதப்பியது.

அஸ்வின் செய்த அந்த தப்பு.. கேகேஆர் பைனலுக்குள் சென்றது எப்படி.. கவாஸ்கர் ஆதங்கம் அஸ்வின் செய்த அந்த தப்பு.. கேகேஆர் பைனலுக்குள் சென்றது எப்படி.. கவாஸ்கர் ஆதங்கம்

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

200 ரன்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட சிஎஸ்கே அணி வெறும் 150/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. 57 பந்தில் 3 சிக்ஸ், 13 பவுண்டரி என்று 93 ரன்களை மொயின் அலி எடுத்தார். மற்ற வீரர்கள் பெரிதாக சிஎஸ்கே அணியில் ஆடவில்லை. அதன்பின் இறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே ஜோஸ் பட்லர் விக்கெட்டை இழந்தது. ஆனால் இன்னொரு ஓப்பனர் ஜெய்ஷ்வால் அதிரடியாக ஆடினார்.

சிஎஸ்கே தோல்வி

சிஎஸ்கே தோல்வி

இவர் 44 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்ஸ் உட்பட 59 ரன்கள் எடுத்தார். பின்னர் சஞ்சு சாம்சன், படிக்கல் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். இதனால் ராஜஸ்தான் எங்கே தோல்வி அடைந்து விடுமோ என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அஸ்வின் வந்து 23 பந்தில் அதிரடி காட்டி 40 ரன்கள் எடுத்தார். 3 சிக்ஸ், 2 பவுண்டரிகளை அடித்து ராஜஸ்தான் அணியை வெற்றி பெற செய்தார்.

ஹெட்மயர்

ஹெட்மயர்

இதில் அஸ்வினுடன் சில நிமிடங்கள் ஹெட்மயர் களத்தில் இருந்தார். 7 பந்துகள் பிடித்த அவர் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். இவர் பேட்டிங் செய்த போது கவாஸ்கர் செய்த கமெண்ட்ரிதான் கடுமையான சர்ச்சைகளை சந்தித்தது. அப்போது.. ஹெட்மயர் மனைவிக்கு இப்போதுதான் டெலிவரி ஆனது.. அவர் மனைவி டெலிவரி செய்துவிட்டார்.. ஹெட்மயர் பேட்டிங்கில் டெலிவரி செய்வாரா என்று பார்க்கலாம் என்று விமர்சனம் செய்தார்.

கவாஸ்கர்

கவாஸ்கர்

கவாஸ்கரின் இந்த கருத்து கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. ஒரு முன்னாள் வீரர் பொறுப்பாக கமெண்ட்ரி செய்ய வேண்டும். இது போன்ற கீழ் தரமான கருத்துக்களை தெரிவிக்க கூடாது. அவர் குழந்தை பிறந்ததால் லீவ் எடுத்தார். திரும்பி வந்துவிட்டார். இப்படி இருக்கையில் கமெண்ட்ரியில் ஏன் அவர் மனைவியை இழுக்க வேண்டும். கொஞ்சம் நிதானமாக பேசுங்கள்.. நீங்கள் பேசுவது அசிங்கமாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் பலர் கவாஸ்கர் கருத்தை விமர்சனம் செய்துள்ளனர்.

கவாஸ்கர் கோலி

கவாஸ்கர் கோலி

இதற்கு முன்பே ஒரு முறை ஐபிஎல் கமெண்ட்ரியில் கவாஸ்கர், கோலி குறித்தும், அவரின் மனைவி நடிகை அனுஷ்கா சர்மா குறித்தும் பேசியது சர்ச்சையானது. கோலி சரியாக பேட்டிங் செய்யவில்லை. அவர் மிக மோசமாக சொதப்பிவிட்டார். லாக்டவுன் நேரத்தில் கோலி சரியாக பயிற்சி செய்யவில்லை. அனுஷ்காவின் பவுலிங்கில் (பந்துகளில்) அவர் பயிற்சி செய்து இருப்பார், என்று கவாஸ்கர் கூறி இருந்தார். இதை கொஞ்சம் டபுள் மீனிங்கில் கவாஸ்கர் குறிப்பிட்டு இருந்தார். இது பெரிய சர்ச்சையான நிலையில் அனுஷ்கா சர்மா இதற்கு அதிரடி பதிலடி கொடுத்தார்.

அனுஷ்கா விமர்சனம்

அனுஷ்கா விமர்சனம்


நீங்கள் அதிரடி கருத்துக்களை தெரிவிக்க நான்தான் கிடைத்தேனா? மிஸ்டர் கவாஸ்கர் நீங்கள் ஒரு லெஜெண்ட் . இந்த கிரிக்கெட் உலகில் நீங்கள் பெரிய உயரத்தில் இருப்பவர். நீங்கள் அப்படி சொல்லிய போது, நான் எப்படி உணர்தேன் என்பதை உங்களிடம் கூறிவிட்டேன்., என்று அனுஷ்கா சர்மா மிகவும் கோபமாக கருத்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் கவாஸ்கர் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

English summary
Why does Gavaskar's commentary in RR vs CSK IPL match create controversy? நேற்று ராஜஸ்தான் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான போட்டியில் கவாஸ்கர் அடித்த கமெண்ட் ஒன்று பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X