• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

காந்தி ஏன் பிரதமராக நேருவை முன்மொழிந்தார்?.. படேலுக்கும் நேருவுக்கும் இடையே இருந்த உறவு எப்படி?

|

சென்னை: தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி முன்மொழிந்ததால் ஜவஹர்லால் நேரு நாட்டின் முதல் பிரதமரானார். இதனிடையே இரும்பு மனிதர் வல்லபாய் படேல் மற்றும் நேரு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஆழமான நட்பு இருந்தது மறுக்க முடியாத உண்மை என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

சுதந்திரத் திருநாளில் கொரோனாவில் இருந்து விடுதலை அடைய வேண்டும் என்ற உறுதியை மேற்கொள்வோம்: மோடி

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் அன்றைய துணை பிரதமர் வல்லபாய் படேல் ஆகிய இருவர் குறித்து பல்வேறு தகவல்களை பார்த்திருப்போம். அதில் முக்கியமானது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தாக சொல்வார்கள்.

அத்துடன் படேலின் பிரதமர் வாய்ப்பை தட்டி பறித்தவர் நேரு என்றும் சொல்வார்கள். ஆனால் இவை முதல் விஷயம் உண்மை. ஆனால் எதிரிகள் அல்ல என்கிறார்கள். இதேபோல் இரண்டாவது விஷயமான பிரதமர் விவகாரம் உண்மை இல்லை என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

செங்கோட்டையில் நாளை தேசியக் கொடியேற்றி சுதந்திர தின உரையாற்றுகிறார் மோடி

பிரதமரானார் நேரு

பிரதமரானார் நேரு

நேரு, வல்லபாய் படேல் இருவருமே மகாத்மா காந்தியின் சீடர்கள் ஆவர்.. நேருவே பிரதமராக பதவியேற்று நாட்டை வழிநடத்த வேண்டும் என்று மகாத்மா காந்தி விரும்பினார். நேருவின் கண்ணோட்டம், விஷயங்களை அவர் அணுகிய முறை மற்றும் சர்வதேச அளவில் நேருவுக்கு இருந்த அங்கீகாரத்தை கருத்தில் கொண்டே காந்தி இந்த முடிவை எடுத்தாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

நேரு எப்படிப்பட்டவர்

நேரு எப்படிப்பட்டவர்

நேருவிற்கும் படேலுக்கும் பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்ததா என்றால், நிச்சயம் இருவருக்கும் இருந்தது. ஆனால் , நட்புடனே இறுதிவரை செயல்பட்டு வந்தார்கள். எதார்த்தவாதியான இரும்பு மனிதர் வல்லபாய் படேலுக்கும் கனவு காணும் அரசியல்வாதியான நேருவுக்கும் இடையே எப்படிப்பட்ட உறவுகள் இருந்ததை என்பதையும் வரலாற்று ஆய்வாளர்கள் விவரிக்கிறார்கள்.

படேலுக்கு எழுதிய கடிதம்

படேலுக்கு எழுதிய கடிதம்

1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவிற்கு ஆங்கிலேயர்கள் சுதந்திரம் அளித்தனர். அதற்கு 15 நாட்களுக்கு முன்பு அதாவது 1947 ஆகஸ்ட் 1ம் தேதி அன்று படேலுக்கு ஜவஹர்லால் நேரு அமைச்சரவையை எப்படி அமைக்கலாம் என்று ஆலோசனை கேட்டு கடிதம் எழுதினார் மத்திய அமைச்சரவையில் வல்லபாய் படேலை அமைச்சரவையில் சேர வேண்டும் என முறையான அழைப்பு விடுப்பதற்காக இக்கடிதத்தை நேரு எழுதினார். அந்த கடிதத்தில் நீங்கள் நம் அமைச்சரவையின் வலுவான தூண் என்று நேரு குறிப்பிட்டிருக்கிறார்.

சம்பிரதாய நடைமுறை வேண்டாம்

சம்பிரதாய நடைமுறை வேண்டாம்

நேருவின் இந்தக் கடிதத்திற்கு படேல் ஆகஸ்ட் மூன்றாம் தேதியன்று பதில் அனுப்பி இருக்கிறார். படேல் அனுப்பிய கடிதத்தில் ''அமைச்சரவையில் இணைவதற்கான அழைப்பு விடுத்த உங்கள் கடிதத்திற்கு நன்றி. நம் இருவருக்கும் இடையிலான பாசமும் அன்பும் 30 ஆண்டுகளாகத் தொடர்கிறது. நம்மிடையே சம்பிரதாய நடைமுறைகளுக்கு எந்தவிதமான அவசியமும் இல்லை.

  சுதந்திரத்திற்கு பிறகு இந்திய பொருளாதாரம் மோசமான நிலையை எதிர்கொள்கிறது..
  யாராலும் பிரிக்க முடியாது

  யாராலும் பிரிக்க முடியாது

  எனது வாழ்வின் எஞ்சியுள்ள காலம் முழுவதும் உங்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். உங்களைப் போன்ற தியாகத்தை வேறு யாரும் செய்ததில்லை, நாட்டின் லட்சியத்தை நிறைவேற்ற அப்பழுக்கற்ற முழுமையான விசுவாசத்தை காட்டுவேன். நம்முடைய நட்பையும் ஒற்றுமையையும் யாராலும் பிரிக்க முடியாது, சக்தி வாய்ந்த நம்முடைய உறவு வலுவானது. கடிதத்தில் நீங்கள் வெளிப்படுத்திய அன்புக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன்" என்று படேல் கூறுயிருக்கிறார் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறினார்கள்.

  வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Jawaharlal Nehru became the first Prime Minister of the country as proposed by Mahatma Gandhi, the father of the nation. Historians, meanwhile, say that despite differences of opinion between the Iron Man Vallabhbhai Patel and Nehru, there was a deep friendship.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X