சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஈரோட்டை முடக்க ஆலோசனை ஏன்?.. அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: ஈரோட்டை முடக்க ஆலோசனை ஏன் என்பது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

    லாக் டவுன் லிஸ்ட்டில் சென்னை... ஆனால் ஒரு சிக்கல் இருக்கே

    கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 370- க்கும் மேல் உயர்ந்துவிட்டது. அது போல் 6 பேர் உயிரிழந்துவிட்டனர்.

    Why Erode is under lockdown? C Vijayabaskar explains

    தமிழகத்தை பொருத்தமட்டில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் மூன்றாவது நிலையை அடையாமல் இருக்க பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 22ஆம் தேதி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

    இதையடுத்து நேற்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் அந்த ஊரடங்கு இன்று அதிகாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ரயில்கள் உள்ளிட்டவை மார்ச் 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. அது போல் கோயில்கள், கல்லூரிகள், பள்ளிகள், சுற்றுலா தலங்கள், மால்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுவிட்டது.

    கொரோனா- நாடாளுமன்ற கூட்டத் தொடரை இன்றுடன் நிறைவு செய்ய மத்திய அரசு முடிவு? கொரோனா- நாடாளுமன்ற கூட்டத் தொடரை இன்றுடன் நிறைவு செய்ய மத்திய அரசு முடிவு?

    கொரோனாவில் பாதிப்பு தமிழகத்தில் உயர்ந்து கொண்டே வருவதால் காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை முடக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது 3 மாவட்டங்களிலிருந்து வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாது. அது போல் அந்த ஊர்களிலிருந்து மேற்கண்ட 3 மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாது.

    இந்த நிலையில் ஈரோட்டு எதற்காக முடக்கப்படுகிறது என அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ட்விட்டரில் பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர், இதுகுறித்து அமைச்சர் சி விஜயபாஸ்கர் கூறுகையில் ஈரோட்டை முடக்க திட்டம் ஏன் என என்னிடம் ஏராளமானோர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

    தாய்லாந்து நாட்டை சேர்ந்த இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் அவர்கள் பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இப்போது புரிந்திருக்கும் என நம்புகிறேன் என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    English summary
    Why Erode is under lock down? Here are the Minister Vijayabaskar explains
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X